தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தாமோதரன்ஸ்ரீ
இடம்:  கோயமுத்தூர் (சின்னியம்பா
பிறந்த தேதி :  07-Aug-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2017
பார்த்தவர்கள்:  3412
புள்ளி:  629

என்னைப் பற்றி...

என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்

1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது

2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.

3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்

என் படைப்புகள்
தாமோதரன்ஸ்ரீ செய்திகள்
தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2022 12:54 pm

அருக்காணியின் ஆடு

அருக்காணி மூக்கை உறிஞ்சினாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்லம்ம என்னாடி அழுகறயா?
க்கும்..என்னாத்துக்கு அழுகோணும்?
ஏண்டி உங்க ஆத்தா அப்படி வஞ்சிட்டு போகுது, எங்க ஆத்தாவா இம்மா நேரத்துக்கு குச்சி எடுத்து வெளுத்திருக்கும்.
சமயம் கிடைத்தால் போதும் இவ இவளோட ஆத்தா புராணத்தை பாட ஆரம்பிச்சிடுவா அருக்காணி நினைத்துக்கொண்டாலும், வெளியே சொல்லவில்லை, அவங்கவங்களுக்கு அவங்க ஆத்தா பெரிசுதான், சொல்லி சிரித்தாள்.
அதுவும் சரிதான்..என்னாத்துக்கு உங்க ஆத்தா அப்படி வையோணும்?
கடுவனை வாய்க்கா தோட்டத்துல மேய வுட்டுட்டேன், அதான் கருப்பன் வந்து ஆத்தாளை மிரட்டிட்டு

மேலும்

அருமை 26-Nov-2022 2:54 pm
தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2022 10:52 am

மறைத்து வைத்து..!

எதையோ
மடியில் மறைத்து
வைத்து

கூட்டம் கூட்டமாய்
ஓடி கொண்டிருக்கும்
மேகங்கள்

அதனை
மறித்து நின்ற
மலைகள்

விளையாட்டாய்
மேகங்களின்
மடியை அவிழ்த்து
விட

மறைத்து வைத்தது
எல்லாமே
கொட்டி போனது
பெரு மழையாய்

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2022 9:53 am

பூலோகம் திரும்பி வந்தால்.!
“நீங்கள் இல்லாமல் உலகம் இல்லை” யாராவது சொன்னால் நம்பி விடாதீர்கள். உலகம் என்றில்லை, நம் குடும்பமே ஆகட்டுமே, இவனாலத்தான் இந்த குடும்பமே ஓடுது, சொல்லிவிட்டால், பெருமையாக நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் போய் விட்டால் எதுவும் நிற்பதுமில்லை, படுப்பதுமில்லை. அதுபாட்டுக்கு தூக்கி போட்டுவிட்டு காலன் ஓடிக்கொண்டேதான் இருக்கிறான். அடடா நாம் இல்லாமல் குடும்பம் எப்படி இருக்கிறது என்று மீண்டும் பார்க்க வந்தால் அவ்வளவுதான்..!
இப்படி பேசிக்கொண்டிருப்பவன் யாருமில்லை, இந்த கதையின் நாயகன்தான்.. இவ்வளவு கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் பேசிக்கொண்டிருக்கும் இடம் கேட்டால் ஆச்சர்

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2022 9:49 am

லஞ்சம்

மடக்கி வைத்த
ரூபாய் தாள்
மறைவாய்
உள்ளங்கையில் வைத்து
சுற்றும் முற்றும்
பார்த்து
முகத்தை
தீவிரமாக்கி
எதிரில் உட்கார்ந்திருந்த
நபரிடம்
அசட்டு சிரிப்புடன்
வச்சுக்குங்க சார்
சொன்னவனை

முறைத்து பார்த்த
எதிரிலிருந்தவன்

இதெல்லாம் அந்த
காலம்..!

மறுத்தவனை
ஆச்சர்யமாய் பார்க்க

இப்பவெல்லாம்
“பேக்கேஜ் சிஸ்டம்”
முடிச்சு குடுத்தா
இவ்வளவு என்றான்
எதிரில் உட்கார்ந்திருந்தவன்

ஓ “காலம்
இதில் கூட
மாறிவிட்டதோ?

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2022 4:00 pm

வீடு

இரவு மட்டுமே
தங்கி
படுக்கையில் உறங்கி

விடிந்தும் விடியா
பொழுதில்
அடித்து பிடித்து
குளித்து கிளம்பி
அவரவர் பணிக்கு
அரக்க பரக்க
சென்று

மீண்டும் இரவு
இருவரும்
திரும்பி படுக்கையில்
படுத்து உறங்கி

இதனால் கிடைக்கும்
வருவாய்
மூன்றில் இரண்டை

இதற்கே
தவணை மூலம்
கட்டி தொலைக்கும்

இந்த பொருளுக்கு
பெயர் என்னவோ
வீடு..!

மேலும்

நன்றி .! இதன் கரு என்னுடையதல்ல . இது ஒரு இலக்கிய கூட்டத்தில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது "வீடு " என்றொரு கவிதை வாசித்ததாக , அப்பொழுது எனக்கு தோன்றிய வார்த்தைகள், நானும் பணியின் இறுதி வரை "வீட்டுக்கு லோன் " கட்டியவன் என்பதால் இது தோன்றியிருக்கலாம் 12-Aug-2022 8:52 am
இந்த பொருளுக்கு பெயர் வீடு..! அடடடடா..... எளிமையாக வீட்டு கடன் மற்றும் அதன் வலி புரியுமாறு எழுதியுள்ள உங்களின் இந்த பதிவிற்கு எவ்வளவு முறை வாழ்த்து சொன்னாலும் பத்தாது, மிகவும் நன்றாக இருக்கு ; வாழ்த்துகள் 11-Aug-2022 5:18 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2022 10:43 am

எங்கும் இசையாய்..!

ஆவேசமாய் வீசிய
காற்று
மூங்கில் குழலுக்குள்
நுழைந்த பின்
துளையின் வழியாய்
வெளியில் வந்து
இசையாய் காதை
வருடுகிறது

பக்கவாத்தியமாய்
நானிருக்கிறேன்
குளத்து நீரின்
அலைகள்
கரையில் மோதும்
சலக்.சலக்..
தாள லயத்துடன்

வாய்ப்பாட்டாய்
குயில் தன் குரலால்
இசையை
இசைத்து

விடியலை அறிவித்து
ஒற்றை ஆளாய்
ஓங்கி ஒலிக்கும்
சேவலின் சத்தம்
ஏழு கட்டையோ
எட்டு கட்டையோ?

இத்தனைக்கும்
சுருதியாய்
எங்கோ கேட்கும்
குழந்தையின்
அழு குரல்

எல்லாம்
எனக்குள் இசையாய்

மேலும்

எனக்கும் மகிழ்ச்சி, நன்றி .! 15-Jul-2022 12:31 pm
நல்லாருக்கு; உங்களின் இந்த பதிவு என்னுடைய "அந்த அபுர்வ சந்தங்கள்" என்ற பதிவை நினைவூட்டுகின்றது. பல நாள் கழித்து உங்களின் பதிவை படித்ததில் மகிழ்ச்சி 15-Jul-2022 11:29 am
தாமோதரன்ஸ்ரீ - தமிழ் வழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2022 7:58 am

விருதுநகர் விலாசம் கொண்டு
ஏழை நிலை போக்கினாய் கல்வி கொண்டு
பிஞ்சுப் பசியாற்றினாய் மதிய உணவு கொண்டு
நாட்டை நிமிர்த்தினாய் நேர்மை கொண்டு
ஏழைப் பாங்காளன் பெயர் கொண்டு
தேசம் வணங்க வைத்தாய் மதிப்பு கொண்டு
கர்ம வீரராய் கம்பீர நடை கொண்டு
அணைகள் பெற்றெடுத்தாய் அரசியல் பதவி கொண்டு
விவசாயம் காத்தாய் குடிமகன் பார்வை கொண்டு
கல்லாமை அழித்தாய் அறிவை மையம் கொண்டு
இலச்சத்தை துச்சமென துரத்தினாய் இலச்சிய பாதை கொண்டு
எண்திசை இருள் போக்கினாய்
கருப்புச்சூரியன் அடையாளம் கொண்டு
மறையாமல் வாழுகிறாய் மக்கள் நாங்கள் சாட்சி உண்டு
தலைவனே தலை வணங்குகிறேம்
பணிவு கொண்டு...

மேலும்

நன்றி 15-Jul-2022 4:40 pm
அருமை 15-Jul-2022 12:29 pm
பெருந்தலைவரை பெருமைபடுத்த எழுத நினைத்த உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் 15-Jul-2022 11:34 am
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2022 12:42 pm

சுட சுட மீன் வறுவல் இங்கு கிடைக்கும்

ஓடும் நீரில்
வெள்ளி காசுகளாய்
சூரிய வெளிச்சத்தில்
மின்னி மறைந்து
செல்கின்றன மீன்கள்
கூட்டம்

அதனை அள்ளி
செல்ல
வலையை வீசி
காத்திருக்கும்
மீனவர்கள்

“சுட சுட மீன் வறுவல்”
இங்கு கிடைக்கும்
தப்பும் தவறுமாய்
எழுத்து பிழைகளுடன்
சுவரொட்டி

அருகருகே வரிசையாய்
அடுப்புகள் எரிய

அடுப்பின் மேல்
வாணலியில்
கொதிக்கும்
எண்ணெயில்


இரத்த சிவப்பாய்
பூசி மெழுகிய
மீன்களை
அள்ளி போட்டு
எடுத்து கொடுத்து
கொண்டிருக்கும்
பெண்கள்

சப்பு கொட்டி
புசித்து கொண்டும்
எதிர்பார்த்தும்

இலையுடன்
காத்து நிற்கிறது
மக்கள் கூட்டம்

மேலும்

நன்றி நன்றி ..ஒரு தமிழ் அறிஞரிடமிருந்த்து கிடைக்கும் அறிவுரை பணிவுடன், மகிழ்ந்து ஏற்று கொள்கிறேன். ஒரு சந்தேகம் ஒற்றெழுத்து பாடல் எழுதும் போது எப்பொழுது விட வேண்டும் , அல்லது சேர்க்க வேண்டும் , நேரமிருப்பின் தயவு செய்து விளக்கவும். 30-Jun-2022 9:55 am
பாடல் நன்று! பல இடங்களில் ஒற்றெழுத்துகளை விட்டு விட்டீர்கள்! உதாரணமாக: சப்புக் கொட்டிப் புசித்துக் கொண்டும் எதிர்பார்த்தும் 29-Jun-2022 6:31 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2022 10:23 am

எங்கு போனாய் நண்பா !

நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே

மேலும்

நீண்ட நாட்களாக தங்களின் உரையாடல்களை காணவில்லை , "Fair and Lovely" ல் ஸ்பரிசனோடு உரையாடினீர்கள் , தாங்கள், நன்னாடன் , ஸ்பரிசன், மற்றும் பலரின் உரையாடல்களை இரசித்து படிப்பவன் நான் 27-Jun-2022 1:40 pm
சிறப்பான கதை மனத்தைத் தொட்டது பாராட்டுக்கள் 26-Jun-2022 5:55 pm
தாமோதரன்ஸ்ரீ - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 1:14 pm

==================================

அரவணைக்க​ அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..

வலிகள் சொல்ல​ வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..

சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..

வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..

ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..


உணவுக்காக​ப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...

இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?

சிந்திப்பீர் மானிடரே!

உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..

ஆதலால்..

வேண்டுகின்றோம் உங்களிடம்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே