பூ சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பூ சுப்ரமணியன்
இடம்:  பள்ளிக்கரணை , சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2016
பார்த்தவர்கள்:  998
புள்ளி:  241

என் படைப்புகள்
பூ சுப்ரமணியன் செய்திகள்
பூ சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2019 12:25 pm

மல்லிகை மலர்கள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

உன் வெண்மை பார்த்து
உன் மணம் நுகர்ந்து
பலர் மகிழ்ந்தார்கள்
பலருக்கு அழகு வெண்மை
உன் நறுமணம் தெரிந்தது!

மல்லிகை மலரே
மணக்கும் செடியிலிருந்து
பறித்த மனிதர்களை
பார்த்து நீ வெறுக்கவில்லை
மணம் பரப்ப மறப்பதில்லை!

மணமும் அழகும்
மட்டும் மகிழ்ச்சி அல்ல
பிறர் மனம் மகிழ்விப்பதே
தன் மகிழ்ச்சியென உன்னால்
மனிதன் உணர்ந்தான்!


கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

மேலும்

ஜயா கவிதை அருமை 20-Jul-2019 10:10 am
பூ சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2019 11:39 am

இனிமேல் மழைக்காலம்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

தனிமையில் அமர்ந்து
இனிய மழைபொழியக் கண்டு
கனிமரங்கள் காய்க்கும்
கதிரவன் வெப்பக்கதிர்கள்
சப்தமில்லாமல் தணியும்!

வானில் வானவில்
வர்ணஜாலம் காட்டும்
கருமேகங்கள் உறவாடி
தெருவெங்கும் நீரோடும்
மழைபொழியக் கண்டு
மக்கள் இன்பத்தில் மிதப்பர்!

வறட்சியால் ரேகைபோல்
விரிந்த பரந்த நிலங்கள்
இனிமேல் மழைக்காலம் கண்டு
இன்பக் காதலர்கள் இதழ்கள்
சந்திப்பதுபோல்
சத்தமில்லாமல் முத்தமிடும் !

இனிமேல் மழைக்காலம் கண்டு
மான்கள் துள்ளி ஓடும்
மீன்கள் துள்ளி விளையாடும்
ஆடு மாடுகள் பசுமை கண்டு
ஆனந்தத்தில் அசை போடு

மேலும்

பூ சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 9:12 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

வாடும் பயிர்கள்
நாடி நிற்கும் பருவமழைக்காக
நாளும் தாகம் தணிக்க
தேடி அலையும் விலங்குகள்
நாடுவதோ தண்ணீர்!

மாட்டுக் கொட்டிலில்
மயங்கி சோர்ந்து நின்றது
வெயிலின் கொடுமையில்
வெள்ளை ஆட்டுக்குட்டி!

அது விரும்பியது குளுமை
அங்கு வீசியது வெம்மை
ஆட்டுக்குட்டி ஏங்கியது
சொட்டுபோடும் மழைக்காக!

இடிமுழக்கம் காணும்
கோடைமழை கண்டு
ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி
மழைநீரில் நனைந்தது!

குடத்துடன் அலையும் மக்கள்
தாகம் தணிக்கும்
கோடைமழை கண்டு
குதுகூலம் கொள்வர்!

மழைத்துளிகள் கண்டபின்
குளுமை தேடி

மேலும்

பூ சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2019 3:23 pm

மவுன இரவுகள் !

காதலர்களுக்கு இனிமை
கவிஞர்களுக்கு கற்பனை
ஏழைகளுக்கு கண்களில் ஏக்கம்
உழைப்பாளிக்கு சுகமான நித்திரை
பக்தர்களுக்கு தியான முத்திரை !

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

மேலும்

பூ சுப்ரமணியன் - AKILAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2019 6:24 pm

மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................

மேலும்

நன்றி 17-May-2019 6:28 pm
என்றும் உதிராத கவிதை பூக்கள் 17-May-2019 6:03 pm
நன்றி 17-May-2019 11:58 am
நன்றி 17-May-2019 11:58 am
பூ சுப்ரமணியன் - K MURUGAN அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 5:49 pm

என் முதல் கவிதையை இந்த எழுத்து டாட் காமில் பதிவிடுகிறேன்.நன்றி

மேலும்

வாழ்ந்து பழகு , வாழ்க்கை அழகு கஷ்டத்திலும் சிரித்துப் பழகு கவிதை வரிகள் அருமை .கவிதையில் வடமொழி எழுத்துக்களைத் தவிர்க்கவும் .தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி வாழ்த்துக்கள் பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை 20-Jul-2018 11:16 am
மிகவும் அருமை .உங்கள் பதிவுகளை தொடருங்கள் வாழ்த்துகள் 19-Jul-2018 9:48 pm
பூ சுப்ரமணியன் - Uma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2018 10:02 pm

உன் சுவடுகள் பதிக்க
உன்னை உலகம் அறிய
உன் வழி அனைவரும் நடக்க
உறுதி கொள் மனிதா
கவனம் கொள் நண்பா

தடைகள் தாண்டியே பயணம்
செய்
விதிகள் ஏற்காமல் மதி வழி
செய்
சோம்பலை விட்டு முயற்சி
செய்
சோதனைகள் ஏற்று சாதனைகள்
செய்
வீரமாய் வாழ்
விவேகமாய் இரு
சுய சிந்தனை கொள்...
சுயமாய் வாழ்ந்து
உன் உலகை படைத்திடு...

மேலும்

அருமை தோழியே 05-Jul-2018 10:58 pm
மிக்க நன்றி ஐயா 05-Jul-2018 8:49 pm
தன்னம்பிக்கை கவிதை நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் ! பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் , பள்ளிக்கரணை , சென்னை 05-Jul-2018 8:43 pm
பூ சுப்ரமணியன் - ச செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2018 4:57 am

புத்தம் புது ஆண்டே வருக!
நித்தம் ஓர் கதை தமிழர் வரலாற்று நாட்குறிப்பில் எழுதிச் செல்க!
யுத்தம் இல்லா நிசப்தம் ஞாலத்தில் பரவிட செய்க!
சப்தம் இல்லா இனிய பறவை கீதத்தில் காலை எழுக!
முத்தம் இடும் மரங்கள்
நிலமகளில் எங்கும் நிறைக!
மொத்தம் மனித சுயநலம் வீழ்ந்து, பொதுநலம் எங்கும் வளர்க!
ரத்தம் சிந்தும் மொழி, இனம், மதம் இனி வேண்டாம், மனிதநேயம் எங்கும் பெருகுக!
நாத்தம் நிறைந்த கார்ப்ரேட் கவர்ச்சிப் பொருள் அழிக, உழவன் சிந்தும் நறுமணம் எங்கும் வீசுக!
சுத்தம் இல்லா கயவர்கள் அரசியலில் வீழ்ந்து, மனிதம் பூத்த இளம் பூஞ்சோலையில் அவை கூடுக!
தத்தம் பேசும் கிள்ளை தொழில் ஒழிந்து, கல்வி பூப்பறிக்க சோலை செ

மேலும்

நன்றி நண்பரே!... 19-Apr-2018 9:35 pm
புத்தாண்டே வருக , செந்தில்குமார் வேண்டுவதை சிந்தையில் பதித்து, சிதறாமல் நன்கு வழங்கு ! பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை 19-Apr-2018 9:17 am
நன்றி நண்பரே!... 16-Apr-2018 7:52 pm
தங்கள் வேண்டுகோள்கள் நிறைவேற தமிழ் அன்னை ஆசிகள் 16-Apr-2018 7:09 pm
பூ சுப்ரமணியன் - பூ சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2017 11:01 am

கவிதை
நிலா விடு தூது !

அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன்
இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?

அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக
அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !

அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்

அவள்
காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக
புலம்பித் தீர்த்தான் !

அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன்
தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்க

மேலும்

நல்ல படைப்பு 02-Mar-2017 4:27 pm
தூதினால் மட்டும் காதலின் சுமைகளை பகிர்ந்து கொள்ள முடியாது காலத்தின் சதியில் உள்ளங்கள் சுமைகள் தாங்கும் நிலை 02-Mar-2017 9:04 am

................................................................................................................................................................................................

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில

மேலும்

நன்றி நட்பே. தங்கள் தமிழும் அழகு. 28-Sep-2018 12:20 pm
மிகவும் அருமையான மற்றும் அழுத்தமான பொருள் பொதிந்த கதை. எனக்கு மெய் சிலிர்த்து போனது!!. அதை விட நீங்கள் தமிழ் எழுத்துக்களை கையாண்ட விதமும், வார்த்தைகளின் உபயோகமும் வருங்கால இளம் எழுத்தாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை கதாசிரியரே! தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம். 26-Sep-2018 7:43 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே. 28-Jun-2017 11:12 am
மெய் சிலிர்க்க வைத்த கதை. வர்ணனைகள் மிக அழகு அது என்னையும் அந்த கோவிலுக்கு அழைத்து சென்றது வெகு இயல்பாய் . மிக அருமை . 23-Jun-2017 8:54 am
மேலும்...
கருத்துகள்
மேலே