இதுதான் வாழ்க்கை

கவிதை

இதுதான் வாழ்க்கை!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


நீ
வானுக்கு கீழே
நின்று கொண்டே ....

வானில் வட்டமிடும்
நிலா சூரியன் விண்மீன்
ரசித்து யோசிக்க
கற்றுக்கொள்!

தேய்ந்துபோன நிலா
மேற்கில்
மறையும் சூரியன்
மின்னி மின்னி
மறையும் விண்மீன்கள்
மனித வாழ்க்கையின்
அர்த்தம் கூறாமல் இருக்காது!

காய்ந்துபோன
சருகுகள் கூட
காற்றில் வட்டமிட்டு
வான்நோக்கி பறந்து
இதுதான் வாழ்க்கை
என்று கூறி
சலசலப்புடன்
தரையில் விழும்!

பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (9-Jul-21, 11:38 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : ithuthaan vaazhkkai
பார்வை : 375

மேலே