வேலையிடத்தில்

பணிக்காக, பணிக்கப்பட்ட
பாவப்பட்ட பிறவி..,
சேவலாய் மணிகட்டி,
சகலமும் மணிக்குள்,
வேசியாகும் உயிர் கூடு
தடக்கை..!
மண்மகள் அறிந்தும்
பெண்மகள் பல கடந்தும்
வரலாற்று நெடுகிலும்
மாறா பிறப்பு உன் பிறப்பே!
படி தாண்டி,புவி தாண்டி,
விண் தாண்டி,பயணித்தாலும் நெருப்பு மூளும் பத்தினி யாகம் என்றும் உன்னில்,
நித்தம் இந்த மண்ணில்...,
பெண் வியப்புதான்!
ஆனால்? ஆட்படா ஆச்சரியத்தில்.., சுமை தாங்கும் பேதை அவள்,
போதையாகிப்போனவள்!
ஊதாரி கிடைத்துவிட்டால்
கூடி போகும் உள்ள பாரம்
பாரம்,கூட கூட
வாரம் கூட கடந்து போகும்.
கதை கட்டும் கனவான்கள்
தெரு தோறும் உண்டு
திண்ணைப் பேச்சு ஒய்யாரிகள் கதை கூடும் நன்று!
பாசி ஏறிய மனதுக்குள்
எத்தனைப் பூவாசம்..,
புறவுலக மேதைகளால்
இருட்டடிப்பு மோசம்...
பஸ் கிடைக்க நேரம் ஆனா,
கணவன் புருவமும் உயரும்
காப்பி நேரம் தாமதமா,
நாத்தனார் இருப்பு நகரும்
முடியாம படுத்துக்கொண்டா
மாமியார் கர்வம் எகிறும்..., பணிக்கப்பட்ட வசிப்பில்!
பணியிடத்தில்...,
சிரிச்சுப் பேசினா இவள் அந்த மாதிரி,
நின்று பேசினால் அதுக்குத்தான், அமர்ந்து பேசினால் தயார்,
உடன் சென்றால் முடிந்தது எல்லாம்..,
பேசா நின்றாள்,திமிர் பிடித்தவள்..
பதில்சொல்ல தவிர்த்தாள்,அகங்காரி பதில் மட்டும் சொன்னாள்,சுடுமூஞ்சி. முறைக்க தெரிந்தால், கைகாரி.., எதிர்க்க தெரிந்தால்,அடங்காபிடாரி.. என ஒப்பனை கோட்டை கட்டும் நிஜவான்களே!
உயிர் பிதாவாகிய பெண்கள் சுமக்கும்.........,
முள்முடி வலிகள் ஏராளம்.....,
வலி நீங்க வழி,
ஒப்படைப்போம் எதிர்ப்புகள் இன்றி தாராளமாய்......,வழிகளை......,

எழுதியவர் : சோழ வளவன் (9-Jul-21, 3:27 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 82

மேலே