எப்போதும் என் காதல்

உன்னைப் பார்த்த
நொடிகளுக்கும்,
உன்னை பார்க்காத
விழிகளுக்கும்,
நன்றி சொல்வேன்.
நீ எனக்கு கிடைத்ததற்கு!

அந்த மரம் நிழல் தருமா?
இந்த மரம் நிழல் தருமா? என்று
நான் ஏங்கி கொண்டிருக்கையில்,
உன் நிழல் ஒன்றே போதுமென்று
நீ சொன்ன ஒரு வார்த்தை,
எல்லா இரவும் கூட
பகலானால் என்னவென்று,
நான் பைத்தியமாய் யோசித்தேன்.

இப்போது என்ன கூற?,
நான் எப்போதும் என்ன கூற?,
முப்போதும் என் காதல்
கற்பனையின் வரிகளாய்

கவிதை கடலில் மட்டுமே
என்றென்றும் கரை சேரும்!

எழுதியவர் : வென்றான் (20-Jan-25, 1:22 am)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : eppothum en kaadhal
பார்வை : 4

மேலே