நட்சத்திர விதைகளை காக்க
நட்சத்திர விதைகளை காக்க
வானவெளி வயல்களில்
ஊன்றி விதைக்கப்பட்ட
நட்சத்திர விதைகள்
விளைந்து பயிராகும்
முன்
எவராலும் களவாட
படாமல் இருக்க
இரவும் பகலும்
சுற்றி வந்து
காவல் காக்க
சூரியனையும்
நிலவையும்
நியமித்தது ஏனோ?