முத்தொள்ளாயிரம் - சேரன் 8 - இன்னிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
இன்னிசை வெண்பா
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு! 8
பொருளுரை
கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்து விட்டது. உடனே நானே கதவை அடைத்து விட்டேன்.
வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்து கொண்டிருக்கிறது.