திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 2 4
2/4 -இயேசு கிறித்துவின் கோபமும் கடுஞ்செற்களும்
-- யாதுமறியான்.
@@
பொதுவாகவே, கடுஞ்சொற்கள் கோபத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றன . ஒருவன் கோபத்தால் ஆட்படும்போது, அவனது வாய்ச் சொற்கள், சுடு சொற்களாகவே அமைவது இயல்பு .
எனவே இயேசு கிறித்துவின் கோபத்தையும், கடுஞ்சொற்களையும் இணைந்தே பார்ப்போம் .
ஒருமுறை இயேசு கிறித்து தன் சீடர்களோடு எருசலேம் தேவாலயத்திற்கு சென்றார் . அங்கே ....
கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.
( யோவான் 2: 14- 16 )
இயேசுவின் இந்த கோபத்தை பார்க்கும்போது நமக்கு ஒரு குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
(குறள் : 301 )
தனது கோபம் படிக்கும் இடத்தில்
தேவாலயத்தில் இருந்த வணிகர்களிடம் கடும் கோபத்தில் நடந்து கொண்ட இயேசு கிறிஸ்துவால் பிலாத்துவின் முன்னே நிற்கும் பொழுது பதில் ஏதும் கூற முடியாமல் மௌனமாய் இருந்தது நோக்கத்தக்கது . ஏனோ, இயேசு இந்த எளியவர்களிடம் மிகக் கோபத்தோடு நடந்து கொண்டிருக்கின்றார்.
இதோ, இயேசுவிடம் அடையாளம் கேட்ட, பரிசேயர்களிடமும், மறை நூல் அறிஞர்களிடமும் ( யூதர்களிடம்) ,அவர் எப்படிக் கோபத்தோடு பேசுகிறார் பாருங்கள்.
விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். ( மத்தேயு 12 34 )
மேலும்....