திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 1 4
திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை !
×××
- 1 / 4 -
இயேசு கிறித்துவின் கோபமும், வன்மொழிகளும் !
+++
யாதுமறியான்.
@@
திருவள்ளுவர் சினம் கொள்வதையும், அதன் தொடர்ச்சியாக வன் மொழிகள் பேசுவதையும் / வசை பாடுதலையும் , வன்மையாக எதிர்க்கிறார்.
அவர் வெகுளமை பற்றி 10 குறட்பாக்களும் இன்சொல் கூறல் பற்றி 10 குறட்பாக்களும் எழுதியிருப்பதே இதற்குத் தக்க சான்றாகும்.
முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ ? என்று திருவள்ளுவர் வினவுகின்றார்.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற . ( குறள்: 304 )
அதாவது மனிதர்களின் மகிழ்ச்சியையே கொன்று விடக் கூடியது கோபம் என்கிறார் . அத்தகைய கோபத்தை இயேசு கிறித்து விலக்கினாரா ?
மேலும்,
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் அந்தக் கோபமே அவனை அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர் .
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் ( குறள்: 305 )
தன்னையே அழிக்கக்கூடிய, இத்தகு கோபத்திலிருந்து, இயேசு கிறித்து தன்னைக் காத்துக் கொண்டாரா ? ஆராய்வோம்.
இவைமட்டுமல்ல, சினம் என்பது தீயைப் போன்றது அது தன்னைச் சார்ந்தவரை மட்டுமல்லாமல் உடன் இருப்பவர்களையும் கொல்லக் கூடியது ( குறள் : 396 ) என்கிறார் திருவள்ளுவர்.
இந்த குறள்களை நோக்கும் போது , தன் வாழ்நாள் முழுவதும் அன்பையே போதித்து , பகைவனையும் நேசிக்கக் கூறிய இயேசு பிரானை கொலை செய்யும் அளவிற்குப் பகை வந்ததற்கான காரணம் விளங்கும் .
இயேசு கிறித்து சிலுவையில் கொலையுண்டது மட்டுமல்ல, அவருடைய 12 திருத்தூதர்களில் / அப்போஸ்தலர்களில் பத்து பேர் கொலையுண்டு மடிந்தனர் , ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் , இன்னொருவர் தீவாந்திரச் சிறையில் மாண்டுபோனார். இந்தச் செய்தி குறள் எண் 305 மற்றும் 306 ஐ பொய்யா மொழி என நிருபிக்கின்றது அல்லவா ?
மேலும், எல்லையற்ற சினம் கொண்டவர் இறந்தவருக்குச் சமம் என்று சாடும் திருவள்ளுவர் , கோபத்தை அறவே துறந்தவர் துறவிக்குச் சமம் என்றும் போற்றுகின்றார் .
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை ( குறள்: 310 )
இவ்வாறு பல வகைகளிலும் திருவள்ளுவரால் தூற்றப்படும், கோபம் என்னும் கொடிய பண்பு இல்லாமல் இருந்தாரா இயேசு கிறிஸ்து ? இதுகுறித்து நற்செய்தி நூல்கள் என்ன கூறுகின்றன ஆய்வோம்.