இரா-சந்தோஷ் குமார் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  இரா-சந்தோஷ் குமார்
இடம்:  திருப்பூர் / சென்னை
பிறந்த தேதி :  29-Sep-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2013
பார்த்தவர்கள்:  12122
புள்ளி:  13514

என்னைப் பற்றி...

“ எழுத்தாளர் இரா.சந்தோஷ் குமார் “ இந்த கம்பீரச் சொற்கள் தலைப்பு செய்தியாக வலம் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ் ரசிகன்.

”எழுத்தாளன்.”. இந்த ஒற்றைச் சொல்லின் மீது எனக்கு அப்படியொரு ஈர்ப்பு..இந்த சொல்லின் மீது ஒரு மரியாதை.. இந்த சொல்லிற்கு எமை தகுதியாக்கி கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதே என் பிறப்புக்கு கிடைத்த கெளரவம்.

ஒவ்வொரு பாராட்டும்.. ஒரு படைப்பாளிக்கு உத்வேகம் அளிக்கும் .. !
ஒவ்வொரு பாராட்டும்... பலவீனமான படைப்பாளியை ஆபத்திற்கு உள்ளாக்கும்.. !

நான் பலவீனமாக இருக்க விரும்பவில்லை.

படைப்பாக்கம் என்பது... சாமானிய மக்களுக்கு விழிப்புணர்ச்சித் தூண்டும் ஒரு கருவியாகவும் இருத்தல் வேண்டும். என்பதே எனது படைப்பாக்க கொள்கை.
-------------

வெறும் 350 மி.லி இரத்த தானத்தில் நாம் யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்றி... கடவுளாகி விட முடியும்.

**** எனது இரத்த வகை:" O " + (Positive).


கடைசியாக இரத்த தானம் செய்த நாள் : February 2016. மீண்டும் மே 2016 ஆரம்ப வாரத்தில் இரத்த தானம் வழங்க இயலும்.. வேறு ஏதேனும் இரத்த வகை என்றாலும் தேவைப்படுவோர் எனை தொடர்புக் கொள்ளலாம்.

முடிந்தவரை வருடத்திற்கு நான்கு முறை இரத்தத் தானம் வழங்குவதென்பது என் கடமையாக செய்கிறேன். மற்ற தோழர்களும் செய்யத் தூண்டுகிறேன். .

தொடர்புக்கு : ---
முகநூல்: https://www.facebook.com/santhoshkumar78

மின் -அஞ்சல் : svaras.santhosh@gmail.com

அலைப்பேசி எண்: + 91 96003 21289

என் படைப்புகள்
இரா-சந்தோஷ் குமார் செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Nov-2017 7:38 am

ஏதேனும் ஒரு ரணத்தை
சுமந்தலையும்
மனதோடு...
யாரேனும் ஒருவர் வீட்டிற்கு
செல்கிறேன்.

புன்னகையோடு வரவேற்கிறார்.
அந்த யாரேனும் ஒருவர்.
புன்னகையோடு இருக்கை திசை நோக்கி
அவர் கைகளை நீட்டி
அமரச் சொல்கிறார்.
புன்னகையோடு தேநீர் தயாரிக்கிறார்.
புன்னகையோடு தேநீர் கோப்பையில்
தேநீர் ஊற்றி..
புன்னகையோடு அருந்த தருகிறார்.
நானும் கூட
புன்னகையோடு மகிழ்ந்து பெற்று
அருந்தி மகிழ்கிறேன்.
புன்னகையோடு உரையாடிவிட்டு
புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார்
அந்த யாரேனும் ஒருவர்.

வெளியில் வருகிறேன்...
வெயிலில் நிற்கிறேன்.
சூரியன் புன்னகை ஒளி சிந்துகிறது.
வாகனச் சத்தம் புன்னகை ஒலி எழுப்புகிறது.
சூழல் த

மேலும்

நன்றி அம்மா 16-Nov-2017 9:55 am
ஓஹோ.. அப்படியா தோழா 16-Nov-2017 9:55 am
நல்ல அழகிய தேடலில் மனம் , வாழ்த்துக்கள் சந்தோஷ் 15-Nov-2017 9:32 pm
என் விடுகதைக்கு விடை தேடினால் என் கல்லறை தான் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 5:06 pm
இரா-சந்தோஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2017 7:38 am

ஏதேனும் ஒரு ரணத்தை
சுமந்தலையும்
மனதோடு...
யாரேனும் ஒருவர் வீட்டிற்கு
செல்கிறேன்.

புன்னகையோடு வரவேற்கிறார்.
அந்த யாரேனும் ஒருவர்.
புன்னகையோடு இருக்கை திசை நோக்கி
அவர் கைகளை நீட்டி
அமரச் சொல்கிறார்.
புன்னகையோடு தேநீர் தயாரிக்கிறார்.
புன்னகையோடு தேநீர் கோப்பையில்
தேநீர் ஊற்றி..
புன்னகையோடு அருந்த தருகிறார்.
நானும் கூட
புன்னகையோடு மகிழ்ந்து பெற்று
அருந்தி மகிழ்கிறேன்.
புன்னகையோடு உரையாடிவிட்டு
புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார்
அந்த யாரேனும் ஒருவர்.

வெளியில் வருகிறேன்...
வெயிலில் நிற்கிறேன்.
சூரியன் புன்னகை ஒளி சிந்துகிறது.
வாகனச் சத்தம் புன்னகை ஒலி எழுப்புகிறது.
சூழல் த

மேலும்

நன்றி அம்மா 16-Nov-2017 9:55 am
ஓஹோ.. அப்படியா தோழா 16-Nov-2017 9:55 am
நல்ல அழகிய தேடலில் மனம் , வாழ்த்துக்கள் சந்தோஷ் 15-Nov-2017 9:32 pm
என் விடுகதைக்கு விடை தேடினால் என் கல்லறை தான் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 5:06 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Oct-2017 9:53 pm

அகவை அறுபதில் அடிவைக்கிறேன் உங்கள் அனைவரின் ஆசியுடனும் அன்புடனும் வாழ்த்துக்களுடன் 


பழனி குமார் 

மேலும்

மிகவும் நன்றி வேலாயுதம் தங்களின் வாழ்த்திற்கு 13-Oct-2017 6:54 am
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் மலைமகள் அலைமகள் கலைமகள் அருளோடு வாழ எழுத்து தளம் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறோம் 13-Oct-2017 4:14 am
மிகவும் நன்றி புனிதா 12-Oct-2017 10:57 pm
மிகவும் நன்றி சந்தோஷ் 12-Oct-2017 10:56 pm
இரா-சந்தோஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 8:02 am

குரலை நெரிப்பதே
குலதொழிலாக்கி கொண்டிருக்கும்
அரசாங்கத் தலைமைக்கு
ஒரு
குரலற்றவன்
அவன் தாகத்தை
ஒரு மொழியில் ஒலிக்க துடித்த
சமயத்தில் தான்
ஜனநாயக தேவியின்
கழுத்து நரம்பு
உடைப்படும் சத்தம் கேட்டது.

நீதி தேவதையின்
கருப்பபை உடையத் துவங்கியது.

அப்போதெல்லாம்
மக்கள் நாம்
உறக்கத்திலிருந்தோம்..
தெரியுமா ?
அல்லது
மயக்கத்திலிருந்தோம்
புரியுமா ?

மேலும்

ஆதிக்கம் என்ற சொல் நீதியையும் குருடாக்கி விட்டது. வெளிச்சமான கண்ணாடிகள் எல்லாம் இரவில் தான் தங்கள் முகம் பார்த்துக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 6:28 pm
இரா-சந்தோஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 12:52 am

இந்த இராத்திரியின் மடியில்
தலைச் சாய்த்துக் கொள்கிறேன்.
தனிமைக்கான காரணங்களை
இனிமையான மெளனமொழியில்
மொழிப்பெயர்த்து சொல்கிறேன்.

இந்த இரவு எனக்கு தோழியானவள்.
என்னுடன் ..என் சுதந்திர நிர்வாணத்தோடு
உடனிருந்தாலும்...
என்னால்..இந்த இரவுக்காரிக்கு
எந்த களங்கமும் உண்டானதில்லை.

எனக்கு தெரியும்...
இராத்திரிக்கென ஒரு கண்ணியம் உண்டு.
இந்த இரவுத்தோழிக்கு
தன்மானமும் உண்டு.
எனக்கும் கூட
மானமென
கொஞ்சமல்ல நிறைய சுயம் உண்டு.

மேலும்

இரா-சந்தோஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 12:43 am

எளிமையான சுடிதார் அணிந்து
ஒளவையார் ஸ்கூட்டியில்
சென்னை கலைவாணர் அரங்கம் வந்தார்.

ஒளவையுடன்
ஜீன்ஸ் பேண்ட் காட்டன் சர்ட்டில்
கூந்தல் விரித்த
ஹேர் ஸ்டைலில்
நவீன டிஜிட்டல் சிலம்போடு
வந்தாள் கண்ணகி.
நான் தான் வரவேற்றேன்.
ஒளவை என் கன்னத்தை
கிள்ளி.. நெல்லிக்கனி கொடுத்தார்.

கண்ணகியுடன்
ஹலோ என கை குலுக்க
நீண்ட என் கைகளை பற்றாது
அலட்சியம் செய்தாள் .
திமிர்பிடித்தவள் போலிருக்கு.

அது ஒரு புத்தக வெளியீட்டு விழா
என் கவிதை புத்தகம் தான்.

கம்பனுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
ஒளவை வந்தால்
வரமாட்டேன் என்கிறார்.
ஆதிகாலத்து இலக்கிய விரோதம் போல.

கம்பனுக்கு பதில்
நக்கீரனை அழைத்தது

மேலும்

கனவிலும் இலக்கிய நயம் ,வாழ்த்துக்கள் சந்தஸ் 16-Aug-2017 1:19 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) nagarani madhanagopal மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2017 6:15 am

“ இன்பா..! நம்ம தாத்தாவோடு வீட்டில ஒரு பாதியை பெரிய மாமா விற்கப் போறாங்களாம்.விவசாய நிலத்தையும் விக்கப்போறாங்களாம் அண்ணா.ஆயா கிட்ட கையெழுத்து கேட்டு மாமாக்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம் ” கோவையிலிருக்கும் தங்கை தீபா மிகுந்த ஆதங்கத்துடன் அலைப்பேசியில் சொல்லிக்கொண்டிருக்க.. எனக்கு அதிர்ச்சி,ஆச்சரியம்,கவலை கலந்த உணர்வு ஏற்பட்டது. என்றாலும் தங்கையின் ஆதங்கத்தை தீர்க்க

“ சரி விடுடா குட்டிம்மா.. தாத்தாவே செத்து போயிட்டார்.வீடா பெரிய விசயம்.? “

“ என்ன இன்பா நீ பேசுற ? , ஆயா இருக்காங்கல ? அவங்க எங்க இருப்பாங்கன்னு யோசிச்சியா.? . தாத்தா வாழ்ந்த வீட்டுல அவங்க கடைசி வரைக்கும் இருக்கனுமுன்னு

மேலும்

நன்றி டாக்டர் :) 22-Aug-2017 7:03 pm
நல்....ல்ல மண் வாசனை.. ! அருமை. 16-Aug-2017 11:07 am
நன்றி ஐயா 15-Aug-2017 1:29 am
மகிழ்ச்சி மா நன்றி பிரபாவதி 15-Aug-2017 1:28 am
குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) athinada மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2017 10:04 am

பசிக்காக ஒருபிடி சோற்றை எடுத்ததற்காகவா இந்த பாலகன் மீது சாதிவெறி கொடுமை..??

ஆயிரம் கேள்விகள் இந்த பாலகனின் பார்வையில்..!

என்ன பதில் சொல்கிறது இந்த தேசம்.???

மேலும்

ஐயா ... உண்மையிலேயே அந்த ஊரில் சாதிக் கொடுமை இருந்தால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அங்கு ஒரு பெரிய பூகம்பமே வெடித்திருக்கும். இந்தப்பக்கம் நாலு பேர்,அந்தப் பக்கம் நாலு பேர் மண்டையைப் போட்டிருப்பார்கள்; அல்லது மண்டையை உடைத்திருப்பார்கள்! ஆனால் அப்படி ஏதும் நடந்ததா? இல்லையே! இதெல்லாம் ஊடங்கள் செய்யும் வேலை! எந்த ஒரு நிகழ்ச்சியையும் சாதி, மதம் சம்பந்தப் பட்டதாய் எழுதி எழுதி நாட்டைக் குட்டி சுவராக்குவதே இவர்கள்தான்! வயிற்றுப் பசிக்காகத் திருடினாலும் திருட்டு திருட்டுதான்! ஆனால் சின்னப் பையனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுமைதான்.கடை முதலாளி காட்டுப் பயல் போல. இந்தச் சின்ன விஷயத்தை நாடே டென்ஷன் ஆகும் படி எப்படிச் சொல்கிறான் பார் பத்திரிக்கைக் காரனும், டிவி காரனும்! தொழில் தர்மமே இல்லாமல் போச்சு நாட்டிலே! 22-Jun-2017 2:55 pm
யாருக்காக பெற்றோம் சுதந்திரம்? எதற்காக பெற்றோம் சுதந்திரம்? என்று கேட்க தோன்றுகிறதல்லவா.? பணத்துக்கு இந்தநாடு அடிமை.! நிதிஇருந்தால் நீதியும் வளையும்.! 03-Jun-2017 12:23 am
கோடிகள் திருடியவனை கும்பிட்டுக் கொண்டாடி வாடியவன் பசிக்கென்று எடுத்தால் துண்டாடும் சனநாயக தேசம் .இங்கே ஏழைகள் திருடினால் எலும்பு முறியும் . பணக்காரன் திருடினால் சிறையில் கூட சகல சௌகர்யங்களும் கிடைக்கும். ஒரு திருட்டை பணத்தை வைத்து தீர்மானிக்கும் கேவலம் இங்கன்று வேறு எங்கு நிகழும்? 02-Jun-2017 1:54 pm
மக்களின் அமைதி ஆபத்தானது.. இது வரலாறு! முற்றிலும் உண்மை. மிக்க நன்றி தோழரே.. 26-May-2017 6:12 pm
இரா-சந்தோஷ் குமார் - விவேக்பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2017 5:05 pm

நொண்டிச் சிந்து

பாடலில் கூத்தாடுவாள் - சக்தி
. பவனிவந் தென்னுளே ஆர்த்தாடுவாள் !
வாடிடா மலர்க்கூந்தலாள் - சொல்லும்
. வார்த்தைக்கு ளேவந்து பூத்தாடுவாள் !
ஆடலைக் கண்டகண்கள் - அண்ட
. மாயிரங் கண்டதாய்ப் பாட்டிசைக்கும்
பாடுமென் நாவினுக்குள் - அந்த
. பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் !

மின்னலின் ஒளியாகுவாள் - கண்ணில்
. மின்னிடும் இன்னொரு ரவியாகுவாள்
கன்னலின் சுவையாகுவாள் - காளி
. கவிதையின் வடிவிலே கனியாகுவாள்
இன்னலில் சுடராகுவாள் - நெஞ்ச
. எந்திரத் தில்படரும் கொடியாகுவாள்
என்னென்ன செய்திடினும் - என்னை
. ஏற்றும் விசையென வந்திருப்பாள் !

காற்றினிற் பேசுகின்றாள் - அன்னை
. காவிய மா

மேலும்

நொண்டிச் சிந்து இலக்கணம் சார் கவிதையே என்றாலும் அந்த இலக்கணம் நம் இயற்பாக்களுக்குக் காட்டும் இலக்கணமாய் அல்லாது இசைப்பாக்களுக்கே உரிய ஓசை நயத்தை இலக்கணமாகக் கொண்டு திகழுவது. இதனைக் குறித்த இருவேறு கருத்து இசைப்பாக்களைப் பற்றிய கட்டுரைகளில் இருந்து வருகின்றது. ஒன்று ஓசை நயங்கருதி வகுத்த "உயிர்" எனச் சொல்லப்படும் ஓசை இலக்கணம் (இரா.திருமுருகன் ஐயாவுடையது) மற்றொன்று இயல்பாகவே இவ்வகைப் பாக்களில் வெண்டளை பிறழாமல் வருவதால் வெண்டளை மட்டுமே போதுமென்று ஒரு இலக்கண விதிமுறையும் உள்ளது (புலவர் குழந்தையைத் துவங்கி பலர்) ஆனால் இரண்டுமே ஓரளவிற்குப் படித்த பாலகன் பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்த போதையிலிருந்து இன்னும் தெளியாத சிறியன் எழுதும் போதேஉரக்கப் படித்துக் காதுகளில் விழும் ஓசையை வைத்து எழுதுகிறேன் ! எல்லாம் அப்பன் பாரதியிடமிருந்து பெற்றதே ! நாள்தோறும் என்பது நாடோறும் என்று புணர்வதாகப் படித்துள்ளேன் ! அதே விதி தான் இந்த இடைக்குறைக்கும் என்று நினைத்து நாடொறும் என்றிட்டேன் சரியான விளக்கம் கேட்டு மீண்டும் எழுதுகிறேன். மிக்க நன்றி கவின் சாரலன் ஐயா ! 04-Jun-2017 2:14 pm
பாரதியின் கவிதையோ என ஆச்சரியப் படுத்தும் விவேக்பாரதியின் அற்புதக் கவிதை . நொண்டிச் சிந்து பாரதியில் படித்திருக்கிறேன் . நொண்டிச் சிந்து இலக்கணம் சார் கவிதையா ? ஓசை தரும் பாடல் வரிகளா ? பாடுமென் நாவினுக்குள் - அந்த . பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் ! -----பாரதி முத்திரைகள் . நான் ரசித்துப் படித்த ******மிக உயரிய கவிதை நாள்தொறும் ---நாள்தொறும் என்று இயல்பில் புணருமா ?அல்லது நாடொறும் என்று ஆகுமா ? சிறிது ஐயம் புதுக் கவிதை வீதியில் வீசும் இளந் தென்றல் காற்று சக்தியவள் மூச்சில் பிறந்த பொதிகைத் தமிழ் பாட்டு ! வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 16-May-2017 9:05 am
நன்றி அண்ணா ! 15-May-2017 6:08 pm
நெல்லிக்கனியை தேனில் நனைத்து உண்ட திருப்தி.. தம்பி..! 15-May-2017 5:09 pm
இரா-சந்தோஷ் குமார் - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2017 3:55 pm

ஆதலால் என் காதல் பாடட்டும் :

அன்பிற்கு காதல் என பொருள் என்றால்
என் காதலை சொல்கிறேன் கேள்,

பிறை கண்டு உள்ளம் உலறல்கள் கொண்டதால் இயற்கையில் காதல் கொண்டேன்,
என் அன்பிற்கு வித்தான நிலவும் என்னோடு கவிப் பாடட்டும்.

நதியோடு என் கொலுசு சினிங்கி சிரித்ததால் நீரோடு காதல் கொண்டேன்,
ஓசையில் வண்ண மீன்களும் என்னோடு கவிப் பாடட்டும்.

எம் பாரதி வரிகளை தேடி திளைத்தேன்
எழுத்தில் நிதமும் உலாவி களித்தேன்
தமிழின் ரசத்தோடு என் உயிரும்
கவிப் பாடட்டும்.

திமிரோடு நேர்மையின்பால் நேசம் கொண்டேன்
ஆக எதிர்மறை வாதிகளின் முதுகெலும்பு உடைத்து என் வார்த்தைகள் பாடட்டும்.

எவன் ஒருவன் என் உள்ளத

மேலும்

கருத்தில் மனம் மகிழ்ந்தேன், நன்றி சகோதரரே... 30-Mar-2017 3:43 pm
காதலின் மரத்தில் உணர்வுகள் தான் ஆயிரம் கிளைகள் அந்த கிளைகளிலும் லட்சம் நினைவுகள் சருகுகள் 29-Mar-2017 11:53 pm
உணர்வுகள் ஒன்றி எழுதிய கவிவரிகள்.ஓடையில் ஒழுகிஓடும் ஊற்று நீரைப்போல் வெளிவந்த கவித்துவம் மனதை ஒன்றவைத்தது.உதாரணம் பின்வரும் வரிகள்..., எம் பாரதி வரிகளை தேடி திளைத்தேன் எழுத்தில் நிதமும் உலாவி களித்தேன் தமிழின் ரசத்தோடு என் உயிரும் கவிப் பாடட்டும். பிறை கண்டு உள்ளம் உலறல்கள் கொண்டதால் இயற்கையில் காதல் கொண்டேன், என் அன்பிற்கு வித்தான நிலவும் என்னோடு கவிப் பாடட்டும். வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி ! 10-Mar-2017 8:59 pm
சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) ப்ரியா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Mar-2017 10:26 am

கங்கையும் காவிரியையும்
ஈன்றெடுத்தவளை -இன்று ,
கருணைக்கொலை செய்துவிட்டோம்..

முப்போக விளைச்சலும்
மும்மாரி பொழிந்தவளை-இன்று ,
மூச்சடக்கி மடித்துவிட்டோம்..

சிக்காமல் பறந்த
சிட்டுக்குருவிகளையும் ,
சிட்டாய் சிறகடித்த தும்பிகளையும் -இன்று,
அழித்துவிட்டோம்..

கடல் நீரே குடிநீராய் அதுவும்
கானல் நீராய் போனததற்கான
காரணத்தை -இன்று ,
மறந்துவிட்டோம்...

கனல்வீசும் கோடையும்,
புனல்வீசும் அருவிகளையும்,
தென்றல்வீசும் சோலைகளையும் - ஏனோ - இன்று, இழந்துவிட்டோம்..

சாலையோர மரங்களையும் ,சந்தம்
பாடும் குயில்களையும் மறந்தோம் . பசுமை சரித்திரம்
மறந்த சந்ததிகளுமாய் -இன்று,
ஏனோ

மேலும்

நன்றி பிரியா ... 25-Mar-2017 12:29 am
மிக்க நன்றிகள் ஐயா ... தவறை சுட்டிக்காட்டியமைக்கு... திருத்தி விடுகிறேன்...... . தங்களின் வரவிலும் மகிழ்ச்சி . 25-Mar-2017 12:28 am
படைப்பு எங்கோ அழைத்து செல்கிறது....நிதர்சனம் தோழியே...!! 23-Mar-2017 12:00 pm
மன ஆதங்கத்தைச் சொல்லும் அழகிய கவிதை . சாலையோர மரங்களையும் ,சந்தம் பாடும் குயில்களையும்- சரித்திரம் மறந்த சந்ததிகளுமாய் -இன்று, ஏனோ மாறிவிட்டோம்... ---இதில் பொருள் அல்லது வரி நெருடுகிறதே ? சாலையோர மரங்களையும் ,சந்தம் பாடும் குயில்களையும் மறந்தோம் பசுமை சரித்திரம் மறந்த சந்ததிகளுமாய் இன்று, ஏனோ மாறிவிட்டோம்... ----இப்படி அமைந்தால் பொருள் தரும் மற்றபடி கவிதை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 23-Mar-2017 9:48 am
கவிஜி அளித்த படைப்பை (public) ப்ரியா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jan-2017 8:02 pm

எதிர் வீட்டு ஜன்னல்- ஒரு பக்க கதை- கவிஜி

அதிகாலையோ அந்தி மாலையோ... எப்போது திறக்கும் என்று தெரியாது. ஆனால் திறக்கும். கிறக்கும் அந்த எதிர் வீட்டு ஜன்னல். அந்த எதிர் வீட்டு ஜன்னலில் தினம் ஒரு வண்ணம் வழிவது, மாயம் செய்தன என்னை. மாய நதிக்குள் ஒளி கலந்து பூசிய நிறக்குடுவையின் உடைந்த சிதறலென சித்திரமாகி இருக்கும். திறந்த சற்று நேரத்தில்... மெல்ல மெல்ல கைகள் இரண்டு கன்னத்தை தாங்கிக் கொண்டோ, ஆச்சரியத்தை வீசிக் கொண்டோ... மறைக்கும் திரை சீலைக்குள் வெளி சொல்லிய நுழைவாக சற்று நிறம் மாறும். பின் கரம் மாறும் நொடிகளில்... புதிர் மாறும் மீண்டும் எனக்குள்.

சிவப்பின் ஸ்வப்னத்தில் சீக்கிரம் விடியும் ஒரு

மேலும்

மாயமாய் எழுத்துக்களும் சிறப்பு விஜி...!! 04-Jan-2017 2:28 pm
மிக அற்புதம் ஜி.. 04-Jan-2017 12:23 pm
மாய ஜன்னலில் தான் நாமும் இருக்கிறோம் . ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு மாயம் .அற்புதமான எதிர் வீட்டு ஜன்னல் அண்ணே...அற்புதம் ... 03-Jan-2017 10:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (711)

பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (714)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
user photo

மா.உ.ஞானசூரி

யாழ்ப்பாணம், தமிழீழம்

இவரை பின்தொடர்பவர்கள் (715)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே