Zia Madhu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Zia Madhu
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Oct-2013
பார்த்தவர்கள்:  1580
புள்ளி:  436

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கும் கோடி மக்களில் ஒருத்தி..

என் படைப்புகள்
Zia Madhu செய்திகள்
Zia Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2018 5:00 pm

மோனா தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போதும், காதலின் அழகிய உணர்வுகளை இழக்க மார்டின் விரும்பவில்லை. நண்பர்களிடம் மோனாவின் பதிலுக்காக காத்திருப்பதாய் ஒரு மாயையை உருவாக்கிவிட்டு என்றும்போல் அவளை தூர இருந்து ரசித்துக்கொண்டிருந்தான் மார்டின்.

*************************************************************************

நினைவுகளின் அழுத்தம் தாளாமல் மோனாவின் விழிகள் ஈரம் கசிந்தன. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மென்மலர் வரமுடியாமல் போனது மோனாவின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது. நிகழ்ச்சி துவங்க சிலமணித்துளிகளே எஞ்சியிருந்த நி

மேலும்

அருமை சகோதரி... சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்...அந்த சத்யாவை போல இந்த சத்யாவும் ஆவலாய்...அடுத்த படைப்பிற்கு... 17-Jul-2018 7:38 pm
ஆவலை ஒவ்வொரு நொடியும் எகிற வைக்கின்கிறீர். தீ பரவுவதைப்போல திகிலும் பரவுகின்றது.... , அடுத்த பகுதி எப்போதுவரும் என்ற ஆவலை கிளப்புகின்றது......இந்த பகுதி மிகவும் நன்றாக உள்ளது. அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 16-Jul-2018 11:53 am
ஆர்வம் நிறைந்த கதை களம்.......... அடுத்த படைப்பிற்காய் காத்திருக்கிறேன் அருமை 14-Jul-2018 2:06 pm
சல்யூட்! ஆவலாய் தூண்டும் விதமாய் பாகங்கள் வெற்றி நடை போடுகிறது. பிரியம் மரணத்தை தாண்டிப் பாயும் என்பார்கள், கடைசியில் அது கூட மரணத்தில் சந்திக்கும் நிர்ப்பந்தம் இங்கே சில இதயங்களுக்கு ஏற்படுகிறது. காயப்பட்ட ஆன்மாக்களை திருத்த நிச்சயம் பிரியமானவர்களால் மட்டும் தான் முடியும். அந்த பிரியமே ஆத்மாவின் நோக்கம் என்றால் சுற்றியுள்ளவர்கள் கூட ஆபத்தைக் கூட விலைக்கு வாங்கிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. கடவைகள் எப்போதும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jul-2018 10:38 pm
Zia Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2018 4:54 pm

கருஞ் சாம்பல் நிற பார்க் அவென்யூ கோட்டுடன் கல்லூரி வளாகத்தை மிடுக்காய் சுற்றி வந்தபடி இருந்தார் கல்லூரியின் முதல்வர் திரு.கலைவாணன். தன் பழைய மாணவர்களை பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. சிலருடன் ஆர்வமாய் கைகுலுக்கிக்கொண்டார், சிலருடன் சத்தமாய் சிரித்துக்கொண்டார், சிலரை கண்டதும் சின்னதாய் முறைத்து பின் கட்டிக்கொண்டார். நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நான்கு மணியளவில் அனைவரும் அங்கே கூடிவிடுமாறு அறிவித்துவிட்டு தன் அறைக்குச் சென்றார் கலைவாணன்.

மோனா ஒரு வகுப்பறையின் வெளியே தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தனியாய் அமர்ந்திருந்தாள். டீனாவும் அவள் நண்பர்களு

மேலும்

கடந்த காலங்கள் எப்போதும் வாழ்க்கையில் ஒரு கடவையாகவே இருக்கிறது. அன்பென்ற கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் இதயங்கள் கூட ஜோசியக்கிளிகள் தான்; எண்ணங்களுக்கு சிறகுகள் இருக்கிறது, ஆனால், நிஜத்தில் பறந்து செல்ல நிச்சயம் முடியாது. ஒருத்தியின் அன்பில் மூழ்கி கடைசியில் அவளை நினைத்துக் கொண்ட ஒருத்தன் அனுபவிக்கும் வேதனையை சொல்ல எந்த மொழியில் கூட வார்த்தை கிடையாது. கல்லூரி வாழ்க்கை கூட சிலருக்கு கல்லறையாகியது காதலின் மூலம் தான். தொய்வின்றி நேர்த்தியாக நகர்கிறது 'நெருப்பு நொடிகள்' இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jul-2018 10:27 pm
இந்த பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது.... அதிலும் அந்த கல்லூரியின் சூழலை விவரித்த விதம்; காதல் மற்றும் நட்புகளுக்கிடையான சண்டைகள். ஏக்கங்கள்..... என ஒரு மொத்த சங்கமத்தையே.... கொடுத்துள்ளீர்கள்..... நன்று இன்னும் எழுதுங்க. 13-Jul-2018 1:01 pm
அழகான எழுத்து வடிவம் படிக்கும் பொழுது உடன் பயணிக்க வைக்கிறது அடுத்த படிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அருமை மது 13-Jul-2018 12:56 pm
மிகவும் இயல்பான வரிகள்...அடுத்த பதிவு எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறேன்.. 13-Jul-2018 12:10 pm
Zia Madhu - நீலகண்டன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2018 1:06 pm

காதல் பன்ற எல்லாரும் காதல் இருக்கும் போது ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சியா இருக்காங்க அதே காதல் தோல்வி அடையும் போது ஏன் உயிர விடணுமுன்னு தோனுது ஏன் அவன் வாழ்க்கைல பட்ட கஷ்டத்த விட காதல் ரொம்ப கொடுமைய ஏன் காதல்
எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணத்த குடுகுதுன்னு சொல்ல முடியுமா?

மேலும்

அவர்களால் உடனடியாக அந்த தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை .... நாம் நேசித்த நமக்கென்று இருக்கும் ஒரு உறவு திடீரென்று நமக்கு இனி இல்லை என்பதை மனம் ஒப்பு கொள்ள மறுக்கும்.. அதன் விளைவே தற்கொலையும் கொலையும்... அதற்கு மிகபொறுமையாக யோசித்தால் எதுவும் நிரந்தரமில்லை என்பதே நிதர்சனமான உண்மை புலப்படும்....! 17-Jul-2018 11:59 am
தோல்விக்குப் பின் தனிமையில் இருப்பதால் வரும் முடிவு. 13-Jul-2018 12:35 pm
ஏன்னா அவுங்க ஒட்டுமொத்த பாசமும் அன்பும் அங்கே நிராகரிக்கப்படுகிறது 13-Jul-2018 9:19 am
நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் 12-Jul-2018 9:57 pm
Zia Madhu அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jul-2018 3:17 pm

ஏனோ அன்று அந்திவானம் வெகு சீக்கிரமாய் ஒளியிழக்க துவங்கியிருந்தது. கல்லூரிக்கு போகச்சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்துவதை எண்ணி மனம் நொந்துகொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தாள் மோனா.

அழுது வெளிறிய அவள் முகம் நிலவொளியில் கரைந்து கொண்டிருந்தது. தலையணையை கட்டியபடி தன்னையும் அறியாமல் தூங்கிப்போனாள். படுக்கையறையில் இருள் கவ்வத் தொடங்கியிருந்த நேரம், தேகம் முழுதும் மெல்லிய குளிர் பரவியது. போர்வையை தேடி கட்டிலை துழாவினாள் மோனா. சில்லென்று ஏதோ விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். எதை தட்டி விட்டோம் என்று யோசித்துக்கொண்டே கால்களை தரையில் ஊன்றினாள். மேசை விளக்கின் மங்கிய ஒளியில் கூர்ந்து

மேலும்

உணர்வுகள் நிறைந்த வரிகள். மிக்க நன்றி தோழமையே. 12-Jul-2018 2:30 pm
வருகைக்கு மிக்க நன்றி அபி. மோனாவின் நாட்களை அடுத்த பகுதியில் விவரித்திருக்கிறேன். தவறாமல் மோனாவின் உலகத்தை காண வாருங்கள். 12-Jul-2018 2:29 pm
தங்கள் வருகைக்கும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி ஆரோ. கல்லூரியின் பசுமைத் தாங்கிய நினைவுகளை அடுத்த பகுதிக்காய் காத்துவைத்திருந்தேன். நிச்சயம் அடுத்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று நம்புகிறேன். நன்றி. 12-Jul-2018 2:27 pm
மிக்க நன்றி தோழமையே தங்கள் கருத்துக்களுக்கும் கவிதைகளுக்கும்! 12-Jul-2018 2:24 pm
Zia Madhu - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2018 11:34 pm

இங்க நிறைய பேர் கவிதை எழுதறோமே...எல்லோரும் எல்லாம் படிக்கறோமா? மனப்பூர்வமா விமரிசனம் செய்யறோமா? சுருக்கமா... நாம தோப்பு பறவைகளா? இல்லாட்டி பிக் பாஸ் குடும்பமா? நான் எழுதினா அது மொக்க கவிதைதான்...சோ யார் வேணும்னாலும் க்ரிடிசிஸ் பண்ணலாம். ஸ்போர்ட்டிவ் ஆ எடுப்பேன்...நீங்க எப்படி?

மேலும்

மன பூர்வமாக விமர்சனம் செய்யுங்கள் என் தவறை நான் திருத்தி கொள்கிறேன்... மிகவும் பொறுமையாகவும் ஏற்றுக்கொள்கிறேன் ... என் தோழர் என் மீது அக்கறையுடன் என் தவறை சுட்டிக்காட்டுவதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்வேன் ....... 17-Jul-2018 11:44 am
நான் மனப்பூர்வமாக விமரிசனம் செய்யவா...பொறுமை யுடன் ஏற்று கொள்வீரா😂? 12-Jul-2018 9:55 pm
இங்கு மென்மையான அரசியல் நிலவுகிறது. ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விடவேண்டும் என்ற அவா மட்டுமே. காதல் கவிதை எழுதி சாரி உலறிப் பாருங்கள். அள்ளிட்டு போகும். பின்னாளில் அப்படியே கரைந்து காணாமலும் போகும். வெகு சிலர் மிகுந்த ஆர்வம் பொறுப்புடன் இயங்குகின்றனர்...அவர்களை போற்ற மறக்க கூடாது. கட்டுரை பகுதியில் பெரியோர் பலர் விருப்பு வெறுப்பு இன்றி ஆக்கமான படைப்புகளை பதிவிடுகின்றனர். அவை பல ஆய்வுக்கட்டுரைக்கு சம ம் ஆனது. அன்னம் போல் தேர்ந்து எடுத்தால் பாராட்டினால் அது வளர்ச்சி தரும். 12-Jul-2018 9:54 pm
உண்மை தான் தோழமையே. எழுத்தின் மீதுள்ள தீராக்காதலே எம்போன்ற இளைய கவிகளை உருவாக்கிற்று. இலக்கணம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, தெரிந்துகொள்ள விரும்புவோர்க்கும் இத்தளம் மிகுந்த உதவியாய் உள்ளது. 12-Jul-2018 2:37 pm
Zia Madhu - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2018 11:35 am

காதலின் வரையறை என்ன...?
எனக்கு மட்டும் அதன் சூட்சுமம் விளங்கவேயில்லை அதனால் தான் என்னவோ என்னுள் விழுந்த காதல் ஒளி என்னை உயிர்ப்பித்து மீண்டும் என்னை மீண்டும் இருட்டறைக்குள் தள்ளிவிட்டு சென்றது .......

மேலும்

அது தெரிஞ்ச நான் ஏம்ப்பா உங்ககிட்ட கேக்க போறேன் ..? 11-Jul-2018 10:46 am
நீயும் உன் காதலனும் இருவேறு கோடுகள் போல் கைகோர்த்து அருகருகே ஒட்டி பயணித்தல் சிறப்பு. அல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒரே கோடாக சேர்ந்தே தீருவோம் என்றால் நிச்சயம் அதில் ஒருவர் தன்னை இழக்க நேரிடும். உன்னை உனக்காக ஏற்றுக்கொள்வதே பக்குவப்பட்ட காதல். உன் பழக்கவழக்கங்கள், நிறை குறைகள், உன் எண்ணங்கள் இவை எல்லாம் உன் காதலோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். அப்படியும் ஒருவர் மற்றவர் மீது அளவில்லா அன்பு செலுத்த முடிந்தால் வேறன்ன வேண்டும்?? 10-Jul-2018 4:12 pm
காதல். அதன் வரையறை என்னவென்று என்னயுடைய கருத்தை பதிவு செய்யும் முன் காதல் என்றால் தங்களுக்கு என்ன என்று சொல்லக் கூடுமோ? 10-Jul-2018 4:06 pm
ஒரே குயப்பமா கீதே..!!!!!? 10-Jul-2018 1:24 pm
Zia Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 3:17 pm

ஏனோ அன்று அந்திவானம் வெகு சீக்கிரமாய் ஒளியிழக்க துவங்கியிருந்தது. கல்லூரிக்கு போகச்சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்துவதை எண்ணி மனம் நொந்துகொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தாள் மோனா.

அழுது வெளிறிய அவள் முகம் நிலவொளியில் கரைந்து கொண்டிருந்தது. தலையணையை கட்டியபடி தன்னையும் அறியாமல் தூங்கிப்போனாள். படுக்கையறையில் இருள் கவ்வத் தொடங்கியிருந்த நேரம், தேகம் முழுதும் மெல்லிய குளிர் பரவியது. போர்வையை தேடி கட்டிலை துழாவினாள் மோனா. சில்லென்று ஏதோ விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். எதை தட்டி விட்டோம் என்று யோசித்துக்கொண்டே கால்களை தரையில் ஊன்றினாள். மேசை விளக்கின் மங்கிய ஒளியில் கூர்ந்து

மேலும்

உணர்வுகள் நிறைந்த வரிகள். மிக்க நன்றி தோழமையே. 12-Jul-2018 2:30 pm
வருகைக்கு மிக்க நன்றி அபி. மோனாவின் நாட்களை அடுத்த பகுதியில் விவரித்திருக்கிறேன். தவறாமல் மோனாவின் உலகத்தை காண வாருங்கள். 12-Jul-2018 2:29 pm
தங்கள் வருகைக்கும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி ஆரோ. கல்லூரியின் பசுமைத் தாங்கிய நினைவுகளை அடுத்த பகுதிக்காய் காத்துவைத்திருந்தேன். நிச்சயம் அடுத்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று நம்புகிறேன். நன்றி. 12-Jul-2018 2:27 pm
மிக்க நன்றி தோழமையே தங்கள் கருத்துக்களுக்கும் கவிதைகளுக்கும்! 12-Jul-2018 2:24 pm
Zia Madhu - செவல்குளம் செல்வராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2018 9:53 pm

காணொளி வடிவம் காண https://youtu.be/32JzWxuJGVI
1 காதல்
ஓர் அட்சய பாத்திரம்
இதில் கவிதைகள் குறைவதேயில்லை…

2. எனக்காகத்தானே உன்னில் படைக்கப்பட்டிருக்கிறது
ஏன் மறைக்கிறாய்
உன் உதட்டுச் சுழிப்பில் புன்னகையை

3. சூரியன் விழிக்காத
ஓர் மார்கழிக் காலையில்
நீ கோலமிட்டுக் கொண்டிருந்ததையும்
கவனிக்க நேரமின்றி
ஏதோ ஒரு நேர்முகத்தேர்விற்காக
அவசரத்தில் பறந்தபோது
அறியாது கோலத்தை மிதித்துவிட்டு
அசடு வழிந்து நின்றேன்
அன்றிலிருந்துதான் நீ என்னை
தண்டித்துக் கொண்டிருக்கிறாய்
அன்றிலிருந்து கோபப் பார்வையிலும்
இன்றுமட்டும் ஏனோ
என்னைப் பார்க்க ம

மேலும்

நன்றி தோழர் மகிழ்ச்சி. நிறைய எழுதுவோம் தொடாந்து பயணிப்போம் 09-Jul-2018 7:01 pm
ஒவ்வொன்றும் அருமை. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் கவிதை தொகுப்பிது 09-Jul-2018 3:00 pm
Zia Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2018 2:04 pm

ட்ரிங் ட்ரிங்.. அலைபேசி அழகாய் சிணுங்கியது. ஓசை கேட்டு மாடிப்படிகளில் துள்ளியோடி வந்தாள் டீனா. நவநாகரிக மங்கையவள் அணிந்திருந்த பாவாடை கணுக்காலை உரசி சிறகடித்தது. தோள்களில் புரண்ட கருங்கூந்தலை விலக்கிக்கொண்டே அலைபேசியை கையில் எடுத்து ஒரு முனையை கழுத்தில் புதைத்தாள்.

ஹலோ..

டீனா?

டீனா தான் பேசுறேன். நீங்க?

டீனா!! எதிர் முனையில் கேள்விக்குறி மகிழ்ச்சி கடலாய் மாறி கொண்டிருந்தது.

சட்டென சுதாரித்து குரல் வந்த திசையில் மனதை செலுத்திய டீனா விக்கித்து போனாள்.

ப்ரியா!

ஒரே வண்ண உடையணிந்து, ஒன்றாய் உணவருந்தி, ஒரே வகுப்பில் பயின்ற உற்றத்தோழிகள் இவர்கள் இருவரும். கல்லூரி காலங்கள் நின

மேலும்

ஆம். தனிமை மிகவும் வலியது. தனிமையில் வாழ்ந்து துணிவு கண்டவன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்வான். தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமையே. 12-Jul-2018 2:20 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமையே. 12-Jul-2018 2:14 pm
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழமையே. 12-Jul-2018 2:13 pm
சில நிர்ப்பந்தங்களை எப்போதும் வாழ்க்கையில் உள்ளங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வது கிடையாது. காலத்தின் பாதையில் கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் காயம், கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் கனவு என்பது போல காலம் அமைந்து விடுகிறது. தனிமை எப்போதும் ஒரு போர்க்களம்; அங்கே வாழ்க்கையை கற்றுக் கொண்டவன் கடைசியில் மனமுறிந்து வாழ்க்கையை குப்பைத் தொட்டிற்குள் தூக்கி வீசுகிறான். அமானுஷ்யம் அவரவர் எண்ணங்கள் போல யாவும் அமையும்; அந்த வரிசையில் பொய்யும் மெய்யும் கலந்த பல சுவடுகள் நிச்சயம் இருக்கிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jul-2018 12:27 am
Zia Madhu அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jul-2018 10:36 pm

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட

மேலும்

மன்னித்து விடு மௌனித்து விடுகிறேன்! இனி அவள் இல்லத்தரசி! ம்ம் ...நன்று நன்று 23-Jul-2018 10:02 am
மிக்க நன்றி தோழி :-) ஒவ்வொரு உயிரின் உணர்வுகளையும் பிசகின்றி வெளிப்படுத்த கலைகள் ஒரு கருவியாக செயல்படுகின்றது. இதில் ஒவ்வொரு கவிஞனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். 09-Jul-2018 11:46 am
மிகவும் அருமை தோழியே. ஒவ்வொரு இல்லத்தறசியின் மனத்துக்குள் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. 08-Jul-2018 3:03 pm
தொடர்ந்து பயணிப்போம் தோழர் 08-Jul-2018 2:02 pm
தாரகை அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Apr-2014 10:07 am

நீங்கள் மரணித்ததுண்டா?

நான் மரணித்திருக்கிறேன்

நீங்கள் மரண வலியை
தொண்டைக்குழியில் உணர்ந்ததுண்டா??

நான் உணர்ந்திருக்கின்றேன்

சென்னை சட்டக்கல்லூரி மாணவன்
காவல் அதிகாரியின் கண்முன்னேயே
மிருகத்தனமாய் தாக்கப்பட்டபொழுது

டெல்லி கடுங்குளிரில்
கற்பழித்து தூக்கியெறியப்பட்ட
நிற்பயாவின் நிர்வாண உடலை
நினைவில் கொண்டு வரும் பொழுது

குஜராத்தில் கர்ப்பிணிகளின்
வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள்
சிதைக்கப்பட்ட பொழுது

கோயம்பத்தூரில் தம்பிமார்களே
அண்டைவீட்டு அக்காமார்களை
அடித்து கற்பழித்தது கண்டு

கும்பகோண பள்ளித்தீவிபத்தில்
வெந்து கருகிய மாணாக்கர்களை
காப்பாற்ற முயலாத

மேலும்

அருமை அருமை. 10-Nov-2014 9:31 pm
நன்றி! நன்றி! 30-Sep-2014 12:53 pm
மிகவும் நன்றிகள்! 30-Sep-2014 12:52 pm
சிறப்பு சிறப்பு !!!!! 29-Sep-2014 3:45 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Mar-2014 4:22 pm

பிரசவிக்காத கவிதையொன்று ஈன்றெடுத்த முதல் பூ-வித்யா

தகுதியே இல்லாத
எத்தனையோ பெண்கள்
தாயாகி இருக்கிறார்கள்.......!

முயற்சிகள் இல்லாமல்.....
கனவுகள் இல்லாமல்.....
காயங்கள் இல்லாமல்.....
காதல் இல்லாமல்........
உன்னதம் தெரியாமல்.....!
அவர்களின் கேலிப்பேச்சுக்கள்
உயிர் துளைத்த
அந்நாளிலும் நான்
மலடி என்பதே
மேல் என்றேனடா..............!

வாழ்வெல்லாம் புழுக்களும்
பூச்சிகளும் உறிஞ்சி எடுக்க.......
என் வயிற்றிலொரு
புழு பூச்சிக்காக..........
அழுது தொழுதேனடா..........!

கருவறை குடியேறி ஒருமுறை........
கண்கள் பிறந்ததும் ஒருமுறை......
எட்டி உதைத்து ஒருமுறையென.....
பலம

மேலும்

நன்றிகள் நட்பே.......! 02-Apr-2014 12:15 pm
நெஞ்சத்தை தொட்ட வரிகள் அருமை 02-Apr-2014 12:09 pm
மிகவும் நன்றிகள் தோழி........! 30-Mar-2014 5:17 pm
நன்றி நட்பே......! 30-Mar-2014 5:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
பா நிபி

பா நிபி

கொடைக்கானல்
பாரதி

பாரதி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (99)

சிவா

சிவா

Malaysia
M . Nagarajan

M . Nagarajan

vallioor
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்

இவரை பின்தொடர்பவர்கள் (99)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
esaran

esaran

சென்னை
user photo

ஆரியன்

திருவண்ணாமலை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே