கவிஞர் பெருவை பார்த்தசாரதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் பெருவை பார்த்தசாரதி
இடம்:  கலைஞர் நகர், சென்னை-78
பிறந்த தேதி :  12-Dec-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2016
பார்த்தவர்கள்:  1301
புள்ளி:  514

என்னைப் பற்றி...

பொதுத்துறை நிறுவனத்தில் முதுநிலை கண்காளிப்பாளர்இணையத்தில் கதை , கட்டுரை, கவிதை போன்றவற்றை வெளியிடுகிறேன்.rnதஞ்சை ஓவியம், புடைப்புச் சித்திரம், சிலைகளில் கற்கள் பதிப்பது போன்ற இதர நற்பொழுதுபோக்குக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.rnநண்பர்களின் அழைப்பின் மூலம் வாழ்க்கைக் கல்வி பற்றி சிறுவர் பள்ளி, நூலகங்களில் சிற்றுரையும் ஆற்றி வருகிறேன்.

என் படைப்புகள்
கவிஞர் பெருவை பார்த்தசாரதி செய்திகள்

அனேகமாக நவம்பர் 18  க்குப் பிறகு, நான் பிரதிலிபி தளத்தில் என்னுடைய பதிவுகளைச் செய்ய ஆரம்பித்தேன்..இதற்கு எவ்வித முக்கியக் காரணமும் இல்லை. இரண்டு தளத்தையும் என்னிரண்டு கண்கள் போலத்தான் பாவிக்கிறேன்.  எழுத்து தள வாசகர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.  ஆனால், இன்றுவரை எழுதுவதை நிறுத்தவில்லை, ஏராளமாக எழுதிவிட்டேன். இந்த ஒருவருடத்தில் நிறையப் பட்டங்களும், பரிசுகளும், சான்றிதழும் பெற்று விட்டேன்.   


எழுத்து தளத்தில் மதிப்பிற்குரிய சர்பான், ஆவுடையப்பன், கவின் சாரலன், பழனிக்குமார் மற்றும் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்னுடைய படைப்பிற்கு விமரிசம் எழுதியோர் அனைவருக்கும் நன்றி. இவர்கள் யாவரையும் ஒருபோதும் மறக்க இயலாது..   இதையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு,  சட்டென்று மீண்டும் எழுத்து தளத்தில் பதிவிட்டால் என்னவென்று தோன்றியது, இப்பொழுதெல்லாம், நான் புதுக்கவிதையிலிருந்து முற்றிலும் மாறி, முழுவதும் இலக்கண மரபுப்படி எழுதிவரும் கவிதைகளே அதிகம் எனலாம்.  தற்போது புலனங்களில் அதிகளவு பங்கெடுத்து வருகிறேன். உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்று எழுதிய வெண்பாவோடு மீண்டும் எழுத்து தளத்தில் பதிவை ஆரம்பிக்கிறேன்.

  18-06-19, செவ்வாய்க் கிழமை

கவிஞர்கள் சங்கமம் என்கிற புலனத்தில்  கொடுத்த தலைப்பு:: *கவிஞன்*

=================

எழுத்தாணி கொள்வான்.! எதையுமே ஆள்வான்.!

எழுத்தே உயிரென ஏற்பான்.! - எழுத்தால்

புவியை அடிமைப் படுத்தும் செயலெ

*கவிஞனெனும் சொல்லுக் கழகு*

=================
இரு விகற்ப
நேரிசை வெண்பா
=================

இதை வெவ்வேறு  புலனத்தில் வெளியிட்டபோது, அதிக அளவில் பாராட்டுப் பெற்ற வெண்பா.

உலகத்தில் சாதனை புரிவோர், ஏதோவதொரு வகையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டித்தான் அச்சாதனையைப் புரிகின்றனர். அது எவ்விதமான கலையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். மலையேற்றம், விளையாட்டு, அறிவியில், கண்டுபிடிப்பு இப்படிப் பலவற்றுள் தன்னுடைய எழுத்தால் உலைகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த எழுத்தாளன், கவிஞன் உலகத்தில் ஏராளம். எழுத்தால் புரட்சி செய்த, எழுத்தால் பிரபலமான, எழுத்தால் உலகை ஆண்ட பலரை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். நினைவில் வருபவரை பிறருக்கு அடையாளம் காண்பிப்போம். இப்படிச் சாதனை புரிந்தோரை, உங்கள் நினைவுகளில் கொண்டு வாருங்கள்.. நன்றி..

கவிஞர் பெருவை பார்த்தசாரதி  

மேலும்

தீபஒளித் திருநாளே வருக..!
===============================

நீலவானில் நிலவொளியும் மறைந்த பின்னே
..........நீர்கொண்டு வாசலிலே சுத்தம் செய்து
கோலமிட்டு மங்கையர்கள் அழகு செய்து
..........கும்பிடவே வரிசையிலே விளக்கு வைப்பார்
ஆலயமும் திறந்திருக்கும் முழுதும் அன்று
..........அன்பையுமே பகிர்ந்திடவே இனிப்பும் உண்டு
காலத்தே வழிபடும்நம் குலத்தின் தெய்வம்
..........கனிந்தருளும் கணக்கிலா அருளை ஈந்து..!


ஆபரண ஆடையொடு அழகு சேர்க்க
..........அன்புமழை வாழ்த்தாகப் பொழிய விக்க
சாபங்கள் சங்கடங்கள் விலகி ஓடும்
..........சரித்திரமே இதற்கான பதில் சொல்லும்
பாபங்கள் நீங்கிடவே பண்டி கையாம்
.......

மேலும்

நவராத்திரி
=============

பெண்களுக்கே உரித்தான பெருமைமிகு விழாவாகும்.!
……….கண்குளிரக் காட்சிதரும் கொலுப்பொம்மை வண்ணமுடன்.!
எண்களாக வரிசையிலே இயற்கையாக வீற்றிருக்கும்.!
……….எண்ணற்ற பொம்மைகளும் எவ்வளவு அழகுபாரீர்.!

தோள்முழுதும் சுமக்கின்ற தொழிலாளர் விற்பனையில்
……….தாள்சுற்றிப் பொம்மைகளைத் தன்தலையில் சுமப்பாரே.!
ஆள்சேர்த்து வழிபடவும் அன்பான வரவேற்பில்..
……….நாள்முழுதும் மகிழவரும் நவராத்ரி ஒன்பதுநாள்.!

திண்டாடி பொம்மைவைக்கத் திணரடிக்கும் வேலைதானே.!
……….கொண்டாட்டம் அதிலுண்டு களைப்பெல்லாம் மறந்துபோகும்
பெண்களுடன் குழந்தைகளும் பெருமையுடன் குதூகலிக்க..
……….சுண்டலில்லா நவராத்ரி சுகம

மேலும்

இன்று புலனத்திலும், தொலைக்காட்சியிலும் நிகழும் *விவாதமேடை* எதுவாயினும் அது பெரும்பாலும் சங்கடத்துள்ளாக்கி விடுகிறது. காரசாரமான விவாதத்தில் "எங்கே கைகலப்பு" நிகழ்ந்து விடுமே என்கிற அச்சமும் எழுகிறது. சிலசமயம், கேள்விகேட்க வேண்டுமென்பதற்காக மற்றொருவர் மேல் ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அள்ளி அடுக்குகின்றனர் பங்கேற்க வருவோர்.


*விவாத மேடை*
================

ஏதாவ தொன்றெழுதத் தெரிந்து கொண்டு
..........எல்லாமும் நாமறிவோம் எனவும் கொண்டு

தீதாகும் சொல்லென்று தெரிந்தி டாமல்
..........தீங்கிழைக்கும் என்றறியாத் தமிழில் திட்டி

பாதகமாய் வார்த்தைகளைப் பரவ விட்டே
..........பல்லோரை வம்பாலே பகைய

மேலும்

கருத்துரைக்கு நன்றி திரு ரவி அவர்களே.. இன்னும் சற்று விரிவாக விவாதத்தைப் பற்றியும் சொல்லலாம். விவாதம் என்பது நீங்கள் சொல்வதுபோல் போட்டி என்றே கொண்டாலும், அதன் முடிவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்பதே இப்பாடலின் உட்கருத்து.. 05-Oct-2018 9:59 am
விவாதம் என்பதே ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு பேசுவதென்பதாயிரு இதை நாம் அன்றாடம் கவனித்து உணரலாம் 03-Oct-2018 4:53 pm

இன்று புலனத்திலும், தொலைக்காட்சியிலும் நிகழும் *விவாதமேடை* எதுவாயினும் அது பெரும்பாலும் சங்கடத்துள்ளாக்கி விடுகிறது. காரசாரமான விவாதத்தில் "எங்கே கைகலப்பு" நிகழ்ந்து விடுமே என்கிற அச்சமும் எழுகிறது. சிலசமயம், கேள்விகேட்க வேண்டுமென்பதற்காக மற்றொருவர் மேல் ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அள்ளி அடுக்குகின்றனர் பங்கேற்க வருவோர்.


*விவாத மேடை*
================

ஏதாவ தொன்றெழுதத் தெரிந்து கொண்டு
..........எல்லாமும் நாமறிவோம் எனவும் கொண்டு

தீதாகும் சொல்லென்று தெரிந்தி டாமல்
..........தீங்கிழைக்கும் என்றறியாத் தமிழில் திட்டி

பாதகமாய் வார்த்தைகளைப் பரவ விட்டே
..........பல்லோரை வம்பாலே பகைய

மேலும்

கருத்துரைக்கு நன்றி திரு ரவி அவர்களே.. இன்னும் சற்று விரிவாக விவாதத்தைப் பற்றியும் சொல்லலாம். விவாதம் என்பது நீங்கள் சொல்வதுபோல் போட்டி என்றே கொண்டாலும், அதன் முடிவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்பதே இப்பாடலின் உட்கருத்து.. 05-Oct-2018 9:59 am
விவாதம் என்பதே ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு பேசுவதென்பதாயிரு இதை நாம் அன்றாடம் கவனித்து உணரலாம் 03-Oct-2018 4:53 pm

வாரணமுகத்தோனே போற்றி,,!விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன் 

தந்தை சொல்லைத் தட்டாது நடந்த தரணீதரன்  

தொந்தியும் பருத்த தொடையும் கொண்ட துதிக்கையோன்  

எந்தையாம் யாவர்க்கும் எளிய கடவுளாம் ஏகதந்தன்       

============
கலித்து றை
============

பெருவை பார்த்தசாரதி

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதிற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 18-Sep-2018 5:46 pm
ஏகதந்தன் வணக்கம் அருமை 13-Sep-2018 6:27 pm

ஆசிரியர் தினம் = 05 - 09 - 2018 


ஆசானை அடிபணிவோம்..!
===========================    

 வரும்நல் வாழ்வும் வளமாய் அமைய வழியை விளம்பும் வல்லாசான்.!  
............ வருவாய் பெருகும் வகையில் படிக்க வழியும் சொல்லும் வகுப்பாசான்.! 


கருவாய் உயிராய் கண்ணூம் கருத்தாய்க் கடிதே உணர்ந்து கடமையாற்ற..
............கடினச் செயலாம் கல்வி பயிலக் கற்கும் ஆவல் கரையவில்லை.!  


எருவாய் உரமாய் எதுவும் புரிய எளிதில் அறிய எடுத்துரைத்து..
............ எங்கோ படித்தும் எதையோ படித்தும் என்றும் நினைவில் எம்மாசான்.!

குருவாய் நின்று குலமும் தழைக்கக் குணவான் ஆக்கும் குருவருளே.!
............குன்றாப் புகழும் குவித்த விருதும் குடும்ப உறவும் குறைவிலையே.!

======================
கழிநெடிலடி விருத்தம்  
======================

மா = மா = மா = மா = மா = மா = காய்  

மேலும்

இன்றைக்கு வாட்ஸ் அப் தகவல்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை, தினமும் சாப்பிடுகிறோமோ அல்லது தூங்குகிறோமோ ஆனால் வாட்ஸ் அப் தகவல்களைப் பார்ப்பதால், நம் பொன்னான நேரமெலாம் வீணாகிறது.

அப்படி ஏதாவது நல்ல விஷயமானாலும் பரவாயில்லை, வந்தததே திரும்பத் திரும்ப வருகிறது, ஒருவர் அனுப்பியதையே மற்றொருவர் அனுப்புகிறார். தொல்லைகளே அதிகம். குப்பைகள் குவிகிறது, வைரங்கள் காணாமல் போகிறது. என்ன செய்வது, முடிவில் ஸ்மார்ட் போன் வேண்டாமென்று சாதா போனுக்கே மாறிவிடும் நிலமை அவலம்.

===================================================

புலனத்துள் புழுக்களெலாம் புதியெனவாம் என்றுசொல்லி

பலவகையாய்க் குப்பைகளுள் பக்கு

மேலும்

கவிதைப் புலனக் குழுமத்தில், வெண்பா போட்டி அறிவிக்கப் பட்டது, முதலிரண்டு அடி கொடுத்தபின் பின்னிரண்டு அடி எழுதவேண்டும். நேரிசை வெண்பா மட்டுமே எழுதவேண்டும். நான் எழுதிய வெண்பாக்கள் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கொடுக்கப்பட்ட முன்னிரண்டு அடியைத் தொடரும்போது அது "ஆசிரியரைப் பற்றி" இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்ட விதிகளில் ஒன்று.

வெண்பா=1
=========
கல்வியில் பக்தியும் கற்பதில் புத்தியும்

வெல்வதில் வீரமும் வேண்டிடச் - சொல்லாசான்

ஆற்றலைக் கண்டுணரக் கேட்டதும் ஏற்றுக்கொள்.!

போற்றி யவரைப் புரிந்து.!

============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
===============

மேலும்

மிக்க நன்றி அய்யா, நீங்கள் கூறியதுபோல் "உனை" என்று போடலாம்.. ஆனால் மோனை ஒன்ற வேண்டும் என்பதற்காக 'கலையுலகம் வாழ்த்தும் கலை' என்று "க" விற்கு அதே "க" என்று வரும்படி அமைத்தேன். இதுவும் ஒரு வகை அய்யா...மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி அய்யா.. 25-Aug-2018 11:48 pm
அருமை அருமை எதுகை ஏந்தலே நன்கு பாக்களையும் நேரிசையில் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் மூன்றாவது மிக அழகு அதில் ஈற்றுச் சீரை உனை என்று அமைத்துப் படித்துப்பாருங்கள். 24-Aug-2018 9:27 pm

கவிதைப் புலனக் குழுமத்தில், வெண்பா போட்டி அறிவிக்கப் பட்டது, முதலிரண்டு அடி கொடுத்தபின் பின்னிரண்டு அடி எழுதவேண்டும். நேரிசை வெண்பா மட்டுமே எழுதவேண்டும். நான் எழுதிய வெண்பாக்கள் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கொடுக்கப்பட்ட முன்னிரண்டு அடியைத் தொடரும்போது அது "ஆசிரியரைப் பற்றி" இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்ட விதிகளில் ஒன்று.

வெண்பா=1
=========
கல்வியில் பக்தியும் கற்பதில் புத்தியும்

வெல்வதில் வீரமும் வேண்டிடச் - சொல்லாசான்

ஆற்றலைக் கண்டுணரக் கேட்டதும் ஏற்றுக்கொள்.!

போற்றி யவரைப் புரிந்து.!

============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
===============

மேலும்

மிக்க நன்றி அய்யா, நீங்கள் கூறியதுபோல் "உனை" என்று போடலாம்.. ஆனால் மோனை ஒன்ற வேண்டும் என்பதற்காக 'கலையுலகம் வாழ்த்தும் கலை' என்று "க" விற்கு அதே "க" என்று வரும்படி அமைத்தேன். இதுவும் ஒரு வகை அய்யா...மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி அய்யா.. 25-Aug-2018 11:48 pm
அருமை அருமை எதுகை ஏந்தலே நன்கு பாக்களையும் நேரிசையில் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் மூன்றாவது மிக அழகு அதில் ஈற்றுச் சீரை உனை என்று அமைத்துப் படித்துப்பாருங்கள். 24-Aug-2018 9:27 pm

*கலை* என்று ஆரம்பித்து
*தலை* என்று முடியும் நேரிசை வெண்பா*

==============================

கலைகள் பலவும் கசடறக் கற்கக்

கலைவாணி தந்த கருணை - கலைமகளை

வாள்போல் வளைந்தே வணங்கி யவள்பாதம்

தாள்ப ணியுமாம் தலை..!

============================

இரு விகற்ப நேரிசை வெண்பா

மேலும்

Due to unicode problem i am unable to reply in tamil. So much of thanks about your reply and remake the venba with correct words.. thanks..kavin saralan ..geee 08-Aug-2018 12:51 pm
----உங்கள் கவிதையைக் கலையில் தொடங்கி கலையில் முடித்திருக்கிறேன் ---என்று படிக்கவும் . 06-Aug-2018 5:41 pm
கலைவாணி தந்த கருணை----வாக்கியம் முற்றுப் பெறவில்லை . கலைவாணி தந்தாள் கருணை ----பொருந்தும் யவள்பாதம் தாள்ப -----பாதம் தாள் ----ஒரே பொருளே -----------------------------------------------யவள்மலர்த் தாள்ப ணியுமாம் தலை. ----என்று அமைக்கலாமே ? கலைகள் பலவும் கசடறக் கற்கக் கலைவாணி தந்தாள் கருணை - கலைமகளை வாள்போல் வளைந்தே வணங்கி யவள்மலர்த் தாள்போற்றும் என்சொற் கலை ----உங்கள் கவிதையைக் கலையில் கலையில் முடித்திருக்கிறேன் 06-Aug-2018 5:37 pm

திங்களே வா..!...30-07-18
=====================

சிந்தை குளிரவே
.............. சந்திரனாய் வருகிறாய்
விந்தை ஒளிதர
............. விண்ணில் உலவுவாய்
மந்தை காப்பாய்
............. மண்ணுயிர் நிலைக்க
தந்தை..சூரியனாம்
.............தாயாகச்..சந்திரனாம்

பெருவை பார்த்தசாரதி

மேலும்

மேலான கருத்துப் பதிவுக்குத் தாமதமான நன்றி.. அய்யா 16-Aug-2018 7:08 pm
நிலவை பாவையாக சொன்னவர்கள் மத்தியில் தாங்கள் அதை தாயாக சொல்லியிருக்கின்ரீர் உங்களின் புதுமையான கருத்திற்கு என் வாழ்த்துக்கள் 12-Aug-2018 8:38 pm
கருத்துப் பதிவுக்கு நன்றி மதிப்புமிகு கலைப்பிரியை.. 31-Jul-2018 8:09 pm
தித்திக்கும் திங்கள் திகைக்கவைக்கும் திங்கள் அருமை தோழரே... 31-Jul-2018 3:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (89)

தமிழன் சத்யா 😉

தமிழன் சத்யா 😉

மடத்துக்குளம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (92)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே