kalaipiriyai - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kalaipiriyai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 336 |
புள்ளி | : 107 |
ZEBRA லைனில் நடந்து வந்தவளை
கையைப் பிடித்து இழுத்தேன்
நன்றி சொன்னாள் !
கையைப் பிடித்து இழுத்தத்திற்காகவா ?
சிக்னலை கவனிக்காமல் வந்த போது
குப்பென்று சாலை வாகனங்கள் கிளம்பிய
அந்த நொடியில் ...காப்பாற்றியதற்காக !
முகத்தில் அதிர்ச்சி நெஞ்சில் கைவைத்தவாறு
கடவுள் காப்பாற்றினார் என்றாள்
ஒரு நொடியில் மறந்து விட்டீர்களே ...!
நானல்லவா காப்பாற்றினேன் என்றேன்
வெட்கத்துடன் சிரித்தாள்
மீண்டும் நன்றி சொன்னாள் ....விடை பெற்றாள் !
எங்கோ நீ இருக்க
.....உன் நினைவில் நான் திளைக்க
நிகழ்காலம் கனவானது
.....எதிர்காலம் நிஜமானது
-கலைப்பிரியை
எங்கோ நீ இருக்க
.....உன் நினைவில் நான் திளைக்க
நிகழ்காலம் கனவானது
.....எதிர்காலம் நிஜமானது
-கலைப்பிரியை
பச்சை மலை ஓரம்
பாடி வரும் தென்றல்
பார்க்க அவளும் வந்தாள் !
மார்கழிப் பனியில் நனைந்தனர்
மல்லிகையும் சூடிய அவளும்
புள்ளிக்கோலம் சிலிர்த்தது புன்னகையில் !
வெண்நிறப் பூக்கள் வானெங்கும்
வெண்ணிலா மலரும் வந்தாள்
நானுமவளும் வந்தோம் நிறைவுசெய்ய !
கோடையில் உதகைகொடை சொர்க்கம்
குளிரில் சிம்லாகாஷ்மீர் சொர்க்கம்
மாலையில் அவள்வரின் மெரீனாவே சொர்க்கம் !
குளிரில் உல்லன் ஸ்வெட்டர்
காணாததிற்கு தலையில் மங்கிகுல்லா
நடந்தேன் டார்வின்தியரியின் நிஜமாக !
வயல்செழிக்கப் பாயும் வாய்க்கால் ஓடை
பயிர்வளரப் பாடுவாள் தெம்மாங்கு
நிலமகள் நிமிர்ந்து நிற்பாள் நெல்நிறை கதிரோடு !
காணும் விளக்கெல்லாம்
......கலங்கரை விளக்கல்ல
உதட்டின் வார்த்தைகள் எல்லாம்
......உண்மையின் பிறப்பும் அல்ல!!!!
காணும் விளக்கெல்லாம்
......கலங்கரை விளக்கல்ல
உதட்டின் வார்த்தைகள் எல்லாம்
......உண்மையின் பிறப்பும் அல்ல!!!!
அடங்கிப் போனால்- நீ
.......அண்டத்தின் அடிமை
நிமிர்ந்து நின்றால்- நீயே
.......நிகரற்ற தலைவன்.
கலைப்பிரியை
கடலளவு எண்ணம் கண்டு
கலங்காத உள்ளம் கொண்டு
திடமான வாழ்கை என்று
எதிர்காலம் நமக்குமுண்டு
ஏன் இந்த மயக்கம் என்று
விளங்காத மர்மமுண்டு
தேற்றுதற்கு நானுமுண்டு
சொல்வதற்கு கடவுளுண்டு
அணுகாத வெற்றியுண்டு
அனுபவிக்க நேரமுண்டு
வியக்க வைக்கும் செயலும் கண்டு
வீறுகொண்டால் வெற்றியுண்டு
விமானம் தாழ்வாகப் பறக்குது என்று
தலை மேல் கை வைப்பதுண்டு
மேகம் முட்ட பறப்பது கண்டு
அண்ணாந்து வியப்பதும் உண்டு
வாழ்வென்றால் நிஜமும் என்று
வையகத்தில் நினைப்பர் உண்டு
நாம் வந்தேறு குடிகள் என்று
நினைப்பவர் எவருமில்லை இன்று
வாழ்வு நிலைக்கும் எண்ணம் கொண்டு
மனி
அதிகாலை நேரம்
அதிசிரத்தையெடுத்து
அன்ன நடை நடந்து செல்ல
ஆதவனை வரவேற்கும்
ஆசை பறவைகளின் இசை கேட்டேன்!
ஊர் விழிக்கும் முன்பு
உணவு தேட செல்லும்
உற்சாக பறவைகளின் இசை கேட்டேன்!
சஷ்டி கேட்கும் முன்பு
உங்கள் சங்கீதம் கேட்டேன்!
உள்ளம் கொள்ளை கொண்ட
உலகம் சுற்றும் பறவைகளே!
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.......
இரவெல்லாம் இணையவெளியில்
........வலம் வரும் எம் இளைஞனர்க்கு
இதயம் கற்க இயம்பிடு.....
புரிதலும் விட்டுக்
கொடுத்தலும்
இன்றி வழக்காடும்
கணவன் மனைவி
சண்டையாய்
காவிரி பிரச்சனை
சேர்த்துவைக்க
முயற்சிக்காது
கலகம் செய்யும்
உறவுகளாய்
சில சுயநலமிகள்
நிர்கதியாய் நிற்கும்
பிள்ளைகளாய்
விவசாயிகள்
அரசியல்
ஆதயத்திற்காக
ஊமையாய் நிற்கும்
ஆட்சியாளர்கள்
வளரும் இந்தியா!
கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணை
கைய்யில் இருக்கு
காவிரி நீர்
தடையின்றி பாய
ஏதேனும்
வழியிருக்கா?
வளருமா இந்தியா?
ஒற்றுமையின்றி
போனால்?
நா.சே..,
பேசவில்லை நீ
கோபங்கள்...
தனியே நீயும்
தனியே மனமுமாய்...
திட்டி தீர்க்கிறாய்
என்னுள் உன்னை...
ஆவலில் குழைந்த
தொல்மனம் விசும்பி
வீங்கி நெருக்கிடும்
நாணத்தின் சாயலிது.
என்மீது சாய்ந்து நீ
வடிக்கின்ற கண்ணீர்
என் தோள் நனைக்கும்
சலனத்தின் வெப்பமாக.
சட்டென எழுந்து
ஒற்றை குருவியென
தத்திச்சுற்றி வருவாய்.
கால் புதையும் மணலில்
மௌனம் புதையுமா?
கிளைப்பறவை கண்டு
ஓரவிழி காட்டுகையில்
என் புருவ நெளிவில்
ஒளிந்திடும் சிரிப்பினை
ஊடும் உன் கண்கள்
கவர்ந்து காட்டிவிட்டது.
கண்ணீரின் இத்துளியும்
காதலின் தீர்த்தமா?
கனவில் சிலிர்த்த
மழலையின் அகமுறுவலா?
When Silence from the edge of your Eyes
Came Smiling opening the Screen of your Red Lips
A Colorful Brook broke through my Heart
Some Say it is a Poem
Some Say it is Love
I Say it is your Mercy.