முப்படை முருகன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : முப்படை முருகன் |
இடம் | : கமுதி |
பிறந்த தேதி | : 13-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 2292 |
புள்ளி | : 129 |
8489305802
ஈருதடும்
உரசிப் பார்க்கிறது
வார்த்தைகளை...
அது
உனது பெயராய்
இல்லாததால்...!
பிரிந்து விடுகிறது
உன்மீது
கொண்டகாதல்
என்னுதட்டையும்
உருக்குலைக்குதடி
நீயோ...!
அவள் வேண்டுமென்று
தவிக்கிறாய்...
அவளோ...!
நீ வேண்டாமென
தவிர்க்கிறாள்...!
காதலுக்கு இதுதானே
காரணம்.
கண்ணிலே...!
சொர்க்கத்தை வைத்து
சொல்லிலே...!
நரகத்தை வைத்தான்
இந்தப் பெண்மைக்குமட்டும்
கடவுளின் புதிரே...!
தனித்துவமானது தான்.
காயங்களை மறைப்பதில்
கை தேர்ந்தவர்கள்
களையர்களே...!
இல்லையேல்
இச்சமூகம் அவர்களை
கோழையர்கள்
என்றுரைக்கும்.
நீர் குமிழியாய்
இருந்த என்னை
தீப்பொறியாய் ஆக்கியதே...!
உனது கவிதை
நீ...
பாரதியல்ல
என்னை எழுதவைத்த
தீ....
குகையில்...
குடிலமைத்து
கோபுரத்தில் தவமிருந்து
ஆயக்கலை வளர்த்தவன்
பழந்தமிழன்...
மங்கைக்குத்
தங்கையென
மகத்தான பெயர் கொடுத்தவன்
பழந்தமிழன்...
இக்கால தமிழனோ...
தங்கைக்கு விலைபேசி
தங்கத்தைப் பொருளாக்கி
விபச்சார விடுதிகட்டி
விதிகள் பல கொடுக்கிறான்...!
பெண்மானம் உயிரென்றும்
தன்மான உணர்வென்றும்
கருவறை தாண்டும் முன்பே
கற்பிப்பவன்
பழந்தமிழன்...!
இக்கால தமிழனோ...
அக்காலம் மறந்து
அக்காவை மறந்து
உக்கார்ந்து சிரிக்கிறான்
உலகம் போல் அவனும்
அவன் பிறந்த
மண்ணில் தானே
நீயும் பிறந்தாய்...
அவனுடம்பில்
செங்குருதி
உன்னுடம்பில்
அது நிறம்பி
இனி...
வழிந்தோடும் வழியெங்கும்
இரண்டு சூரியனை
இமைக்குள் வைத்தவளே...!
ஒரே ஒருநாள்
எனைக்கண்டு இமைக்கமறந்தாய்...
இன்றுவரை
எரிந்து கொண்டிருக்கிறேன்
உன் விழியென்னும்
விஷத்தீயில்...!
ஏழைகளை ஏமாற்றாத
ஒரே இறைவன்...
கனவும் கற்பனையுமே...!
எட்டாதவற்றையெல்லாம்
எட்டிடுவர்
இவ்விரண்டில்.
பொய்யை அதிகமாக பேசுபவர்கள் நாத்திகர்களா ஆத்திகர்களா?
நானும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்...
ஆனாலும் இயலவில்லை
உனக்கு நான்கொடுத்த
அந்த முதல்
காதல் கவிதையினை மிஞ்ச...!
ஒருநாள் மட்டுமே
பிறக்கும் மனிதா...
நீ...
ஒவ்வரு நாளும்
இறப்பது முறையா
சரியோ தவறோ
சாதனை வேண்டும்
முறையாய்ப் பயின்று
மேகத்தைத் தாண்டு
எத்தனை நாளடா
இழிவுகள் கண்டோம்
ஏளனச் சிரிப்பாள்
நாட்களை கொண்டோம்
உறங்கிய போதும்
உலகம் உருளும்
நீ...
உருளாதிருந்தால்
பிறந்தது ஏனோ
கருவறை உதைத்து
பூமிக்கு வந்தாய்
இன்று...
கல்லறை உடைத்து
எழடா மனிதா...!
புழுவாய்ப் பிறந்தால்
புரளத்தான் வேண்டும்
எலியாய்ப் பிறந்தால்
தனிவலை வேண்டும்
பாம்பாய்ப் பிறந்தால்
சீறதான் வேண்டும்...!
மனிதனாய் பிறந்தால்
மாறத்தான் வேண்டும்
எத்தனை தோல்வியோ
எண்ணி வைத்துக்கொள்
எண்ணிக்கை