உமா - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : உமா |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 12-Dec-2017 |
| பார்த்தவர்கள் | : 3014 |
| புள்ளி | : 354 |
விண்ணை ரசித்து கொண்டே
மண்ணில் நடக்க பழகி கொண்டேன்
சின்னசிறு உலகமாய் என் எண்ணங்களை மாற்றி கொண்டேன்
வெற்று இடமாய் இருண்ட ஒளியாய்
இருந்தவைகள் பூந்தோட்டமாய்
பிரகாசமாய் மாறின...
சந்தோசமான வாழ்வில் மகிழ்ச்சி
என்றென்றும் ..
உன் வாழ்க்கையை நீயே உருவாக்கு....
குமுறல்
27 / 07 / 2025
பால்வெளியில் உலாவரும் சூரியனும்
பாலெனவே குளிரூட்டும் தேன்நிலவும்
தேகம் தழுவும் தெக்கத்தி காற்றும்
'மா' கொடையாய் நீர்வார்க்கும் வான்மழையும்
மிதிப்பட்டாலும் நமைதாங்கும் இப்பூமி பந்தும்
எதிர்பாத்தா எதையும் செய்கின்றன?
ஈனப்பிறவி மனிதன் மட்டும்தான்
ஒவ்வொன்றிற்கும் பலன் எதிர்பார்க்கிறான்.
கிடைக்கவில்லை என்றால் புழுங்கிச் சாகிறான்.
இயற்கையை கண்டும் பாடம் படிக்கவில்லை
இயற்கையை வென்றிட வன்மம் குறையவில்லை
செயற்கையில் வாழ்வினை முழுக்கி விட்டான்
செயற்கையாய் வாழ்ந்து முடங்கி விட்டான்.
உலகமெலாம் உனக்கிருக்க
உயர்வு அங்கு காத்திருக்க
விடியலின் புது ஒளியாக
உன் வாழ்வில் சிறந்திடவே
நன்னீரின் தெளிவுடனே
பன்னீர்தரும் மணம்போல
ஒழுக்கம் நற்குணத்துடனே
இன்றினைப்போல் என்றென்றும்
பல்லாண்டு மகிழ்ந்திருக்க
அழகுதமிழ் சொற்களினால்
புகழ்மாலை கோர்த்தெடுத்து
புவிவந்த திருநாளில்
மனதார வாழ்த்துகிறேன்..
சிறகடித்து பறக்கும் காலம்
அன்பை பகிரும் காலம்
அணைத்து மகிழும் காலம்
கல்வி கற்பதும
கற்பனையில் மிதப்பதும்
கதைகள் பிறப்பதும்
காதலில் தவழுவதும்
அன்பில் அணைப்பதும்
ஆனந்த கடலில் திளைப்பதும்
கல்லூரிக் காலம்
எத்தனை காலங்கள் வந்தாலும்
கல்லூரிக் காலம் போலாகுமா /
நினைப்பதெல்லாம் நடத்திடும் காலமது
அதில் கல்வியா செல்வமா வீரமா /
அத்தனையும் அத்துப்படி
நினைத்தாலே இனிக்கும் காலம்
கல்லூரிக் காலம்
அன்று நடந்ததெல்லாம் இன்று போல்
இனிமையாய் தித்திக்கிறதே
கல்வியில் ஊக்கம்
கற்பனையில் ஏக்கம்
எல்லாமே சுகமான காலம்தான்
கல்லூரிக் காலமது
கவலைகள் ஏதுமின்றி கல்லூரியில்
மழை குடை விரித்த வானம்
சுயநலம் இன்றி
அனைவரையும் போர்த்தி நனைந்தது
-மனக்கவிஞன்
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*பிரிவாழும்*
*பிரிக்க முடியாதது...*
*மறதியாலும்*
*மறக்கடிக்க முடியாதது...*
*பணத்தாலும்*
*வாங்க முடியாதது...*
*கோபத்தாலும்*
*வெறுக்க முடியாதது..*.
*காலத்தாலும்*
*அழிக்க முடியாதது*
*உண்மையான*
*நட்பு மட்டுமே....!*
நட்புடன்🤝
*கவிதை ரசிகன்*
~குமரேசன்~
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*பிரிவாழும்*
*பிரிக்க முடியாதது...*
*மறதியாலும்*
*மறக்கடிக்க முடியாதது...*
*பணத்தாலும்*
*வாங்க முடியாதது...*
*கோபத்தாலும்*
*வெறுக்க முடியாதது..*.
*காலத்தாலும்*
*அழிக்க முடியாதது*
*உண்மையான*
*நட்பு மட்டுமே....!*
நட்புடன்🤝
*கவிதை ரசிகன்*
~குமரேசன்~
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
📝📝📝📝📝📝📝📝📝📝📝
*காகிதம் தினம் இன்று*
*காகிதம் ஓர் ஆயுதம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
📝📝📝📝📝📝📝📝📝📝📝
#காகிதம்
மூங்கிலை
புலலாங்குழலாக்கி
வாசித்த போது
ஆனந்தம் பிறந்தது... ..|
காகிதமாக்கி
வாசித்தப் போது
அறிவு பிறந்தது.....!
எழுதாத வரை தான்
அது காகிதம்
எழுதிவிட்டால்
அதுவே ஆயுதம்.....!
ஆரம்ப காலத்தில்
எழுத்துக்களை
மண்ணில்
உட்கார வைத்ததால்
புழுதி படிந்துக் கிடந்தது...
இடைக்காலத்தில்
பனை ஓலையில்
ஊசியால் குத்தி வைத்ததால்
காயம்பட்டிருந்தது...
இறுதியாக
காகித்தில்
படுக்க வைத்தபோதுதான்
சுகமாக ஆனந்தமாக
எழுத்து வாழ்கிறது....
காதல் கடிதம் ஆகும்
பூத்து குலுங்கும் மரமே
காற்றோடு அசைய நீ சிரிக்கும்
சத்ததை நான் உணர்ந்தேன்
கடல் அலைகள் மோதி தென்றல்
காற்று கலக்க நீ சந்தோஷமாய்
இருப்பாய் நான் உணர்ந்தேன்
அனல் பறக்க நீ யோசிக்கும்
தருணங்கள் வார்த்தைகளை
வெளி வர உந்தன் விழி மூடா
வெற்றி பயணங்கள் கடக்க
போராடி கொண்டிருப்பதை உணர்ந்தேன்..
உன் பயணத்தில் நான் என்றும்
பார்வையாளரே..
முயற்சிக்கு என்றும் பலன் உண்டு
காற்றை கிழித்து செல்லும்
வானுர்த்தியை போல
கடலை கழித்து செல்லும்
கப்பலை போல
கூர்மை கொண்ட அறிவால்
புகழ் என்ற இலக்கு என்றும் உனதே
விழி மூடி நின்று பாதையை தேடாதே
உனக்கென்ற ஒன்று என்றும் உண்டு
உனக்கென்ற வாழ்வில்
எனக்கென சில வரிகள் தந்து
செல்கிறாய்...
கண்கள் இமைக்கும் தருணத்தில்
எத்தனை விதைகள் முளைக்கிறது
எத்துணை மரங்கள் அழிகிறது
சாதனைக்கு பல நாள் உழைப்பு
வேண்டும்
கீழ்நோக்கி செல்ல ஒரு நொடி போதும்
நல்லவராய் வாழ பலரின் நம்பிக்கை
தேவை
கெட்டவராய் இருக்க ஒரு நொடி பொழுது போதும்
நீடித்து செல்ல பல வித போராட்டங்களை கடக்க வேண்டியுள்ளது..
வாழ்வில் உனது என எதுவும் இல்லை
உன்னை நிருப்பித்து கொண்டே இருக்க போராடி கொண்டே இரு..
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..