உன்னில் இருந்து தொடங்கட்டுமே
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..