krishnan hari - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11681 |
புள்ளி | : 5725 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
கவிதை என் பார்வையில்...
ஒவ்வொரு வார்த்தைக்கும்
தேடி அலைந்து முட்டி மோதி
உருவாகி வருவதல்ல கவிதை என்பது
மனதின் ஊற்றாய் ஒடும் அருவியாய்
இயல்பாய் வந்து ஜனிப்பதே கவிதை...
எல்லா கவிதையும் எழுதுவோர் பார்வையில் ஒரு அர்த்தமும்
வாசிபோர் பார்வையில் ஒரு அர்த்தமும்
கொண்டே முடிகிறது கவிதைகள்.
எழுதுகோல் வைத்து
காகிதத்தில் எழுதாமல் போனாலும்
பார்வையில் படும் எதோ அழகு ஒன்று
தூவி விட்டு செல்கிறது
எத்தனையோ கவிதைகளை...
எழுத மறந்த கவிதைகளே
ஏராளம் ...
எனைபோன்ற கத்துகுட்டி கவிஞனுக்கு
இயல்பாய் தோன்றும் கவிதை
எழுதாமல் போன பின்பு
எத்தனை முறை யோசித்தும்
திரும்ப அமைவதில்லை
கவிதைகளின் வார்த
வலிகள்தான் வாழ்க்கை என
வற்புறுத்தி சொல்கிறது விதி
என்றேனும் மாறாதோ...மனதில்
ஏக்கம் மட்டும் தொடர்கிறதே ...
தினம் தினம் முயன்று
பலமுறை தோற்று
மனதால் துவண்டு
எழுகிறது என் மனமே
மறுநாள் விடியலை தேடி...
முயல்வது மட்டுமே நம்மிடையே
முடிவு முடிவாய் விதி முடிவில்
விதியோ சதியோ புரியாமல்
மதிதான் கலங்கி தவிக்கிறதே
முகங்கள் இங்கே நடிக்கிறதே...
போலி புன்னகை ஜனிக்கிறதே...
எப்போது நீ அழகு???
நிம்மதி நான் தேடி
உன்மடி சாயும்போது
என் தலை நீ கோதி
ஆறுதல் சொல்கையில்
அடி பெண்ணே நீ அழகு...
ஆயிரம் முறை முயன்று
சில முறை நான் தோற்று
தேம்பி அழும் நிலை கொண்டு
உன் தோள் நான் சாய
ஆறுதல் சொல்லும் போது
அடி பெண்ணே நீ அழகு...
அன்பாய் உன் குறு நகையும்
அம்மாவின் நினைவு சொல்லும்
உன் அன்படி ஆயிரம் வேண்டும்
எப்போதும் நீ வேண்டும்...
என்று நீ உணர்ந்து எனக்காக
நான் இருக்கிறேன் என்ற
நம்பிக்கையும் நீயும்
எப்போதும் அடி பெண்ணே
எந்நாளும் எனக்கழகு...
வருமா அடி வருமா
என் காதல் உன்னில்
எனை மறந்து நான்
ரசித்த கவிதை ஒரு பெண்ணில்
என் கவிதைக்கு உயிர் வந்ததடி
தினம் ஒரு கவிதை பயிர் செய்யும்படி
உலறலும் கவிதை ஆகும்
முதல் காதலில் ...
உலகை எதிர்க்கும் துணிவு பிறக்கும்
உன் முதல் பார்வையில்
இரண்டடி குறள்
மூன்றடி ஹைக்கூ
நான்கடி நாலடியார் ஆனால் நீயோ
ஐந்தடி புது கவிதை....
படிக்க படிக்க இனிக்கும் காதல் விதை
விருட்சமாய் தலையாட்டி கொண்டு நான்
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
வலிகள் ஆயிரம் தீர்க்க
வழிகள்தான் தேடணும்
மனதின் நெருடலை
நேர்பட பேசினால்
காயங்கள் தோன்றுமே என
தயக்கம் நம்மை தடுக்குமே
தயக்கங்கள் தடுப்பினும்
சரியென இருந்திடின்
அதே காயங்கள் திரும்புமே
மனதினை கிழிக்குமே
இதற்க்கு தீர்வுதான்
எதுவென தடுமாறும் மனதினை
கொஞ்சமாய் அழவிடு
கொஞ்சமாய் புலம்பிடு
கொஞ்சமாய் கதறிடு
கொஞ்சமாய் சிரித்திடு
பிறகு ஒரு பதில் வரும்
மனதினில் தெளிவுறும்
அப்போது முடிவெடு
அதில் தெளிவாய் இருந்திடு
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்