என்னை தேடி வருவாயா
தேடி வருவாயா
என்னை தேடி வருவாயா...
ஒரு நொடி போதுமடி நீ
என் தோள் சாய்ந்து கொள்ள
நீ காதலை மறுப்பதென்றால்
துணிவேன் என்னை மாய்த்துக் கொள்ள
உன்னை பார்த்த அந்த நொடி
என்னை தொலைத்தேன் அதே வினாடி
தொலைந்ததை தேடாமல்
உன்னை தேடி நின்றேன்
என்னை கண்டெடுக்க....
என் எதிர்கால கனவெல்லாம்
உன்னை தொடருதடி...
என் எதிர்காலம் நீயென்று
என் நெஞ்சம் சொல்லுதடி...
உனக்கும் கனவிருக்கும்
அதில் என் நினைப்பிருக்கும்
என்று கனவு கொண்டேன்
உன்மேல் காதல் கொண்டேன்....
நீ என் காதல் புரிந்து கொள்ள
என் கவிதை வாசித்து பார்
என் நேசம் உனக்கு புரியும்
காதலின் ஆழம் தெரியும்....