முதல் காதலா
முதல் காதலா
முற்றும் கோணலா
நேசம் குறையுமா
பாசம் மாறுமா
விரும்பிடும் மனசு
மாறிடும் பொழுது
காதல் வாழுமா
இல்லை சாகுமா
உண்மை நேசத்தை
சேதம் ஆக்குமா
தன்மை என்பதே
தானாய் மாறுமா
கேள்விகள் ஆயிரம்
விளைந்தால் நியாமா
தர்க்கம் தொடர்ந்தால்
வாழ்க்கை இனிக்குமா
விருப்பம் மாறலாம்
விரும்பியது மாறுமா
திருப்பம் தருவதாய்
திரும்ப செல்வதா

