Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
| இடம் | : மதுரை |
| பிறந்த தேதி | : 17-Oct-1944 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
| பார்த்தவர்கள் | : 13702 |
| புள்ளி | : 11859 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
நேரிசை வெண்பா
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு! 52
- முத்தொள்ளாயிரம், சோழன்
பொருளுரை:
கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன்; அவன் போரிட்டபோது அவன் யானையின் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள்.
நேரிசை வெண்பா
முன்கட்டு வாசலிலே மூன்றுபுள்ளிக் கோலமிட்டு
நன்னேரம் ஈதென்று நால்வர்க்கு - நன்றிசொல்லிப்
பின்நிற்கும் வேளையில் பிள்ளையாரைத் தான்வணங்கி
மென்மேலும் நாமுயர்வோம் மேல்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
அன்றன்று செய்திடும் ஆக்கமுறு காரியங்கள்
அன்றன்றே செய்துவிடின் அற்புதமே! – நன்றில்லை
நன்மையுறுஞ் செய்கைகள் நல்லபடி இல்லையெனின்
என்றைக்கும் ஏலா தினி!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
உவப்புடனே காணுகின்ற ஒய்யாரக் காட்சி
சிவப்புநிறம் மேலெனவே சேராத் - தவப்பயனாய்
வெண்மேகம் சூழ விளையாட்டுக் காட்டுகின்ற
கண்நிறைந்த காட்சி கருது!
- வ.க.கன்னியப்பன்
கோணல் தெருவையும் கோலம் அழகாக்கும்
நாணிடும் மங்கையிட்ட நல்விரல் ஓவியம்
காணக்கண் கொள்ளாத காட்சியடா வீதியில்
காணொளியில் நானெடுத்தேன் காண்
தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட
நன்றி நவின்றன நந்தவன நற்பூக்கள்
புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட
என்னென்று சொல்வேன் எழில்
தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட
நன்றி நவின்றன நந்தவனம் -- பொன்னிறத்தாள்
புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட
என்னென்று சொல்வேன் எழில்
பாலைவனக் காற்றினில் பாய்விரித்த வெண்மணலில்
சோலைக்கு ளிர்நீலப் பூம்பொழிலில் பெண்ணொருத்தி
காதலின் கீதத்தைப் பாடுகிறாள் நெஞ்சத்தின்
வேதனையோ யாரறி வார்
என்றோநான் போட்டபிஸ் கட்டிற்கு வாலாட்டும்
நன்றியுள்ள சீவன்இந் நாய்
எத்தனை பேருக்கு எத்தனை நான்கொடுத்தேன்
அத்தனை பேரும்எங் கே
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்