முதுமொழிக் காஞ்சி 6

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.

'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)

ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.

நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-18, 12:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

மேலே