எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதய வாசல் திறந்திருந்தால் .ஈ எறும்பும் உள்ளே நுழையும்...

 


இதய வாசல் திறந்திருந்தால் 
.ஈ எறும்பும் உள்ளே நுழையும் 
ஈகை இரக்கம் வெளியேறும் !
நெஞ்சில் ஈரம் வற்றிவிட்டால்
அள்ளி அள்ளி கொடுப்பவரும்
கிள்ளி எடுத்து தந்திடுவார் !
உள்ளத்தில் காதல் அரும்பினால் 
கிளர்ந்த உணர்வுகள் உருபெறும் 
தளர்ந்த மனமும் வலுப்பெறும்  !
பிணக்கால் பிரிகின்ற உள்ளங்கள் 
கலைந்து சென்ற மேகங்களாய் 
கிளைகள் முறிந்த மரங்களாகும் !
அறிந்ததை கூறினேன் அடியேன் 
அனுபவத்தில் கண்டவன் நான் !
எண்ணத் துளிகளை எழுதினேன் 
இதயத்தில் தேங்கிய துளிகளை 
வரிகளாய் வடித்து பதிவிட்டேன்  !


பழனி குமார்   

நாள் : 6-Sep-25, 5:33 pm

மேலே