எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 ஏழை என்று -
" பரிவு காட்டுபவனிடம் நன்றியுள்ள நாயாய் இரு"....
"ஏளனம் செய்பவனிடம்  கர்ஜனை செய்யும் சிங்கமாய் இரு"....💪

ஏழைகளின் வாழ்க்கை ...!
   👇👇👇👇👇👇👇👇 

 " ஓர்   ஏழையின்  வாழ்க்கை "


மதலை பருவம் என்னும் சுவன ஆழியை  கடந்த போது தெரியவில்லை....
வலிகள் என்னும் நரகத்தின் வாயிற் கதவுகள் பிற்காலத்தில் வரவேற்க காத்திருக்குமென்று....

பள்ளிப்பருவம் என்னும் ஆற்றைக் கடந்த போது தெரியவில்லை....
வரப்போகும் காலத்தில் நிம்மதி என்னும் மணல்கள் சூறையாடப்படுமென்று....

இளமைப்பருவம் என்னும் குளத்தை கடந்த போது தெரியவில்லை....
 வரும் நாட்களில் வற்றாத தண்ணீர் என்னும் உவகை  கூட வற்றிக் காய்ந்து போகும் என்பது....

காதல் பருவம் என்னும் ஏரியை கடந்த போது தெரியவில்லை.... எதிர்காலத்தில்  வறுமை  என்னும் கயல்கள்  நீர் இல்லாமல் வாடிச் சாகும் என்று....

அடுத்து.... வாழ்க்கை பருவம் என்னும் குட்டையைத்தான் கடக்கபோகிறேன் என்ற மூடனாய் பாதம் பதித்தேன் பிறகு தான் உணர்ந்தேன் இமயமலை என்னும் சிகரத்தில் அடி எடுத்து வைத்ததை..... 

அங்கு கண்டு கொண்டேன் நான்கு பருவத்திலும் எழுந்த புதிர்களின் திறவுகோலை ...எடுக்க முயன்றபொழுது ஒரு அசரீரி கேட்டது  அனைத்து புதிர்களும் தானாகவே திறக்கப்படும் என்று...

பிறகு அதை தவிர்த்து சிகரத்தை ஏற முடிவெடுத்தேன்....ஏற முடியாது எனத்தெரிந்தும் ஏறுகின்றன கால்கள்... சாதிக்க துடிக்கும் மனது இருப்பதால்...

வழியில் கண்ட வருநர்கள் :
பனிகள் போல் வஞ்சகங்கள்....
மழைத்துளி போல் விழியின் நீர்  துளிகள்....
திசைக்காட்டும் கருவி போல் சில நல்லுள்ளங்கள்...
பனிச்சரிவு போல் காலை நழுவ காத்திருக்கும் உறவினர்கள்....
கயிறுகள் போல எப்போது  வேண்டுமானாலும் அறுந்து விடக்கூடும் மகிழ்ச்சிகள்...
மலையேற்றத்தில் உதவும் கரங்கள் போல் நம்பிக்கைகள்...
புயல் காற்றை போல் கொடூர குணம்  கொண்ட சில நண்பர்கள்....
அனைவரும் விருந்துன்ன வரும் வருநர்களாய் அடிக்கடி வந்து சென்றனர் வாழ்க்கையில்...

இறுதியில் சிகரம்  தொடும் தருணமும் வந்தது வெற்றிக்கொடியை சிகரத்தின் உச்சியில் நட்டுவிட்டு முன் கடந்த பாதையை ஒரு கணம் எட்டி பார்க்கிறேன் ஒரு மனநிம்மதி எழுந்தது....

அந்த நேரத்தில் பின்னிருந்து யாரோ புறமுதுகை தட்டினார்கள் திரும்பிபார்த்த பொழுது  முதுமைப்பருவம் என்னும் நந்தவனம் அழைத்தது.... சிந்தையில் ஒரு  எண்ணம்   மலர்களோடு மலர்களாய் சிறிது காலம் உறங்கலாம் என்று  ....

 ஆனால்அதற்குமுன் முதுமையை அனுபவிக்க வேண்டும் என ஒரு விதி எழுந்தது...நானும் அதற்கு கட்டுப்பட்டேன்...

இறப்பின் வலியை இறப்பதற்கு முன்னாலே காட்டிய பிணிகள் என்னும் சாத்தான்களுடன்....அதையும் கடந்து  சென்றேன்...

பிறகு விதி முடிந்தது என்று ஆனந்தமாக பாடியது சங்கு...அதன்பின் சமாதி என்னும் சவப்பெட்டியில்  அடைந்து கொண்டேன்....என் மேல்  நந்தவனம் போல மலர்கள் நிரம்பியது... என் எண்ணம் ஈடேறியது என்ற நிம்மதியில் உறங்க தொடங்கி விட்டேன் எழ விருப்பமில்லாமல்....இன்று வரை......

                                      இப்படிக்கு
                                          ஏழை..! 
                                  
 -   Abi Abi                    
                                      

மேலும்

ஏழையின் வாழ்க்கை மிகவும் அருமையாக சொன்னீர்கள் தோழியே 08-Apr-2020 1:46 pm

மேலே