எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் கவிதை எழுத...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

நான் கவிதை எழுத ஆரம்பித்து , பல படைப்புகளை வடித்திட்டப் பின்னும் , ஓரிரு விருதுகள் பெற்றிருந்தாலும் ,
எனக்கு ஒரு முழு கவிஞனாக மாற்றிய பெருமை எழுத்து தளத்தையே சாரும் . எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்து , ஊக்கப்படுத்தி , என்னுடைய சமுதாய வேட்கைகளை பலவிதத்தில் வெளிப்படுத்திட ஓர் அரிய வாய்ப்பை அளித்திட்ட நம் தளத்தை என்றும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது . பல அருமை கவி நட்புகளை உருவாகிட முக்கிய காரணம் எழுத்து தளம் என்பதை மிகவும் மகிச்ச்சியோடு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன் . தளத்தில் பல கவிஞர்கள் எனக்கு கருத்து மூலமும் வாழ்த்துக்கள் மூலமும் வளர்த்திட்டனர் என்பதையும் அடக்கத்தோடு சொல்லிட விரும்புகிறேன் . இங்கே மூத்தோர் பலரின் வழிகாட்டுதலும் எனக்கு உறுதுணையாக இருந்தது ....இருந்தும் வருகிறது .
அதேபோன்று அன்புமிகு திரு அகன் அவர்களின் வழிகாட்டுதலையும் , ஊக்கத்தையும் நான் என் வாழ்வில் ஒரு ஏணிப்படியாக கொண்டு கவிதைகள் எழுதி வருகின்றேன் . தொடர்ந்தும் எழுதுவேன் . அவரின் தன்னலமற்ற சேவையை இங்கே எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நான் பெரிதும் மதிக்கும் உயர்ந்த உள்ளங்களில் அகன் அவர்களும் ஒருவர் .

இன்று அவரின் பரிந்துரையோடு தேர்வு செய்யப்பட்ட , பல நண்பர்களோடு எனக்கும் " மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது " அளித்தமைக்கு எனது பணிவான நன்றிதனை வணக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஈடு இணையற்ற அகன் அவர்களின் தமிழ் தொண்டும், தன்னலமற்ற சேவையும் என்றும் தொடரவும் , அவர் நலமோடு நூறாண்டு வாழ்க என்று மனதார வாழ்த்துகிறேன் .

இதே விருதினை பெறும்அருமை நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் .
எல்லோரும் எல்லாமும் பெற்று , வாழ்வாங்கு வாழ்ந்திட விழைகிறேன் .

பழனி குமார்
சென்னை

நாள் : 17-Jun-15, 9:54 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே