பழனி குமார் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : பழனி குமார் |
| இடம் | : சென்னை |
| பிறந்த தேதி | : 12-Oct-1958 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 07-Aug-2012 |
| பார்த்தவர்கள் | : 17799 |
| புள்ளி | : 10837 |
என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
அனாதைகள் என்றழைத்தால்
அனாதைகள் என்றழைத்தால்
உடைந்த உள்ளம்
------------------------------------
( குட்டி கதை)
காலையில் இருந்தே வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருந்தான் ஆனந்த். அவன் ஏதோ ஒரு தவிப்புடன் காணப்பட்டான். நெஞ்சு படபடக்கவே தண்ணீர் குடித்துவிட்டு பியூன் ராமுவை அழைத்தான். ஆனந்த் இந்த வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. ராமுவிடம் முதலாளி அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். மேலும் நல்ல மூடில் உள்ளாரா என்றும் விசாரித்தான். அவன் அவர் தனியாக இருக்கிறார் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பதிலாக கூறிவிட்டு சென்று விட்டான். இவன் இப்போது எப்படியாவது பார்த்து கேட்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டா
விளக்கேற்றி வைத்தும்
ஒளியிழந்து கிடக்கிறது ஏ
ழையின் வயிறு !
அரைகுறை ஆடையில்
அரங்கேற்றம் வீதியில்வ
றுமையின் விளிம்பு !
நேற்று பழமுதிர் சோலை
இன்று சகாரா பாலைவனம்
அரசியல் கட்சி மாநாடு !
காலையில் ஆரத்தழுவுதல்
மாலையில் கீழே தள்ளுதல்
அரசியல் விளையாட்டு !
காத்துக் கிடக்கின்றனர்
நடுநிசியில் பசி துறந்து
மறுநாள் முதல் காட்சி !
காலையில் சொற்பொழிவு
மாலையில் சொற்சோர்வு
உபயம் மது மயக்கம் !
பழனி குமார்
விளக்கேற்றி வைத்தும்
ஒளியிழந்து கிடக்கிறது ஏ
ழையின் வயிறு !
அரைகுறை ஆடையில்
அரங்கேற்றம் வீதியில்வ
றுமையின் விளிம்பு !
நேற்று பழமுதிர் சோலை
இன்று சகாரா பாலைவனம்
அரசியல் கட்சி மாநாடு !
காலையில் ஆரத்தழுவுதல்
மாலையில் கீழே தள்ளுதல்
அரசியல் விளையாட்டு !
காத்துக் கிடக்கின்றனர்
நடுநிசியில் பசி துறந்து
மறுநாள் முதல் காட்சி !
காலையில் சொற்பொழிவு
மாலையில் சொற்சோர்வு
உபயம் மது மயக்கம் !
பழனி குமார்
விழி வழியாய்
விழி வழியாய்
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
பழனி குமார்
10.09.25
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
பழனி குமார்
10.09.25
சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !
விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !
ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !
பழனி குமார்
எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !
எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !
எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!
பழனி குமார்
11.09.2023
பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !
பழனி குமார்
08.09.2023