நிகாரிகா
ஒளிரும்
தீபங்கள்
இடையே
மிளிரும்
மின்மினிச்
சுடரைக்
கண்டதும்
மகிழ்கிறது
மனங்களும் !
மலர்ந்திடும்
சிரிப்பால்
உலர்ந்த
உள்ளங்கள்
மலர்ந்து
மணம் வீசும் !
பூத்திட்டப்
புன்னகையால்
வீழ்ந்திட்ட
இதயத்தால்
உருகிடும்
உள்ளத்தால்
காண்பவர்
இன்னல்களை
மறந்திட
செய்கிறது !
எதிர்பாரா
நிகழ்வுகள்
இடையினில்
நேர்ந்தால்
இடையூறுகள்
அனைத்தும்
எறும்பாய்
தெரிந்திடும்
இரும்பாய்
தடுத்திடும்
கரும்பாய்
இனித்திடும் !
வாழ்த்துகள் நிகாரிகா !!!!
பழனி குமார்
04.12.2025

