நிழலும் நிஜமும்

நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !

நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !

நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !

நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Nov-25, 5:11 am)
Tanglish : nilalum nijamum
பார்வை : 46

மேலே