காலம்

காலம்

கடந்து கொண்டே
இருக்கிறது காலங்கள்
இருப்பவைகளை
உதிர்த்து விட்டு
பிறந்தவைகளை
இருக்க விட்டு
நடப்பவைகளை
கடந்து போன
கதையாக்கி

இனி
நடக்கப்போவதை
எதிர் காலமாக்கி

புதிது புதிதாய்
தன்னை புத்தாக்கி
முடிவில்லா பயணத்தில்
இருக்கிறது இந்த
உருவமில்லா அருவமில்லா
இயக்கம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Jan-26, 3:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaalam
பார்வை : 6

மேலே