பொங்கும் பொங்கல்

அன்பு பொங்கிட
அறிவு தங்கிட

ஆனந்தம் பெருகிட
ஆற்றல் கூடிட

இலக்கு தொட்டிட
இல்லறம் சிறந்திட

ஈகை வழங்கிட
ஈசன் அருள் வந்திட

உண்மை ஓங்கிட
உயர்வு தங்கிட

ஊக்கம் கொண்டிட
ஊர்வளம் உயர்ந்திட

எங்கும் நேயம் வளர
எல்லா நோயும் தீர

ஏற்றம் தொடர
ஏகாந்தம் கிடைத்திட

ஐயம் தீர்ந்திட
ஐங்கரன் அருளிட

ஒற்றுமை சேர்ந்திட
ஒறுத்தல் நீங்கிட

ஓர் உலகாட்சி நடந்திட
ஓங்காரம் உணர்ந்திட

ஒளவை சொல் கேளிட
அஃது வழி நடந்திட

இனிய பொங்கல் பொங்கிட
உலகில் அமைதி தங்கிட
பொங்கல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : பாளை பாண்டி (15-Jan-26, 7:24 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 29

மேலே