பாளை பாண்டி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாளை பாண்டி |
இடம் | : விழுப்புரம |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-May-2021 |
பார்த்தவர்கள் | : 320 |
புள்ளி | : 72 |
தமிழ் பிரியன்
அப்பா பற்றி அப்பப்பா...
சொல்லில் அடங்கா...
சொன்னால் புரியா...
கண்டால் தெரியா..
அனுபவி அதனை நீயும்
அப்பா ஆகி..
ஏனெனில் அப்பா அகிலத்தில் இல்லை எனில் ஆவது ஒன்றும்
நம்மில் இல்லை... ஆம் அது
ஓர் அற்புதம்
ஆதலில் பணிவோம் அப்பா எனும்
அற்புதம் தனின் பொற்பதம் தனேயே
காதல் பிறந்தது...
கவிதை வந்தது
கனவும் வந்தது...
கருத்தும் பல
வந்தது உடனே...
காதலியும் வந்தாள்...ஆனால்
மனைவி நின்றாள் எதிரில்
காணவில்லை என் கவிதை...
காதலியும் தான்...
ஏனெனில் சோறு முக்கியம் நமக்கு
கூடவே உசிரும்...
ஏனெனில் உடன் இருந்து உயிர் எடுத்து...😄😄😄😄
நமக்கு ஒன்று எனில்...
தன் மனம் வருந்துவது
அவள் அல்லவா.
மயில் உடையோன் அவன் மழலைநகை(புன்) கொண்ட
தூயோன்அவன்
பால் உண்ணும் பால்ய முகத்தவன்
அவன்
தோல் சுருங்கா நெடியோன் அவன்
கொஞ்சு தமிழ்பேசும் பிஞ்சு
பாலகன் அவன்
நஞ்சு உண்ட அரனின் குருவாய்
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பன்அவன்
அன்னைத்தமிழ் ஆராதிக்கும்
அமுதன் அவன்
வள்ளியை மணந்த வேடன் அவன்
தெய்வானையை திருமணம் புரிந்த
தேவன் அவன்
அறம் காக்க
மயில் உடையோன் அவன் மழலைநகை(புன்) கொண்ட
தூயோன்அவன்
பால் உண்ணும் பால்ய முகத்தவன்
அவன்
தோல் சுருங்கா நெடியோன் அவன்
கொஞ்சு தமிழ்பேசும் பிஞ்சு
பாலகன் அவன்
நஞ்சு உண்ட அரனின் குருவாய்
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பன்அவன்
அன்னைத்தமிழ் ஆராதிக்கும்
அமுதன் அவன்
வள்ளியை மணந்த வேடன் அவன்
தெய்வானையை திருமணம் புரிந்த
தேவன் அவன்
அறம் காக்க
ஏறு தழுவும் வீரனே வீறு கொள்
மாறும் உலகில் மாறாமனநிலையில்
பேறுபெற்றிட பெருந்தவம் கொண்டே
சீரும் சிறப்பும் நாடிடும் என்று
கூச்சலிடும் ஊடகம். தவிர் நொடிக் ஒருசெய்தி தரும் பேஸ்புக் அகற்று
மனநிம்மதிக்கு புகைக்காதே
மாறுதலுக்காக குடிக்காதே அதை
அரசே விற்றாலும்
கருத்தில் கொள் புதுதெளிவு
எழுத்தில் கண்டிடு ஏற்றம்
எண்ணத்தில் வேண்டும் மாற்றம்
எங்கும் வேண்டாம் பதற்றம்
உனை வழிநடத்தும் ஆசிரியர் கை கட்டினோம்
உனை கண்டு அவர் ஒதுங்கிட வழி கண்டோம்
இப்படி எண்ணற்ற இடையூறு பல செய்வோம் அறிவு என்று எண்ணி
ஆயினும் நீ தெளிவு கொள்வதில் தீரன் அல்லவா
பாலில் நீர் அகற்றி
ஏறு தழுவும் வீரனே வீறு கொள்
மாறும் உலகில் மாறாமனநிலையில்
பேறுபெற்றிட பெருந்தவம் கொண்டே
சீரும் சிறப்பும் நாடிடும் என்று
கூச்சலிடும் ஊடகம். தவிர் நொடிக் ஒருசெய்தி தரும் பேஸ்புக் அகற்று
மனநிம்மதிக்கு புகைக்காதே
மாறுதலுக்காக குடிக்காதே அதை
அரசே விற்றாலும்
கருத்தில் கொள் புதுதெளிவு
எழுத்தில் கண்டிடு ஏற்றம்
எண்ணத்தில் வேண்டும் மாற்றம்
எங்கும் வேண்டாம் பதற்றம்
உனை வழிநடத்தும் ஆசிரியர் கை கட்டினோம்
உனை கண்டு அவர் ஒதுங்கிட வழி கண்டோம்
இப்படி எண்ணற்ற இடையூறு பல செய்வோம் அறிவு என்று எண்ணி
ஆயினும் நீ தெளிவு கொள்வதில் தீரன் அல்லவா
பாலில் நீர் அகற்றி
உன்னை ஒருநிலைப் படுத்திட உரமிடு
உன்னுள் புதியதாய் தோன்றிடும் மாற்றமும்
தன்னிலை உணர்த்தியே உயர்த்திடும் உணர்வாய்
உன்னிடம் முன்னிலை வந்தே பணிந்திடும்
விண்ணிலே உலாவும் மேகமும் தன்னை
உண்மையாய் உணரும் போதிலே மழையாய்
மண்ணிலே பொழிந்திட நீராய் மாறியே
வெண்துளி சாரலாய் வருவதை கண்டிடு
பூமியின் நிழலது இருளாய் மாறிட
பூமியும் சுழல்வதை நிற்கவா செய்யுது
சேமித்த அனலின் தன்மையை உணர்ந்த
பூமியே தானாய் இயல்பாய் சுற்றுது.
மரமென ஓருயிர் பிறந்தே உணவை
அருந்த ஊரெலாம் அலைந்தா திரியுது
இருந்த இடத்தை தனதாய் நினைத்ததால்
பெரியதாய் வளர்ந்து செழித்தே செழிக்குது
எளிதில் ஆவியாய் ஆகிடும் நீரது
ஒளிந்து
நேரிசை வெண்பாக்கள்
தொந்தியில் லாத கலப்பை விநாயகனை,
எந்தவித நோயின்றி எந்நாளும் - தந்தைபோல்
நம்மைக் கருத்தாக நானிலத்தில் காப்பவனை
செம்மையாய் என்றும் வணங்கு! 1
கலப்பை விநாயகனைக் காணுங்கால் வேண்டும்
நலமே நமக்கெல்லாம் நல்கி - பலமும்
வளமும் பழுதின்றி வாழ்த்தி யருளி
அளவிலாஆ னந்தமளிப் பான்! 2
விநாயகர் பட உதவி - தினமலர்
தமிழ் ஞானி ஆன ஔவையார் ஒரு முறை தமிழ்தொன்டு புரிய நடைபயணம் மேற்கொண்டிருந்தார்...
அப்போது வயல்வெளி வழியாகக் நடந்து சென்று கொண்டிருந்தார்.அச்சமயத்தில் ஓர் உழவன் தன் வயலுக்கு ஏத்தம் (ஏற்றம்) மூலம் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார் .
ஏத்தம் என்பது பழங்காலத்தில் சால் எனப்படும் பெரிய மண் பாத்திரம் ஒருபுறம் கயிறு கொண்டு மரத்தில் கட்டி மறுபுறம் ஆள் ஏறி காலால் மிதிக்க (2 மரத்தை ஏறக்குறைய கூட்டல் குறிபோன்று அமைத்து அழுத்தம் கொடுக்க) சால் நீர்நிலையின் உள்சென்று தண்ணீர் மோந்து வரும் அதை இன்னொரு ஆள் வாங்கி வாய்க்காலில் ஊற்றி வர நீர் வயலுக்கு சென்று பாயும்.
அந்த விவசாயி தன் களைப்பை போக்க பல பாடல்கள் பா