உலகின் மொத்த சுகம்

மகள் பிறந்த நாள் இன்று யென்
அகம் நிறைந்த நாள் இன்று

அகவை ஒன்றில் அடியெடுத்து
அகிலம் ஆள நினைக்கிறாள்

தத்தி நடை பழகி தரணி காண முயல்கிறாள் பரணியில் பிறந்த
பளிங்கு

ஓர் முத்தம் தந்து உலக மொத்த சத்தமும் ஓர் நொடி நிறுத்தினாள்


அப்பப்பா... அப்பா ஆக இருப்பதில்
உள்ளதடி யென் மகளே உலகின் மொத்த சுகமும்

எழுதியவர் : பாளை பாண்டி (8-Aug-24, 7:00 am)
பார்வை : 245

சிறந்த கவிதைகள்

மேலே