சந்தன மென்காற்று வீசும் மாலைப் பொழுதில்

சந்தன நல்மண காற்றுவீசும் மாலையிலே
அந்தி நிலவின் அழகேந்தி நீவர
நந்தவனப் பூவெல்லாம் நல்கும் வரவேற்பில்
சிந்துமுந்தன் மெல்லிய புன்னகை யில்எந்தன்
சிந்தையெலாம் செந்தமிழ்ப் பாட்டு

கவிக்குறிப்பு :--

---ந் எதுகை செறிந்து நல்கும் ஓசை எழிலை
கவிதையை வாய்விட்டுப் படித்து உணரவும்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-24, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே