கங்கையில் நீராடி காசி வலம்வந்து விதியின் வினையை விலக்கு

கங்கையில் நீராடி காசி வலம்வந்து
திங்களைச் சூடுவோன் தாளைப் பணிந்து
பதினெட்டுக் கட்டத்தில் பின்னும்நீ ராடி
விதியின் வினையை விலக்கு
----இன்னிசை
கங்கையில் நீராடி காசி வலம்வந்து
திங்களைச் சூடுவோன் தாள்பணிந்து -- பொங்கும்
பதினெட்டுக் கட்டத்தில் பின்னும்நீ ராடி
விதிவந்த பாவம் விலக்கு
----நேரிசை

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-26, 11:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே