கவிஞர்இரவிச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர்இரவிச்சந்திரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Dec-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 698 |
புள்ளி | : 68 |
தமிழனின்rnஎச்சில் கூடrnஅமிலமாகிrnஅகிலம் எரிக்கும்
தேக்கு மரம் போச்சோ
பாக்கு மரம் போச்சோ
மிளகு விளைவது போச்சோ
அழகு விளைவது போச்சோ
ஏலக்காய் நறுமணம் போச்சோ
இயற்கையின் நறுமணம் போச்சோ
மூர்க்கனே முலையறுத்து வாழாதே
முட்டினாலும் சுரக்காது சாகாதே
-கவிஞர்இரவிச்சந்திரன்
ரசிக்காதே
இமைக்குள்
புதைத்துவிடுவாள்
இமைக்காமல்
வதைத்துவிடுவாள்
தென்னைக்கு
உப்பு நீரே
ஊற்றினாலும்
இளநீர் இனிக்கும்
காதலில்
தேனே ஊற்றினாலும்
கண்ணீர்
கரிக்கும்
மஞ்சம் வந்திட
நெஞ்சம் அஞ்சிட
பாவை கொதித்து நின்றாள்
தேனை குடித்திட
தீயை பருகிட
காளை தவித்து நின்றான்
குயிலின் குரல்
ஊமை பாஷையில்
நிலவின் விழி
மகரந்த சேர்க்கையில்
கூந்தல்
பாயானது
காதல்
நோயானது
காமம்
தீயானது
இருவரை
ஒருவராய்
நகலெடுத்தனர்
பத்து மாதத்தில்
பிரதி பேசும்
காதல் சின்னமாய்
கவிதை வண்ணமாய்
கவரி வீசும்