கி கவியரசன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கி கவியரசன் |
இடம் | : திருவண்ணாமலை ( செங்கம் ) |
பிறந்த தேதி | : 14-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-May-2014 |
பார்த்தவர்கள் | : 3544 |
புள்ளி | : 3079 |
பெயர் : கி.கவியரசன்
சொந்த ஊர் : செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
எழுதியுள்ள புத்தகங்கள் :
(கவிதைத் தொகுப்பு )
1) சிறகுகளின் கனவு
2) உதிர் நிழல்
3) பேராசிட்டெமல்
4) சைக்கூ (ஹைக்கூ கவிதைகள்)
5) இரவெல்லாம் வெயில்
6) ஹைக்கூ உலகம் 1(கூட்டுத் தொகுப்பு)
7) நன்னன் கோட்டத்து கவிஞர்கள் (கூட்டுத் தொகுப்பு)
வாங்கி உள்ள விருதுகள் :
1) கவிச்சுடர் விருது (கண்ணதாசன் கவியரங்கம்)
2) கவிச்சுடர் விருது (கவியுலக பூஞ்சோலை மன்றம்)
3) படைப்பு குழுமத்தின்
மாதாந்திர சிறந்த படைப்பாளர் விருது
4) நல்லாசிரியர் விருது (இரண்டு முறை )
5) முதன்மைச் சிற்பி விருது (சிறந்த பள்ளி முதல்வர்)
கடும் கோபத்தில்
வானத்தையும் பூமியையும்
புரட்டிப் போட நினைக்கிறார்கள்
வானத்தையும் பூமியையும்
புரிந்து கொண்டாலே
தீர்ந்து விடுகிறது பிரச்சினைகள்
தான் மட்டுமே எல்லாம்
என காட்டிக் கொள்கிறார்கள்
எல்லை இல்லாத வானம் கூட
கொஞ்சத்தை தான் காட்டுகிறது
யாரையும் தனக்கு கீழேயே
வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்
நீங்கள் அன்பைப் பொழியும்
வானமாக இருந்தால்
கீழே இருப்பதில்
பூமிக்கு பிரச்சினை இல்லை
தன்னைத் தவிர
மற்றவரை எல்லாம்
முட்டாள்களாக பார்க்கிறார்கள்
மருத்துவமனையில்
பைத்தியக்காரன் ஒருவன்
தன்னைத் தவிர
மற்றவரை எல்லாம்
பைத்தியம் என்பது போல
நமக்கு மேலும் இருக்கிறார்கள்
கீழும் இருக்கிறார்கள்
எவ்வளவு ரசிக்கிறோமோ
அவ்வளவு நீளுகிறது
எழுதுகின்ற
ஒவ்வொரு வரியிலும்
சொற்களில் பிழைகள் வரலாம்
அதை நாமோ அல்லது யாரோ
திருத்தம் செய்யலாம்
எத்தனையோ
அடித்தல் திருத்தல்களுக்கு பிறகு
நிறைவு பெறும் போது
பொருளில் மட்டும்
பிழைகள் வராமல்
பார்த்துக் கொள்ளுங்கள்
வாழ்வு
ஒரு அழகிய கவிதை!!!
- கி.கவியரசன்
எனது "சிறகுகளின் கனவு" புத்தகம் இப்போது amazon kindle ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வேண்டும் நண்பர்கள் சிறகுகளின் கனவு எனும் பெயரை பயன்படுத்தி அமேசானில் தேடினால் படிக்க இயலும் .
நன்றி
எனது சிறகுகளின் கனவு புத்தகம் இப்போது amazon kindle ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வேண்டும் நண்பர்கள் சிறகுகளின் கனவு எனும் பெயரை பயன்படுத்தி அமேசானில் தேடினால் படிக்க இயலும் .
நன்றி
அனைத்து படைப்புள்ளங்களுக்கும் வணக்கம் எனது முதல் கவிதை தொகுப்பான "சிறகுகளின் கனவு" நூல் வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிட படுகிறது.
குயிலிசைக்க மழை
தொடர்கிறது
தவளையும்
மறையும் சூரியன்
வண்ணங்களை இழக்கிறது
கோவில் புறா
இருளும் நேரம்
பூங்காவின் இருக்கையில்
வாடிய ரோஜா
நண்பகலில் பூங்கா
புதர் விட்டு வருகின்றன
இரு நெகிழிக் குப்பிகள்
நீண்ட பாலம்
ஆற்றில் ஓடும்
வாகன வழித்தடங்கள்
வற்றிய ஆற்றை
நெருக்கி வருகின்றன
இருபுறமும் கரைகள்
பெரிய நதியில்
கரை இறங்கி வருகிறது
கட்டிடம்
நேற்றைய மழை
ஆற்றில் ஈரம் வற்றாமல்
நெகிழிப்பை
ஒரு கரும்பலகையில்
தன்னை நிரப்பி வைத்திருக்கிறது
சுண்ணாம்புக்கட்டி
அழியும் சூத்திரங்கள்
இயல்புக்கு திரும்புகிறது
கரும்பலகை
ஓயாத அலைகளின் சத்தத்தில்
மூச்சிறைக்கிறது
ஒரு
இரவின் கனத்தமழை
அதிகாலை வாசலை விட்டுச் செல்கிறது
ஒரு கிழிந்த போர்வை
சலனமில்லாமல் நீர்; நகர்கிறது
மரக்கிளைவிட்டு ஒன்றும் அடிவிட்டு ஒன்றுமாய்
இருநிலவுகள்
இடியுடன் மேகம்
சத்தமிட்டு வருகிறது
ஒலிபெருக்கியில் பாடல்
தீமிதி திருவிழா
இறங்கி வருகிறது
வானில் மின்னல்
வானில் மின்னல்
வந்து மறைகிறது
ஒரு பூச்செடி
தரையிறங்கிய மின்னல்
பற்றி எரிகிறது
தீச்சட்டி
தொடர்ச்சியாய் மின்னல்
அணைந்து வருகிறது
தெருவிளக்கு
பலத்த காற்றும் மின்னலும்
சத்தமிட தொடங்குகிறது
காலி நீர்க்குடுவை
- கி. கவியரசன்
மறைந்த தொடர்வண்டி சத்தம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
யாசித்தவனின் குழலோசை
வயல்வெளி
புற்கள் மேல் விழுகிறது
கொட்டிய செங்கல்
உயர்ந்த கட்டிடம்
மேல் நோக்க விழுகிறது
பெருமூச்சு
உலகவெப்பமயமாதல் கருத்தரங்கு
விஞ்ஞானியின் வருகைக்கு தயாராகிறது
குளிரூட்டிய அறை
சிட்டுக்குருவி கவிதை
வெற்றிக்கு பரிசாகிறது
சாம்சங் கைபேசி
ஓய்வெடுக்கும் இரவு
ஈரமான வாயுடன் வருகிறது
சிறுவனின் புல்லாங்குழல்
தேர்வறை
கூட்டிப் பெருக்க வருகின்றன
விரல் நகங்கள்
இடையில் கட்டிடக் கம்பிகள்
மேலெழுந்து வருகிறாள்
நிலவுப் பாட்டி
செங்கல் சுமந்தவன்
கட்டத் தவிக்கிறான்
பள்ளிக் கட்டணம்
தூக்கி வைத்த மூட்டை
அந்தி வேளை
சூரியனின் தடத்தை எல்லாம்
விழுங்கியிருந்த கார்முகில்
ஒரு சில துளிகளை பருகி
மயங்கிக் கொண்டிருந்த பூவிதழ்கள்
அரசுக்கு கணக்கு காட்டிய
அந்த சிறு பள்ளத்திலிருந்து
நிரம்பி வெளியேறிய நீர்
சாக்கடையில் விட்ட கப்பலுக்கு
கன்னத்தில் கைவைத்த ஒரு சிறுமி
சிதறும்படி உதறிக் கொண்டிருந்த நாய்
பார்வை ஓட்டத்தில்
தாழ் திறக்கும் ஒரு சாளரம்
வளையலோடு நீண்டு வந்த ஒரு கை
கம்பிகளின் வியர்வை துடைக்க
உற்று நோக்குகிறேன்
மெல்ல விலகும் மேகத்திலிருந்து
தப்பி ஓடி வந்த கதிர்கள்
விண்ணில் மஞ்சள் பூச
சாளரக் கம்பிகளில் ஒருவள் எட்டிப்பார்க்கிறாள்
யார் அவள் என கூர்ந்து பார்க்கையில்
தோன்றுகிறது
விண்ண
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்
செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB விரலியும் பரிசாக வழங்கப்படும்.
செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக
குவளையிலிருந்து நெகிழி
குடுவைக்கு மாறியதில்
கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது
தண்ணீர்
யாரும் கண்டுகொள்ளவில்லை
மூடி திறப்பும்
குடுக் குடுக் சத்தமும்
அப்போதைய தாகம் தீர்ந்த
திருப்தியில்
மறந்து போனது அந்த
தண்ணீரின் தாகம்
யோசிக்க மறந்து விட்டோம்
சட்டைப்பையில்
இருக்கும் இறுதி ஒற்றைரூபாய்
சற்று தெம்பாக இருக்கலாம்
ஆனால் எத்தனை காலம் ?
அது ஒரு ஒரு பைசாவாய்
கரைந்து கொண்டிருக்கிறது
சொத்து சேர்க்க மறந்த
தந்தை மகனிடம்
வெத்துக் கை காட்டுகையில்
மகன் பார்க்கும் கேவல பார்வை
கூனி குறுக வைக்கும்
ஆனால் இந்த விசயத்தில்
நமக்கிருக்கும் ஒரு நம்பிக்கை
நாம் அன்று இர
நான் வேஷமிட்டால்
தான்
மதிக்கிறார்கள்
தினமும் கைவசம்
பல முகமூடிகளை
கொண்டே செல்கிறேன்
நல்ல நடிகன்
தான் இங்கு
தேவைப்படுகிறான்
உத்தமர்களை எல்லாம்
பாடசாலை புத்தகத்தில்
உறங்க வைத்து
இருக்கிறோமே
தப்பி தவறியும்
யார் வழியேனும்
விழித்து விடாமலிருக்க
மயக்க மருந்துகளை
கைவசம் வைத்திருக்கிறோம்
கண்ணாடி காலையிலேயே
அருவருப்பான
உண்மை முகத்தை
காட்டுகிறது
பிடிக்கவில்லை உடனே
அழகு சாதனம்
கொண்டு
போலிக்கு மாறிவிடுகிறேன்
பிறருக்காக முகமூடி
எடுத்தேன் இன்று
எனக்கே தேவைப்படுகிறது
நான் சிறந்த நடிகனாகவே
விரும்பிவிட்டதால்