அழகிய கவிதை

எவ்வளவு ரசிக்கிறோமோ
அவ்வளவு நீளுகிறது
எழுதுகின்ற
ஒவ்வொரு வரியிலும்
சொற்களில் பிழைகள் வரலாம்
அதை நாமோ அல்லது யாரோ
திருத்தம் செய்யலாம்
எத்தனையோ
அடித்தல் திருத்தல்களுக்கு பிறகு
நிறைவு பெறும் போது
பொருளில் மட்டும்
பிழைகள் வராமல்
பார்த்துக் கொள்ளுங்கள்
வாழ்வு
ஒரு அழகிய கவிதை!!!

- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (2-Sep-24, 1:48 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : alakiya kavithai
பார்வை : 52

மேலே