ஒரு கவிதை தருவாளோ
ஒரு கவிதை தருவாளோ!
எழுதுகிறேன்
ஒரு கவிதை எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
எழுதுகிறேன்.
" காற்று வெளி இடை
கண்ணம்மாவின்........"
காதலன் என எண்ணி
கவிதை ஒன்று எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
எழுதுகிறேன்
" துன்பம் நேர்கையிலே......"
யாழ் எடுத்தவன் போல்
ஒருகவிதை எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
நான் எழுதுகிறேன்
கவிதையும் வரவில்லை
பாரதியும் வரவில்லை
பாரதி தாசனும் வரவில்லை
வருவாளோ பராசக்தி
கவிதை ஒன்று

