இ க ஜெயபாலன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இ க ஜெயபாலன் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 03-Sep-1948 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 306 |
புள்ளி | : 253 |
சுயசரிதை.rnபிறப்பு மலேசியா.rnஆரம்பக் கல்வியும் குறும்புகளும் யாழ்பாணம் சண்டிலிப்பாய்.rnமேல் படிப்பு + காதல் + திருமணம் + வேலை எல்லாம் வெளியூர். rnவேலை:- ஆராய்ச்சி + கற்பித்தல்.rnமனைவி மலேசிய இந்திய வம்சாவளி. தங்கம் விரும்பாத தங்கம் அவள்.rnபிள்ளைகள் சுயம்வரம் கண்டவர்கள். இப்போ உடல் மலேசியாவிலும் உள்ளம்rnசண்டியூரிலும் என்று வாழ்பவன்.. இதற்கு இடையில் நிலவாய் (இதமாய்) வந்து நிற்பது தான் எழுது.கொம் அவர்களுக்கு மிக்கவும் நன்றி.rnஅந்த நிலவில் நீங்கள் பார்ப்பவர் சண்டியூர் பாலன். முழுப் பெயர் Ramalingam Kandiah Jeyapalan. rnrn"கிறுக்கன் நான்,rnகவிதை என rnஎண்ணி,rnஎழுது.கொம்rnஏற்றுகிறேன்,rnகவிதை எனில்,rnகை தட்டுங்கள்,rn ❌,rnமறந்திடுங்கள.
தாயின் பாசம்.
வெல்லம்,
வெள்ளத்தில்
கரைந்து விடும்.
பணம்,
பண வீக்கத்தில்
கரைந்து விடும்.
நட்பும் உறவும்,
பொறாமையில்
கரைந்து விடும்.
உடல் அழகு,
காலத்தோடு
கரைந்து விடும்,
சேர்ந்தே! கரையும்
காமமும் மோகமும்.
கரையாதது எது?
கரையாதது
தாயின் பாசம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
கடவுள் எங்கே?
உன்னை, உன்னுள்
சிறை பிடிக்கும்
மதங்களை
நீ மறந்து விடு.
அறிவிலார்
வகுத்த
சடங்குகளையும்,
அவர்கள் தம்
கதைகளையும்,
நீ மறந்து விடு.
ஏற்றிவிடு
உன் இதயத்தில்,
மனிதநேயம் என்ற
திருவிளக்கை.
இப்போது பார்
அந்த திருவிளக்கை!
சற்று நன்றாகவே
உற்றுப் பார்!!
காண்பாய் அதனுள்
இறைவனை,
இரு கரம் கூப்பி
உன்னை வணங்கி
நிற்பதை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
கடிதம்.
(கடிதம் அல்ல ❤️)
ஒற்றை அடி
பாதையிலே!
ஓரமாக நான்
ஒதுங்கி நிற்க,
ஓரக் கண்ணாலே
பார்த்து
செல்பவளே!
என் கடிதமதை
படித்துவிடு.
உன் ஒய்யார
நடை அழகு
என் கண்மணியில்
ஆடுதடி,
உன் பவளப் சிரிப்பு
என்னை பயித்தியம்
ஆக்குதடி.
ஒருநாள்,
சேவலாக மாறி!
உன் கூரையிலே
ஏறி நின்று
கூவிடுவேன்டி!
உன் தூக்கத்தையும்
கலைத்திடுவேன்டி!
எழுந்து வந்து
என் மோகத்தை
தணிப்பாயோ?
இல்லை!
கல் எடுத்து தான் என்னை
அடித்திடுவாயோ?
PS:
காத்திருப்பேன்
உனக்காக
ஒற்றை அடி
பாதையிலே!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
ஏக்கம்.
உன்னை நான் நினைக்கையிலே,
இறைவா!
உலகை நான்
மறந்திடுவேன்,
என் மனம் அமைதி
அடைந்து விடும்.
என்னை நான்
நினைக்கையிலே
இறைவா!
ஏன் என் மனதில்
ஓர் குழப்பம்?
கடற்கரைக்கு
சென்றிடுவேன்,
காட்டுக்குள்
ஓடிடுவேன்,
இறைவா!
காண்பேன் அங்கு
உன் பேரழகை,
மீண்டும் என் மனம்
அமைதி
அடைந்து விடும்.
பறவைக் கூட்டத்தை
பார்க்கையிலே
இறைவா!
ஏன் என் மனதில்
ஓர் ஏக்கம்?
அவைகள் எல்லாம்
உன் உறவினரோ!
உன்னை நான்
நினைத்திடுவேன்
இறைவா!
என் மன ஏக்கம்
நீங்கி விடும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
தீர்க்க வேண்டிய தீர்வுகள்
ஏராளமாய் இங்கிருக்க.....
பார்க்க வேண்டிய உலகங்கள்
என்னைச் சுற்றி நிறைந்திருக்க.....
கிடைக்க வேண்டிய அனுபவங்கள்
ஒவ்வொரு அடியிலும் குவிந்திருக்க..
உன்னை கண்ட நாளாய்
எல்லாவற்றையும் நானும் தொலைத்திருக்க....
என்னடி இது...?
என்ன மாயமடி இது....?
என்னை மறந்து...
என் நிதானம் இழந்து.....
உன்னைச் சுற்றியே
என்னைச் சுற்றவிட்டு
விட்டாயே நியாயமா....?
தீர்வுகள்.....
உலகங்கள்......
அனுபவங்கள்.....
அத்தனையும் உன்னுள்ளேயா?
பூவாடை வீசிவரும் மல்லிகைப் பந்தலில்
பாவாடை தாவணியில் நீவந்து நின்றாய்
நாவால் ஒருகவிதை நான்சொல்ல நினைத்தேன்
பூவாய் ஒருபுன்ன கையைநீ பொழிந்தாய்
-----கலிவிருத்தம்
பூவாடை வீசிவரும் மல்லிகைப் பந்தலில்
பாவாடை தாவணி யில்வந்து நின்றாய்நீ
நாவால் ஒருகவிதை சொல்ல நினைத்தேன்நான்
பூவாய்நீ புன்னகை யில்
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
வழி விடு.
என் ஊரில்
எனக்கிடமில்லை!
வந்தவர்கள்
என் வழியை
மறித்து நின்றார்,
கேட்டால் அடிக்கவும்
உதைக்கவும்
தயங்கமாட்டார்.
புது இடம்
சென்றடைந்தேன்,
என் எண்ணங்கள் காய்களாகி,
சில கனியாக!
கிடைத்தது பேரும்
புகழும்.
வழி மறித்தவர்
எல்லாம் இப்போ!
உன் புகழ் எங்கள்
புகழ் என்றார்,
உன் ஊரை
மறந்திடாதே என்றார்.
என் ஊரைவந்தவர் ஆழஎனக்கு உங்குஎன்ன வேலே.
மனிதன் நிலவில்
காலை பதித்தான்
உன் இதயத்தில் நான்
என் காதலை பதித்தேன் ...!!
நிலவில் கால் பதித்த
மனிதனுக்கு பரிசுகளும்
பாராட்டுகளும் குவிந்தது
உன் இதயத்தில் காதல் பதித்த
எனக்கு அரிவாள் வெட்டுக்கள்
பரிசாக குவிந்தது ...!!
ஒன்று மட்டும் தெளிவாக
புரிகின்றது
புராண காலத்தில் இருந்தே
காதலை எதிர்க்கின்ற கூட்டம்
உலகத்தில்
இருக்கத்தான் செய்கிறது ...!!
--கோவை சுபா
மிஞ்சியது 2.
பெரியவர் வேதநாயகத்தின் பின்புலம் வறுமை. தன் முயற்சியால் தன்னையும் தன் குடும்பத்தவர்களையும் வாழவைத்து மகிழ்ந்தவர். ஏன் தான் பிறந்து வளர்ந்த ஊரையோ மக்களையோ மறக்காதவர்.
ஊரில் உள்ளபோது நண்பர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு யாரும் இருந்ததில்லை. ஏழ்மையோடு எதுவும் ஒட்டாது. வாழ்வில் வெற்றி நடை போட்ட காலகட்டத்தில் நண்பர்கள் சேர்ந்தார்கள். எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள் அவரை உதாரணம் காட்டி எழுதினார்கள் பேசினார்கள். அவர் எல்லாவற்றையும் புன்புறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
காலம் ஓட அவர்கள் கலைந்தார்கள். முதல் அவரின் அன்பு மனைவி. பின்பு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இப்போ அவருக்கு அவருடைய காய்கறித் தோட்டமே
பொழுது போக்கு. இது அவருக்கு வறுமையிலும் அன்பாக இருந்த அவரின் பெற்றோர்களை ஞாபகப் படுத்தியது. டேய் " வேதம்" வாடா சாப்பிட என்று அவரையும் பக்கத்தில் வைத்து ஏதோ கஞ்சியோ கூழோ அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் தன் தோட்டத்தில் நின்ற கத்தரிக்காய் செடியைப் பார்த்தார். நன்றாகக் காய்த்த அந்த செடி ஏனோ இப்போ அதில் இரண்டே இரண்டு காய்கள்.
அறுக்கப்போனவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இருக்கட்டும் என்று விட்டு விட்டார். அது அவருக்கு அவரோடு மிஞ்சி நிற்கும் இரண்டு நண்பர்களை ஞாபகப் படுத்தியது போலும். ஒருவருடைய பெயர் இறைவன். இவர் அவருக்கு ஞாபகம் வந்த நாள் முதல் வள்ளுவன் ஈரடியை ஞாபகப் படுத்தி நின்றார். மற்றவருடைய பெயர் மனம். இவரும் அவரை விட்டு விலகவே இல்லை. இவர்கள் இருவரும் அவரைத் தனியே விட்டு சென்றிருந்தால் தன் நிலை இப்போ எப்படி இருக்கும் என்று நினைத்தார் போலும். தான் நின்று கொண்டு இருந்த இடத்திலேயே மண்டி இட்டு அன்னையே! என்று அந்த கத்தரிப் பூவை கையால் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். கண்களை கசக்கியபடியே எழுந்து போய் கட்டிலில் படுத்தவர் கண் அயர்ந்துவிட்டார். மதியம் உணவுடன் வந்த அன்னம் வெளியில் நின்றபடியே ஜயா என்று அவரை அழைத்தாள். பதில் இல்லை. எட்டிப் பார்த்தாள். அவர் கட்டிலில் படுத்திருப்பது அவளுக்கு தெரிந்தது. அருகே சென்று பார்த்தாள். அவரின் முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை தெரிந்தது. தான் கட்டி இருந்த சேலைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி அயல் வீட்டுக்காரரை கூப்பிட்டு
சொல்லி விட்டு அன்னம் கிளம்பிவிட்டாள். அவளுக்கு இன்னும் சில வீடுகளுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டிய வேலை இருந்தது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
அழகிய பாப்பாத்தி,
அதன் இறகில் பல வர்ணம்,
பறக்கிறது பார் இறகடித்து, பார்ப்போர் எல்லாம் மனம் மயங்க.
அழகிய கயல்விழியாள், அவள் உடையில் பல வர்ணம்,
ஆடுகிறாள பார் ஆடை அசைத்து,
ஆடவர் எல்லாம் மதி மயங்க.