இ க ஜெயபாலன்- கருத்துகள்

பழனி ராஜன் அவர்கட்கு வணக்கம். எனது நல்லவன் ஆனேன் என்ற கவிதைக்கு நீங்கள் வரைந்த பாராட்டு (
என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை) பாக்கள் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எனது நன்றிகள் உங்களுக்கு.

கிராமம் சமுதாயத்தின் இதயம். அது வேலை செய்தால் தான் நகர (ரக)த்தில் உள்ளவர்களின் நாடி நரம்புகளில் ரத்தம் ( உணவு) ஓடும் ( கிடைக்கும்). இந்த உண்மையை உணர்ந்தால் எல்லோரும் வாழலாம்.
உங்கள் கவிதையில் காணும் ஏக்கம் இந்த உண்மையை உணர்த்தி நிற்கிறது.

ஐயா உங்கள் கவிதையை படிக்கும் போது...
" உலகம் இதில் அடங்கிது,
உண்மையும் பொய்யும்...என்ற
படப் பாடல் வரிகளே என் மனதில் ஞாபகம்
வந்தது.
உங்கள் கவிதை உண்மையை அழகாக சொல்லி நிற்கிறது. அதுவும் ஒப்பாரி பலே பலே.

அழகிய கவிதை
மனதை இழுத்து
செல்லும் கவிதை
மறக்க முடியாத எளிமையான கவிதை.

கவிதை ஒன்று படித்ததில் அதுவும் அர்த்தமுள்ள ஒரு கவிதை அழகிய தமிழில் படித்ததில் என் மனம் மிகவும் மகிழ்ச்சி பெற்றது. எழுதியதற்கு நன்றி. அதை மற்றவர்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

கவிதையை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வு உயர் உயர் பறப்பது போல மிகவும் அருமையாக இருந்தது. நன்றி ஐயா உங்களுக்கு.

வணக்கம் சாரலன்.
உங்கள் கவிதை
" விழி நீலத்தில்..."
படித்தேன்.
கடல் ஓரத்தில் நின்று
அவைகளை பார்த்து நின்றால் எப்படி அலைகள் ஒன்றுடன் ஒன்று கலப்பது போல் இருந்தது கவிதை நடை. அருமை.

அருமை. மேலும் கவிதை காவி வரும் சமுக அறிவுரைகள் பலே!
நன்றி.

ஜீவன் கவிதை ஒன்று படித்தது போல் உணர்ந்தேன்.
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
இது இறைவனின்
திட்டம், தண்டனை.....

அழகிய ஒரு கவிதை தமிழுக்கும் மனதுக்கும் சுவை சேர்க்க.

வணக்கம் ஐயா.
உங்களுக்கும்
எனது அன்பான புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

உண்மை.
கலை என்றும்
உள்ளூரில்
விலை போகாது..
கலை மட்டுமா?
தேங்காய் எண்ணை,
முருங்கை கீரை,
பிஞ்சு பலாக்காய்..
என்று
வெள்ளையர்கள் சீனர்கள்.....

மனிதன் படைத்தான் மதத்தை, புராணங்கள் அதற்கு சாயம் பூசி மெருகு ஏற்ற, இரண்டும் சேர்ந்து மனிதர்களை சாதிகளால் பிரித்து வைக்க, பாவம் காதல் நடுவில் அகப்பட்டு கத்திக் குத்தும் அரிவாள் வெட்டும் வேண்டியது தான் மிச்சம்.

"அழகிய கருத்து
இளமையின் கருத்து
இது உலகுக்கு சொந்தம்."

அந்தக் கருத்துக்கு
தமிழ் பட்டாடை
அன்றி
வேறு பட்டாடை
போட
முடியாது.

நன்றி.

வணக்கம்.
தமிழரை அழித்தார்...
உங்களைப்போல்..
என்னைப்போல்....
உள்ளக்குமுறலை..
கவிதையில்
வடித்துள்ளீர்கள்.
நன்றி.
அறிவும் ஆற்றலும்
படைத்தவன் தமிழன்
அதை திட்டம் போட்டு ஆட்சியில் உள்ளவர்கள்..
தமிழரல்லாத வர்கள்...வெற்றிகரமாக அழிக்கிறார்கள்.

கவிதையின் ஆரம்பமே கற்பனையின் உச்சம். அதற்கப்பால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படித்து ரசிப்பதற்கு.

அழகுக் கவிதை ஒன்று,
அழகுச் சொற்களை
அள்ளிச் சேர்த்து,
அழியாக் காதலை
அளித்ததற்கு,
அவையில்,
அறைந்திடுவேன்
உங்கள் பெயர்

கருத்து அற்புதம்.
நான் கண்ட மனிதர்கள் சிலர் இந்தக் கவிதைக்குள் அகப்பட்டார்.

எனக்கு பாடத் தெரியாது. நான் பாடினால் யாரும் பக்கத்தில் இருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் கவிதையை முணு முணுத்து பார்த்தேன். அது தமிழ் படியாத அவளையும் அருகே அமர வைத்தது.
பாடத் தெரிந்தவன் முணு முணுத்தால் அக்கம் பக்கம் எல்லாம் கூடிவிடும். அவ்வளவு நன்றாக இருந்தது. எழுதிய மைக்கு நன்றி.

வணக்கம்.உங்கள் சிறுகதை படித்து மகிழ்ந்தேன். அத்துடன் எனது கற்பனையையும் வளர்த்துக் கொண்டேன்.
இங்கு ஒரு விடயம் கூற விரும்புகிறேன். இதை ஒத்த பல உண்மைச் சம்பவங்கள் நான் படித்ததுண்டு.

கருத்து பலே!
இதுவே பலரின் அநுபவம்.
சிந்தனை
சீராக அமைந்து சிறப்பாகவே
கவி அமைந்துள்ளது.
எனக்கு பிடித்துள்ளது.


இ க ஜெயபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே