காதல் மயக்கம்

"பெண் கண்டேன்! ஒரு பெண் கண்டேன்!
பெண் என்று நின்ற புது நிலவை கண்டேன்.

கண் கண்டேன்! அவள் கண் கண்டேன்!
கண்ணென பூத்த, இரு மலரைக் கண்டேன்.

கண்டதும் உதறியது மனசு,
உறங்கையிலே உளறியது வயசு,
இந்த அனுபவம் எனக்கு புதுசு.

ஏதோ மயக்கம் கண்ணை மறைக்க,
'காதல்' என்று திடீரென உறைக்க,
வந்தேன் ஓடி, உன்னை வாரி அணைக்க.

அழகே உன் உருவம் என் விழியில் அசைய,
'நெருங்கி பழகேன்' என ஆசை
நெஞ்சை பிசைய,

உன் பட்டு மேனி அழகைக் கண்டு,
என் மொட்டு மனம் மலர்ந்தது இன்று.

பாற்க்கடலில் குளித்து வந்த பொற்சிலையே!
யாரிடம் உரைப்பேன்
என் மனம் என் வசம் இல்லையே.

காதலா என ஓடி வந்து தழுவு,
இன்பம் எனும் தேன் கொண்டு
துடிக்கும் என் ஆவியை கழுவு."

எழுதியவர் : (21-Dec-21, 10:37 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 253

மேலே