மித்து - சத்து

மித்து, சத்து என்னடா இந்த உச்சி வெயிலில மட்டை

விளையாட்டு.


நீங்க மைதானத்தில் விளையாடறது எனக்குத் தெரியுது. ஆனா


நான் உங்களைக் கூப்படறது உங்க காதில விழல.


வெள்ளைக்காரன் நாடு குளிரான நாடா இருந்த காலத்தில்


வெயில் காயக் கண்டுபிடிச்ச விளையாட்டு. ஆண்டு முழுவதும்


சூரியனின் வெப்பம் இருக்கும் நம்ம நாட்டில எதுக்குடா இந்த

மட்டை விளையாட்டு. மட்டை விளையாட்டு வீரர்களுக்குச்

சம்பளமாப் பணத்தை அள்ளிக் கொட்டறாங்க. மட்டை

விளையாட்டு அமைபபு அறக்கட்டளையாகப் பதிவு


செய்யப்பட்டதாம். அந்த அமைப்புக்கு கோடிக்கணக்கில்

வருமானம். அதனால வருமான வரி கிடையாதாம். ஆனா

பணிநிறைவு பெற்றவர்களுக்குக் கிடைக்கும்

ஓய்வூதியதுக்கு வருமான வரி கட்டணும். எங்க அப்பாவுக்கு

வயசு எழுபது. வருசம் ஒரு இலட்சம் வருமான வரி

கட்டறாரு.

@@@@@@@@@@

பக்கத்து வீட்டுக்கு வந்த உறவினர் பாட்டி:

அடியே மல்லிகா என்னடி தனக்குத் தானே பேசிட்டு

இருக்கிற?

@@@@@@@

என் பையன்களைப் பத்தித் தான் பாட்டி. உச்சி வெயில்ல

மைதானத்தில் மட்டை விளையாட்டு விளையாடிட்டு

இருக்கிறாங்க.

@@@@

என்னமோ 'த்து, த்து'னு அவுங்களைத் தான் நீ கூப்பிட்டயா?

@@@@@@@@@

அவுங்க பேரு 'த்து, த்து' இல்லங்க பாட்டி. அவுங்க இரண்டு

பேரும் இரட்டைப் பையன்கள். மூத்தவன் பேரு 'மித்து'. அடுத்த

பையன் பேரு 'சத்து'.

@@@@

மித்து இந்திப் பேரு மாதிரி இருக்குதே. எப்பிடிடீ இந்தப் பேரைக்

கண்டுபிடிச்சீங்க?

@@@@@@@@

ஒரு துண்டு விளம்பரத்தில் 'மித்து'ங்கற பேரைப் பார்த்தோம்.

'மித்து'க்குப் பொருத்தம் 'சத்து'. அதுவும் இந்திப் பேருன்னு

சொன்னாத்தான் நம்ம தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து

"மித்து, சத்து ஸ்வீட் நேம்ஸ்'னு பாராட்டுவாங்க.

@@@@@@@

ஆமாண்டி மல்லிகா மித்து, சத்து சுவ்வீட்டு நேமுசடி.

எழுதியவர் : மலர் (15-Jun-25, 10:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 12

மேலே