அப்பா எதுக்கு அடிச்சார்

உங்க அப்பா உன்னை எதுக்குடா


அடிச்சாரு?

@@@@@

அவருக்குத் தெரியாம அவரு செய்யற

வேலையை நான் செய்தேன்.

அதுக்குத்தான் என்னைப் போட்டு

கும்மி விட்டுட்டாருடா.


@@@@@

என்ன வேலை அவரு செய்யறாரு.


@@@@@@@

திருடற வேலை.

அவர் திருடி வச்சிருந்த ஆயிரம்

ரூபாயில் அவருக்குத் தெரியாமல்

கொஞ்சம் எடுத்து பிரியாணி வாங்கித்

தின்னுட்டேன்.

@@@@@

" ஏண்டா நானே தினம்

இரண்டு வேளை பிரியாணி வாங்கிட்டு

வந்து தர்றேன். நீ பிரியாணி வெறில

எங்கிட்டயே கை வச்சுட்டயா. எந்


தொழிலை நீ கத்துக்க இன்னும் மூணு

வருசம் இருக்குதடா. எட்டாவது

வகுப்பில் நீ தேர்ச்சி பெற்றால் உனக்குப்

பயிற்சி அளிப்பேன். அதுக்கு முன்னாடி

இன்னொரு தடவை என் வேலையை நீ

செஞ்ச உன் தோலை உரிச்சு உப்புக்

கண்டம் போட்டுருவேன்"ன்னு


சொல்லிட்டே என்னைக் கும்மி

கூழாக்கிட்டாருடா

எழுதியவர் : மலர் (21-Dec-25, 10:07 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே