செயற்கை நுண்ணறிவுகளில்

#செயற்கை நுண்ணறிவுகளில்..!
#Artificial Intelligence

கூவிக்கூவி விற்பனை செய்கிறது
தொண்டை நோகாமல்
பதிவுக்குரல்..!

நாற்பது வரிகளில் காதல்கடிதம்
எழுதியளிக்கிறது
நான்கு சொற்களைப் பெற்றுக் கொண்டு
மென்பொருள்…

வணிகக் கடிதங்களையும்
வகை வகையாய்
சமைத்துக் கொடுத்து விடுகிறது
வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றி
மென்பொருள்..!

எழுப்பி விடவும்
இனிதாய்ப் பேசவும்
பிடித்தப் பாடல்களை
இசைக்கவும்
கோபித்துக் கொள்ளாமல்
இயந்திரமாய் ஒரு
சினேகிதம்
அலெக்ஸா..!

நாலாறு மனிதர்களின் பணியினை
நாசுக்காய் செய்து முடிக்கிறது
அலுப்புத் தட்டாமல்
ஜே சி பி இயந்திரம்..!

இரத்தப் பரிசோதனை
செய்கிறது
நோயினைக் கண்டு பிடிக்கிறது
மருந்து சீட்டும் எழுதித் தருகிறது
மருத்துவ ரோபோக்கள்..!

பணக்கார சிகிச்சையைப்
பக்குவமாய் செய்கிறது
கட்டளைகள் திணிக்கப் பட்ட இயந்திரங்கள்
மருத்துவ மனைகளில்..!

இப்படியெல்லாம் வளர்ந்து கிடக்கும் செயற்கை நுண்ணறிவு களால்
குறைவது.. குறையப் போவது பணிச் சுமை மட்டுமன்று..
வேலை வாய்ப்பும்தான்..

வாருங்கள் விவசாயம்
பார்க்கலாம்..
அச்சச்சோ அங்கேயும் இயந்திரங்களா..?

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (20-Dec-25, 9:58 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 13

மேலே