கிறுக்கன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிறுக்கன் |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 09-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 435 |
புள்ளி | : 283 |
தகவல் தொழிலநுட்ப பொறியாளன்
ஒருநாள் ஓரிரவில்
ஓராயிரம் கதை சொல்லி விட்டு
மறுநாள் மலர்ந்ததும்
மௌனியாய் மாறி விட்டாள்
திருவாய் திறக்க வேண்டி
தினம் செய்யும் தந்திரத்தை
கருவாய் எடுத்து வந்து
கவி வரைந்தால் கலைந்துடுமோ
மௌனம் !!
இரவின் மடிதேடும்
பகலின் உடற்சோர்வும்
உயர்வின் வழிதேடும்
இரவின் மனச்சோர்வும்
அரித்து எடுத்து செல்கிறது
அகவையை தினந்தோறும்!
இரவின் மடிதேடும்
பகலின் உடற்சோர்வும்
உயர்வின் வழிதேடும்
இரவின் மனச்சோர்வும்
அரித்து எடுத்து செல்கிறதோ
அகவையை தினந்தோறும்?
குப்பையாய் கெடு நினைவுகள்
குவிந்து கிடந்தது சிந்தையிலே - நேற்று
குளிரிரவில் முழுநிலவின்
குரலிசையின் குதூகலத்தில் - எந்தன்
குறைநீங்கி குணவானானேன்
மாரன் அம்பு
மார்பினில் வந்து
நூறு நூறாய்
நுழைந்து இருக்குமோ?
கால்கள் ரெண்டும்
தரையில் இல்லை
காதல் நோயில்
துவண்டு விட்டேன்!
என்றும் இல்லாத
ஏதோ ஓர் தவிப்பு
இன்று ஏனோ என்
இதய துடிப்புக்குள்
பிணிக்கு மருந்து
பிறந்ததுதான் இருப்பாள்
நேரில் காணும் நேரம்
நெருங்கி விட்டதோ ?
ஆதியிலே வார்த்தை இருந்தது
அது அவள் இதயத்திலே இருந்தது
அது என் வாழ்வின் ஜீவனாய் இருந்தது
வார்த்தையே வாழ்க்கை ஆனது
ஓராயிரம் வண்ணங்களால்
ஒளிர்விடும் வானமும்கூட
ஓரளவுக்கு அழகு குறைவுதான்
ஒப்பனையில்லாத இவள் முகத்துடன்
ஒப்பிட்டு பார்க்கும் பொழுதில்
உன்னோடு பழகிய
உன்னத நினைவுகளை
ஒரு மாத காலமாய்
உறிஞ்சி வெளியேற்றி
கவிழ்த்திய குடமாய்
வெற்றிடம் செய்தபின்
குழுவாய் எடுத்துகொண்ட
அழகிய புகைப்படம் ஒன்றில்
ஏதோ ஓரு மூலையில்
ஏகாந்த முகம் கண்டபின்
ஒரு நொடி பொழிதில்
ஓரு கோடி ஜாலமாய்
மூளை முகட்டின்
மூலை முடுக்கெல்லாம்
முழுதாய் நிரம்பிற்று
மொத்த நினைவுகளும்
ஐந்திணை நிலத்திலும்
அறுசுவையும் உண்டு
அகம் மகிழ இருந்தவனுக்கு
உறைபனி தேசமிதில்
உறுதுணை எவருமின்றி
உறக்கமும் எதிரியாயிற்று
நடுநிசி இரவில்
நடுங்கும் குளிரில்
நங்கையின் நினைவாயிருக்கையில்
துயர் மறக்கும் மருந்தென
துளி வார்த்தை பேசிடு
தூங்கும் வரம் தந்திடு