தூண்டல் நினைவுகள்

உன்னோடு பழகிய
உன்னத நினைவுகளை

ஒரு மாத காலமாய்
உறிஞ்சி வெளியேற்றி

கவிழ்த்திய குடமாய்
வெற்றிடம் செய்தபின்

குழுவாய் எடுத்துகொண்ட
அழகிய புகைப்படம் ஒன்றில்

ஏதோ ஓரு மூலையில்
ஏகாந்த முகம் கண்டபின்

ஒரு நொடி பொழிதில்
ஓரு கோடி ஜாலமாய்

மூளை முகட்டின்
மூலை முடுக்கெல்லாம்

முழுதாய் நிரம்பிற்று
மொத்த நினைவுகளும்

எழுதியவர் : (25-Jul-18, 1:06 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : thoondal ninaivukal
பார்வை : 50

மேலே