என்னைக் கைது செய்யுங்க

"என்னைக் கைது செய்யுங்க" ன்னு

சொல்லிட்டு


கத்திட்டு போறாரே அவர் யாருங்க ஐயா.

@@@@@@

அவர் ஒரு சிறிய கட்சியின் தலைவர்.

மாவட்டம் தோறும் அவர் கட்சியின்

நிர்வாகிகள்

அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்

மட்டுமே அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

@@@@@

அது சரி. இப்ப ஏன் கத்திட்டு ஓடறாரு.

@@@@@

அவர் போன மாதம் நடந்து முடிந்த

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத்

தோல்வி அடைந்தார். ஆறுதலான விசயம்

என்னன்னா அவருக்கு மட்டும் வைப்புத்

தொகை (டெபாசிட்) கிடைத்தது. 233

தொகுதிகளிலும் அவர் கட்சி வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

நோட்டாவுக்கும் கீழே.

@@@@@@

அப்பறம் என்ன ஆச்சுங்க.

@@@@@@

அவர் பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில்

தோற்றுப் போய் மன உளைச்சலுக்கு

ஆளாகி மனநோயாளியின் நிலைக்குத்

தள்ளப்பட்டார்.

அவரது கட்சி நிர்வாகிகள்

அனைவரும் குற்றப் பின்ன்ணி

உள்ளவர்கள். தங்கள் தோல்வி மற்றும்

தங்கள் தலைவர் தனிலிங்கம் அவர்களின்

தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல்

மாநிலம் எங்கும் ரவுடிகளைச் சேர்த்துக்

கொண்டு வன்முறையில் இறங்கி தனியார்

சொத்துக்களையும் பொதுச்

சொத்துக்களையும் சேதப்படுத்தினார்கள்.

அந்த நிர்வாகிகள் அனைவரையும்

காவல்துறை கைது செய்து குண்டர்

கட்டத்தின்படி சிறையில் அடைத்தனர். இது

தலைவர் தனிலிங்கத்தை முழு


மனநோயாளி ஆக்கியது.

@@@@@

அப்பறம்?

@@@@@@

அப்பறம் என்னவா? "என்னைக் கைது

செய்யுங்க. என் தொண்டர்களை ஒன்றும்

செய்யாதீர்கள்" என்று கத்திட்டே இரவு

பகலா சுற்றிட்டுத் திரியறாரு, ஓடிட்டெ

கத்தறாரு. பத்து நாட்கள் பொறுத்துப்

பார்த்த அவர் குடும்பத்தினர் சிகிச்சைக்கு

அவரை கீழ்பாக்கம் அனுப்பி வைக்க

முடிவு செய்துள்ளனர்.

@@@@@@@

என்னத்த சொல்ல? பதவி ஆசைபடுத்தும்

பாடு.

எழுதியவர் : 🌹 மலர் (8-Oct-25, 10:27 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே