அன்பு நண்பனுக்கு ஆசையில் ஒரு கடிதம்
அன்பு நண்பனுக்கு ஆசையில் ஒரு கடிதம்
திருமூர்த்தியும் ஆனந்தும் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாக படித்து மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இருவரும் ஒவ்வொருவர் வீட்டில் உள்ளோரை அறிந்து அவர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டவர்கள். அவர்களுடைய அம்மாக்கள் இருவரையும் தங்கள் குழந்தைகளாகவே நடத்தினர். ஒருவர் மற்றவர் வீட்டிற்கு சென்றால் அவர்களது சமையல் அறை வரை செல்லும் அளவிற்கு சுதந்திரம் பெற்றவர்கள் அம்மாக்களிடம் தங்களுக்கு பசிக்கிறது என்றும் வேண்டியவற்றை கேட்டு அம்மாக்களிடம் பெற்று சாப்பிட்டு விட்டு தங்கள் வீட்டிற்கு செல்வர். திருமூர்த்திக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திட அவன் மனைவி மக்கள் அம்மாவுடன் அங்கு சென்றான். இவ்வாறு பல ஆண்டுகள் இருவரும் தங்களது அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டு ஒருவர் இல்லையேல் இன்னொருவர் இல்லை என்ற அளவிற்கு தங்கள் நட்பை உறவைபோல் வளர்த்து வாழ்ந்தனர். திருமூர்த்தி வேலையில் சேர்ந்து சில ஆண்டுகள் கடந்ததும் திருமணம் செய்து கொண்டு கோவையில் ஒரு அலுவலகத்தில் பணிசெய்து வந்தான். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆனந்தின் வீட்டிற்கு அவன் வாரக்கடைசியில் வந்து தங்கிவிட்டு செல்வான். அந்த ஒரு நாள் இரவில் இருவரும் உறங்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனந்த் திருமணம் செய்ய விரும்பாமல் தாயோடு வாழ்ந்து வந்தான். திருமூர்த்திக்கு திருமணம் நடந்து சில ஆண்டுகள் சென்ற பின் அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.அவன் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியோடு அதை சீராட்டி தாலாட்டி வளர்த்து வந்தனர்.குழந்தை பிறந்த வேளை அதிஷ்டமும் அதனுடன் வந்தது.பிறந்து ஒரு வயது குழந்தைக்கு நிறைவு பெற்றதும் திருமூர்த்தி வேலை செய்த அலுவலகத்தில் அவன் வேலையை பாராட்டி அவனுக்கு பதவி உயர்வளித்து அவனை வெளி நாட்டிற்கு செல்ல வேண்டும் என உத்தரவையும் கொடுத்திட அவன் குடும்பத்தோடு வெளிநாடு செல்ல முடிவெடுத்து ஆனந்திடம் அதைப் பற்றி கூறி விட்டு அவன் அம்மாவிடமும் ஆசி பெற்று கோவைக்கு வந்து வெளிநாட்டிற்குப் புறப்பட்டான் திரிமூர்த்தி வெளிநாடு சென்றபிறகு ஆனந்தும் அவன் அம்மாவும் அவன் சென்ற பிறகு அவனைப் பற்றிப் பேசி பல சம்பவங்களை நினைவு படுத்தி கொண்டு தங்களது மனம் படும் வேதனையைச் சொல்லி கொண்டனர். அன்புள்ள மூர்த்தி , நலம். நீயும் அவ்வண்ணமே இருப்பாய் என எண்ணுகிறேன். பல வருட இடைவெளிக்கு பிறகு உனக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்?புதிய வேலையும், வெளிநாடும் அங்குள்ள வாழ்க்கையும் சுகமாக இருக்கிறதா?அம்முக்குட்டியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாயிற்றா?மூர்த்தி என் மனதில் ஏனோ உன்னோடு நிறைய பேசவேண்டும் என்று தோன்றுகிறது. அன்று நாம் இருந்த அறையில் இரவெல்லாம் நாம் பேசிய பழங்கதைகளையும்,மனக்குமுறல்களையும் அரசியலையும்,விவாதங்களையும் ஒவ்வொரு தூண்களும் கேட்டிருக்கும். இன்றோ எனது இந்த அறையின் சுவர்கள் என்னை பரிதாபமாக பார்ப்பது போல் ஒரு உணர்வு. நீ சென்ற பிறகு விழா கோலம் இழந்து மௌனித்த மாயாணமாகிவிட்டது எனது வீடும் மனதும்.வாழ்க்கையின் சுழற்சியில் எல்லோரும் எங்கோ அடித்து செல்லப்பட்டோம்.உனக்கு நினைவிருக்கிறதா மூர்த்தி.பொறாமை,கோபம் என்று அறியாது எதையும் எதிர்பார்க்காது ஊரில் சுதந்திரமாக சுற்றி திரிந்தோமே நாம். கோயில் திருவிழாக்கள்,அதில் கூடிய சொந்தங்கள் ஒன்றாய் இருந்து லேசாய் சண்டையிட்டு இருப்பது உண்டு,இரவெல்லாம் கதை பேசி, பாசமேனனும் சொர்கத்தில் , பணம் காசு அறியாது மகிழ்ச்சியோடு மட்டுமே இருந்தோமே?மறக்கமுடியாததும் அழிக்க முடியாததும் அந்த நினைவுகள் மட்டும் தான்.ஆனால் இந்த 10 ஆண்டுகள் சென்னை வாழ்வு எனக்கு சலிப்பை தரவில்லை.எவ்வளவு அழகான நகரம் இது. ஏதுமின்றி வந்தவனுக்கு எல்லாம் தந்து வாழவைக்கிறது.இந்த நகரம் உறங்குவதே இல்லை.எப்போதும் வாகன ஒலிகள் மக்களின் கீச்சு சப்தங்கள் ஆனாலும் அதில் உள்ள மெல்லிய மகிழ்ச்சியை என்னால் கண்டுகொள்ள முடிகிறது. இப்போதெல்லாம் மனம் சரி இல்லாத பொழுது நான் செல்லும் இடம் கடல்கரை .பல மணி நேரம் வெறுமனே அந்த கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். என்னைப் போலவே இந்த பெருங்கடலும் எப்போதும் தனிமையாகவே இருக்கிறதே என்பதை எண்ணி ஒரு பைத்தியகாரனை போல் சிரித்துக்கொண்டிருப்பேன். முப்பது வருட வாழ்க்கை எனக்கு பல விஷயங்களைக் கற்று கொடுத்துள்ளது. மனிதர்கள். எப்படி புகழ் என்னும் போதை உச்சிக்கு ஏறும் போது இவர்கள் யாராக இருந்தார்கள் மற்றவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். அற்ப புகழுக்காக எந்த நிலைக்கும் செல்கிறார்கள்.ஏன் இந்த உலகம் இப்படி மாறிப்போனது.அவர்கள் காட்டிய பாசம் எங்கே, அள்ள அள்ள குறையாத அன்பின் பிறப்பிடங்கள் என்று எண்ணியவர்கள் ஏன் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள் ?எது அவர்களை மாற்றியது?உண்மையில் வேலை பலுதானா இல்லை ஆசைகளா இல்லை உறவின் மீது ஏற்பட்ட சலிப்பா?வாழ்க்கையின் ஒரு பகுதியில் திரும்பி பார்க்கின்ற போது யாரும் இல்லாத வெற்றிடம் இருப்பதாய் மனதுக்குள் ஒரு சலசலப்பு.அவர்கள் போகட்டும்.நான் அவர்களோடு தர்க்கம் செய்ய மாட்டேன்.இழந்த அன்பை அவர்களுக்கு நினைவூட்டமாட்டேன்.என்னுடைய பிரிவு என்பது இலகுவானது.அது கடலின் ஆழத்தில் உள்ளதை போல அமைதியானது.அவர்கள் போகட்டும் மூர்த்தி.ஆனால் எல்லாவற்றையும் விட என் இதயத்தை கிழித் தெடுத்தது என் அக்காவினுடைய மாற்றம் தான்.எப்போதும் நான் அவளின் பாசத்திற்கு ஏங்குபவனாகதான் இருக்கிறேன்.பெற்ற தாயை பிள்ளை மறுப்பது தகுமோ?இந்த தனிமை வித்தியாசமானது இருப்பதை இல்லாததைப் போல் காட்டுகிறது இல்லாத ஒன்றை இருப்பதாய் நினைக்க வைக்கிறது.ஆகட்டும்,என்ன இழந்தோம் என்று பார்ப்பதை விட என்ன மீதம் இருக்கிறது என்று சிந்திப்பது தானே புத்திசாலித்தனம்.இனனும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதே! என் பிரச்சனை இங்குதான் மூர்த்தி யார் மனதையும் காயப்படுத்தி விட கூடாதென்பதற்காக என்னையே நான் வருத்திக்கொள்கிறேன்.அம்மாவின் மறைவுக்கு பின் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த அவளது அன்பு.பல்லாயிரம் வார்த்தைகளைப் பரிமாரிகொண்டியிருப்போமே.என் தனிமை என்னும் கோப்பையில் அவள் அன்பென்னும் நீர் பிழிந்து ஊற்றி நிறப்பினாள். அந்த நாட்கள் தான் எவ்வளவு அழகானவை.அந்த கனிவான குரல் கேட்காது விடியல் கூட இல்லை.இருட்டிற்கு ஒளி கொடுக்க தோன்றிய சந்திரன் பாதியில் மறைந்துபோவதில் என்ன அர்த்தம் இருக்கிறது சகா.அந்த கொஞ்ச நாட்கள் என்னுடைய வெள்ளை நாட்கள் என்பேன்.அந்த தூய்மையான அன்பை இழந்ததற்காக இன்னமும் நான் வருந்துகிறேன். அந்த கனிவான சொற்களையும், பேரன்பினையும் எண்ணி எண்ணி இன்று அது போல் இல்லையே என்று நிதம் ஏங்கி அழத மனம் ஒன்று எனக்கில்லை மூர்த்தி.ஆனாலும் அந்த சிறிது கால அன்பிற்காக நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
இனிவான குரல் கேட்காது விடியல் கூட இல்லை.இருட்டிற்கு ஒளி கொடுக்கத் தோன்றிய சந்திரன் பாதியில் மறைந்துபோவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.அந்த கொஞ்ச நாட்கள் என்னுடைய தூய நாட்கள் என்பேன்.அந்த தூய்மையான அன்பை இழந்ததற்காக இன்னமும் நான் வருந்துகிறேன். அந்த கனிவான சொற்களையும், பேரன்பினையும் உள்ளத்தில் எண்ணி எண்ணி இன்று அது போல்அவள் இல்லையே என்று நித்தமும் ஏங்கி அழும் மனம் எனக்கில்லை மூர்த்தி.ஆனாலும் அந்த சிறிது கால அன்பிற்காக நான் மிக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இப்போது நான் வேறு. யாருடைய அன்பிற்காகவும தவிப்பதில்லை ஏங்குவதுமில்லை.உன் அன்பை நினைத்து அந்த நினைவிலேயே நான் வாழ்கிறேன். நான் அனுப்புவது கடிதம் அல்ல என் உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல என் எண்ணம் என்ற வாலியின் பாடல் வரிகளுடன் இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

