இசாத்திடா

முப்பது வீடுகள் உள்ள சிற்றூர்.


எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி


உள்ளது. பகல் முழுவதும் உழைத்து


ஓய்ந்தவர்களுக்கு


மாலை நேரத்தில் தொலைக்காட்சியே அவர்கள்


பொழுது போக்கு. அந்த ஊரில் இறப்புக்காகக்


காத்துக் கிடக்கும் முதியோர் முதல் கருப்பையில


இருக்கும் நாளைய பச்சிளம் குழந்தைகள் வரை


அனைவருக்கும் இந்திப் பெயர்கள். தமிழ்ப்


பெய்ருள்ள ஒருவர்கூட அந்தச் சிற்றூரில்


இல்லை.

அந்த ஊரில் உள்ள ஒரு பாட்டியின் பெயர்


'சிம்ரன்'. அவர் மகளுக்கு முதல் மகப்பேறில்


அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.


@@@@@@@@@


பாட்டி, உங்க பேத்தி பிறந்து நாலு நாள் ஆகுது.


இன்னும் அவளுக்கு புதுமையான இந்திப் பேரை


வைக்கல. நம்ம ஊர் மக்கள் எல்லாம் நாம

அவளுக்கு வைக்கப் போற பேரைத் தெரிஞ்சுக்க


அதிக ஆர்வமா இருக்கிறாங்க.


#@##@@@@@


ஆமாண்டா பேரா இசுகிசுஅசுரா (இஷ்கிஷ்

அஷ்ரா). நான் நாலு நாளாச் செய்தித்தாள்களில்


வெளியாகிற விளம்பரங்களை எல்லாம் பார்த்து


ஒரு புதுமையான இந்திப் பேரைக் கணடு


பிடிச்சேன்.

@@@@@


அந்தப் பேரைச் சொல்லுங்க பாட்டி.


,@@@@@@@@


சொல்லறண்டா இசுகி. 'இசாத்தி'. இசாத்தி-டா



பேரா. நம்மூர் வழக்கப்படி ஒரு குழந்தைக்குப்



பேரு வச்சா , அதை ஊர் நடுவே உள்ள மேடையில்



குழந்தையின் தகப்பன் ஏறி நின்று முப்பது


வீட்டாருக்கும் கேட்கும்படி குழ்நதையின் பெயரை


உரக்கக் கூறிச் சொல்ல வேண்டும். அத்துடன்


அன்று மாலை ஊர் மாலை ஊர் மக்கள்


அனைவருக்கும் கறிவிருந்து என்பதையும்


அறிவித்துவிட வேண்டும்.


@@@@@@@@


சரிங்க பாட்டிம்மா. நான் மேடைக்கு இப்பவே


போறேன்.

எழுதியவர் : மலர் (4-Oct-25, 11:27 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 5

சிறந்த கவிதைகள்

மேலே