வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
இடம் | : sydney |
பிறந்த தேதி | : 17-Mar-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 75934 |
புள்ளி | : 7033 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
புற அழகில் மயங்கி ஆண்
பெண் ஒருவர்மீது ஒருவர்
கொள்ளும் காதல் புறக் காதல்
அது காமத்தால் எழுவது அகக்
காதல் என்பது வேறு அது
கண்ணுக்கு புலனாவதில்லை மனமும்
மனமும் மட்டுமே பேசிக் கொள்வது
உடலுக்கு அழிவு அகக் காதல்
அழிவதே இல்லை என்றும் அது
அவள் மனோஹரப் பார்வையாம் கடலில்
அமிழ்ந்து விட்டேன் நான் அவள்தான்
என்னை இனி கரை சேர்க்கவேண்டும்
சீறி வெகுண்டு வந்த காளை
வெறியோடு அதை அடக்க எதிர்கொண்ட
காளை அவனை கொம்பால் தூக்கி
எறிய அப்புறம் வீழ்ந்த அவன்
சட்டன எழுந்து மீண்டும் காளையை
அடக்க முனைய இம்முறை காளையின்
கொம்பு அவன் வயிற்றைப் பதம்
பார்க்க மண்ணில் சாய்ந்தான் காளை
மீண்டும் எழுந்திட வில்லையே பாவி
பேரழகி அவள் அவள் பார்வை
அழகு ஏதும் இல்லா அவன்மீது
விழுந்திட அக்கணமே அவன் அழகன்
ஆகிவிட அவளையே பார்த்து மகிழ்ந்தான்
தன்னை அழகன் என்று எண்ண
வைத்தது அவன் மீது விழுந்த
அவள் பார்வை அப்படி
நான் ரசிக்கவும் வசிக்கவும் உன்னையே தேடுகிறேன்
என் இதயம் கவர்ந்தவளே
தாய் தந்தையரை தெய்வமாய்ப் போற்றி
எத்தனை உயர்நிலையில் இருந்திடினும்
தமக்கு வாழ்வில் நல்ல மணாளன்
கிடைத்திட அவர் உதவி நாடும்
இன்றைய சில கன்னிகளுக்கு எனது
இனிய தைத்த திங்கள் நல் வாழ்த்துக்கள்
தை நாளை பிறக்கும் இனிதே உங்களுக்கும்
வழி பிறக்கும் நல்ல இல்வாழ்வும் கிட்ட
சிறுமி யவள் சிங்கார சிரிப்பில்
சிற்பியின் தெய்வ சிற்பமாம் மாதா
அகிலான் டேஸ்வரி தெறி கின்றாள்
கள்ள நெஞ்சமில்லா அந்த குழந்தைப்
பருவம் நமக்கு இறைவனைக் காட்டவே
இறைவனே தந்த படைப்போ
இந்த பரந்த புவியில் எது
எந்தன் சொத்து என்று நினைத்து
சொந்தம் கொண்டாடு கின்றாய் சொல்
ஒன்றும் இல்லையே என்ற ஞானம்
பிறந்தால் உன்னுள் பேரொளி தெரியும்
அதுவே பேரானந்தம் அறிவாய்
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................