மகள்
மகள்
அன்பு பரிமாற்றத்தில்
அன்னையை மிஞ்சிய
அழகு தேவதை........
தொட்டால் சிணுங்கும்
தொட்டா சிணுங்கி-
நீ
ஏசுவதற்கு முன்பே
இயேசுவை சிலுவையில் அரையும்போது
உதிரும் குருதியாய்
உமது கண்களில்
கண்ணீர் பெருக்கு .......
உடை அணிவதில்
எளிமை
ஏழை தந்தையின் பொருளாதாரத்தை அறிந்து அல்ல
முள்ளாய் குத்தும்
உயர்விலை ஆடை
உமக்கு -ஒவ்வாது
நீ -செய்யும் குறும்புகள்
குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளத்தில்
என்றும் அழியாத
காலச்சுவடாய் .
அணிகலன் அணிவதில்
ஆர்வம் அதிகம் உமக்கு
அம்மா அணிந்த
அனைத்து நகையையும் அணிந்து அழகு பார்த்த பேராசைக் காரி .
பள்ளிக்குச் செல்ல பயந்து
நீ செய்யும் பாசாங்கு பல கார்காலமெனில் விடுமுறைக்காக
வர்ணபகவான் வழிபாடு
சில நாள் பளித்தது .....
பல நாள் பொய்த்தது ......
ஆறாம் வகுப்பில்
அனைத்து பாடத்திலும் தேர்ச்சி ஒரு பாடம் தவிர்த்து
கையொப்பமிடுகையில் காரணம் கேட்டேன்
தமிழ் எனக்கு வராது தாய்மொழியாம்
தமிழ் மொழியின்
செழுமையை நன்கு அறிந்த
தமிழ் ஆசான்- மகள் !
பாசத்தில் அனைவரிடமும் ஒட்டிக் கொள்ளும் அட்டைப்பூச்சி-நீ
அன்பிற்கு அடிமை -நீ .
உமது தாயுறவில் ஆணாதிக்கமாய்
அடுத்தடுத்து ஆண் வாரிசு .....
12 ஆண்டிற்கு
ஒரு முறை பூக்கும்
குறிஞ்சி மலராய்.....
குலம் தழைக்க வந்த -குலசாமி
உணவு உண்ணுகையில் மணிமேகலை கையில் உள்ள அட்சயப் பாத்திரம் கிடைத்தாலும்
ஆனந்தம் அடைவாய் அளவில்லா உணவை உட்கொண்டு
அன்னையிடம் அடி வாங்கினாலும்
வாங்காமல் விட மாட்டாய் நாலாவது தோசை .
தாயின் தலைவலி
தணிக்க வந்த
அருமருந்து -நீ
அவள் அருகே அமர்ந்து
பிஞ்சுக் கரங்களால்
தலைநீவி
தாய்க்கு தாயானவள்.
வஞ்சனை உள்ளமற்ற வரம் -நீ எமக்கு -மகளாய் ......தாயாய்......
இளையக்கவி

